தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Tata Motors Has Announced Special Discount Offers On Its Cars

75வது சுதந்திர தினம்: சலுகைகளை அள்ளிக் கொட்டிய டாடா நிறுவனம்!

Aug 13, 2022, 06:20 PM IST

டாடா நிறுவனம் அதன் பிரபல ஐந்து கார்களுக்கு தள்ளுபடி சலுகையை வழங்கியுள்ளது
டாடா நிறுவனம் அதன் பிரபல ஐந்து கார்களுக்கு தள்ளுபடி சலுகையை வழங்கியுள்ளது

டாடா நிறுவனம் அதன் பிரபல ஐந்து கார்களுக்கு தள்ளுபடி சலுகையை வழங்கியுள்ளது

முன்னணி கார் நிறுவனங்களில் பிரபலமாக விளங்கி வரும் நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஐந்து பிரபலமான கார்களுக்கு தற்போது தள்ளுபடி சலுகை அறிவித்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Sciatica Problem : இடுப்பு முதல் கால் வரை உள்ள நரம்பு இழுக்கும் பிரச்னைக்கு தீர்வு! பாலில் இதை கலந்து இரவில் பருகுங்கள்!

Massage Benefits: ஆசனவாயில் ஆயில்மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.. நீங்கும் எரிச்சல், மனப்பதற்றம்!

Parenting Tips : அன்பு பெற்றோரே! குழந்தைகள் உங்களிடம் இருந்து அடிக்கடி கேட்க விரும்புவது இதைத்தான்!

Chettinadu Mutton Masala Powder : செட்டிநாடு மட்டன் மசாலாப் பொடி! கொஞ்சம் போட்டாலே போதும் வீட்டில் கறி விருந்துதான்!

இந்த சலுகைகளில் விலை தள்ளுபடி எக்ஸ்சேஞ்ச் போன்ற பல வசதிகளுடன் கூடிய சலுகைகள் கொடுக்கப்படுகிறது. டாடா சஃபாரி, டாடா நெக்சோன், டாடா ஹேரியர், டாடா டியாகோ, டாடா டிகோர் போன்ற கார்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கார்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும். ஒருவேளை இந்த கார்கள் விற்பனை ஆகிவிட்டால் அந்த சலுகைகளும் இல்லாமல் போய்விடும்.

டாட்டா சஃபாரி

இந்த காருக்கு ரூபாய் 40 ஆயிரம் வரை தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேறு ஏதாவது பழைய காரை எக்சேஞ்ச் செய்தால் மட்டுமே இந்த காருக்குண்டான முழுமையான தள்ளுபடி கிடைக்கும்.

டாடா டியாகோ

இந்த டியாகோ காருக்கு ரூபாய் 23,000 வரை தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மாடலுக்கு மட்டும் இந்த தள்ளுபடி வழங்கப்படவில்லை.

டாடா ஹேரியர்

இந்த காருக்கு எக்சேஞ்ச் சலுகையாக ரூபாய் 40 ஆயிரம் வழங்கப்படுகிறது. மற்ற சலுகைகள் ரூபாய் ஐயாயிரம் வழங்கப்படுகிறது. மொத்தமாக இந்த காருக்கு ரூபாய் 45 ஆயிரம் வரை தள்ளுபடி சலுகை கொடுக்கப்படுகிறது.

டாடா டிகோர்

இந்த கார் XE, XM, XZ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதேபோல் சிஎன்ஜி மாடல் ஆப்ஷனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு 23 ஆயிரம் ரூபாய் வரை சலுகைகள் அளிக்கப்படுகிறது.

டாபிக்ஸ்