தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  துவரம் பருப்பில் அடை செய்ய முடியும்; அடடா அட டா என உங்கள் நாவை உச்சுக்கொட்ட வைக்கும்! இதோ ரெசிபி!

துவரம் பருப்பில் அடை செய்ய முடியும்; அடடா அட டா என உங்கள் நாவை உச்சுக்கொட்ட வைக்கும்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil

Nov 09, 2024, 01:00 PM IST

google News
துவரம் பருப்பில் அடை செய்ய முடியும். அடடா அட டா என உங்கள் நாவை உச்சுக்கொட்ட வைக்கும் சுவையில் இந்த அடை அசத்தும். இந்த அடைக்கான ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
துவரம் பருப்பில் அடை செய்ய முடியும். அடடா அட டா என உங்கள் நாவை உச்சுக்கொட்ட வைக்கும் சுவையில் இந்த அடை அசத்தும். இந்த அடைக்கான ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

துவரம் பருப்பில் அடை செய்ய முடியும். அடடா அட டா என உங்கள் நாவை உச்சுக்கொட்ட வைக்கும் சுவையில் இந்த அடை அசத்தும். இந்த அடைக்கான ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அடை, அவியல் சிலருக்கு மிகவும் பிடித்த ஒரு உணவாகும். இந்த அடையை ஸ்னாக்ஸ், டிஃபன் என இரண்டுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். அடையை பொதுவான அரிசியுடன் கடலை பருப்பு அரைத்து செய்வார்கள். ஆனால் இப்போது பல வழிகளில் இந்த அடை தயாரிக்கப்படுகிறது. நவதானிய அடை கூட செய்கிறார்கள். பல்வேறு வகைகளில் தயாரிக்கப்படும் அடையில் இன்று துவரம் பருப்பு அடை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். மேலும் ஒரு தகவலாக பாசிபருப்பு, பாலக்கீரை அடை ரெசிபியும் கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – 2 கப்

துவரம் பருப்பு – அரை கப்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தேங்காய்த் துருவல் – அரை கப்

மிளகு – சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

இஞ்சி – ஒரு துண்டு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

அரிசி மற்றும் பருப்பு இரண்டையும் சேர்த்து 2 முதல் 4 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். இதை கழுவி மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல கொர கொரப்பாக அரைக்கவேண்டும்.

கடைசியாக அதனுடன் தேங்காய்த் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து ஓரிரு முறை மட்டும் மிக்ஸியை ஓடவிட்டு எடுத்துக்கொள்ளவேண்டும். அரைக்கும்போது தண்ணீர் அளவாக சேர்த்துக்கொள்ளவேண்டும். அதிகம் சேர்த்து விடக்கூடாது. இந்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி உப்பு சேர்த்து கலந்து ஊறவைக்கவேண்டும்.

அரைத்த மாவில் பொடியான நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும். இதை அடுப்பில் தோசைக்கல்லை சூடாக்கி, அடைகளாக வார்த்து எடுக்கவேண்டும்.

இதற்கு தொட்டுக்கொள்ள அவியல், கெட்டிக் குழம்பு, தேங்காய் சட்னி சூப்பர் சுவையானதாக இருக்கும். அடையுடன் வெங்காயம் சேர்க்கும்போது, முருங்கைக்கீரையையும் சேர்த்துக்கொள்ளலாம். அடைக்கு அது கூடுதல் ஆரோக்கியத்தையும், சுவையையும் தரும்.

பாசிப்பருப்பு, பாலக்கீரை அடை செய்வது எப்படி என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

ஊறுவைத்து அரைத்த பாசிபயிறு மாவு – 1 கப்

(பாசிப்பருப்பை உங்களுக்கு வேண்டுமானால், முளை கட்டியும் எடுத்துக்கொள்ளலாம்)

பாலக்கீரை – 1 கப்

வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – அரை ஸ்பூன்

இஞ்சி – 1 துண்டு (இடித்தது)

கேரட் – ஒரு கப் (துருவியது)

கடலை மாவு – ஒரு கப்

சீரகம் – 1 ஸ்பூன்

ஓமம் – 1 ஸ்பூன்

செய்முறை

ஊறவைத்து அரை பாசிப்பயறு, (கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்) ஒரு கப் மாவில் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய பாலக்கீரை, பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், துருவிய இஞ்சி, கடலை மாவு, சீரகம், ஓமம் என அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

தண்ணீர் சேர்த்து அடைமாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ள வேண்டும். இதை தோசைக்கல்லில் சேர்த்து அடைபோல் இரண்டு பக்கமும் நன்றாக வேகவிட்டு எடுக்க வேண்டும்.

இந்த மாவையும் குழிப்பணியார சட்டியில் எண்ணெய் ஊற்றி பணியாரமாகவும் சுட்டு எடுக்கலாம். எண்ணெயில் குட்டி குட்டியாக கிள்ளி சேர்த்து பக்கோடாவாகவும் செய்துகொள்ளலாம்.

பாசிபயறு, கடலை மாவு சாப்பிடுவது வயிறு மந்தத்தை ஏற்படுத்தும் என்பதால், இதில் ஓமம், சீரகம், இஞ்சி இவையும் சேர்க்கும்போது, அது வயிறு உபாதைகளை குறைக்க உதவுகிறது. தேவைப்பட்டால் சிறிது பெருங்காயத்தூளும் சேர்த்துக்கொள்ளலாம்.

இதற்கு தொட்டுக்கொள்ள சாஸ் போதுமானது. நீங்கள் சாம்பார், வெங்காயம், தேங்காய், புதினா, கறிவேப்பிலை சட்னி என எதை வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும். கீரை, கேரட் என அனைத்தும் சேர்ப்பதால் இது உங்களுக்கு ஹெல்தியானதும் கூட. ஒருமுறை சுவைத்தால் அடிக்கடி சாப்பிட விரும்புவீர்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை