Pottukadalai Urundai : உங்கள் குழந்தை ஒல்லியாக இருக்கிறார்கள் என்ற கவலையா? இதோ இந்த ஸ்னாக்ஸ் போதும்!
Sep 10, 2024, 10:04 AM IST
Pottukadalai Urundai : உங்கள் குழந்தை ஒல்லியாக இருக்கிறார்கள் என்ற கவலையா? இதோ இந்த ஸ்னாக்ஸ் போதும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்கள் குழந்தைகள் ஒல்லியாகவே இருக்கிறார்கள் என்ற கவலை உங்களுக்கு ஏற்பட்டால், நீங்கள் அவர்களுக்கு இந்த ஒரு ஸ்னாக்ஸ் கொடுத்தாலே போதும். ஒல்லியான தேகமோ அல்லது குண்டான தேகமோ கொண்டிருந்தால், பிரச்னையில்லை. ஆனால் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். அவர்கள் சரியான வயதில் சரியான எடையை கொண்டிருக்கிறார்களா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள் வழக்கமான துறுதுறுப்புடன் அவர்கள் இருந்தால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் உங்கள் குழந்தைகள் ஒல்லியாக வயதுக்கு ஏற்ப எடை மற்றும் உயரம் என்ற வளர்ச்சிக் கோளாறுகள் இருந்தால்தான் நீங்கள் வருந்தவேண்டும். எனவே அதுபோன்ற குழந்தைகள் இருந்தால், நீங்கள் அவர்களுக்கு சிறப்பு உணவுகளை கொடுக்கவேண்டும். அதுவும் ஆரோக்கியமானதான இருக்க வேண்டும் என்பதை உறுதியாக்குங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்ததாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் அதை சாப்பிடுவார்கள். அதுபோன்ற ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை தெரிந்துகொள்ளுங்கள். இதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதும். மேலும் இதை செய்வது எளிது என்றால், நீங்கள் தினமுமே செய்து கொடுத்துவிடுவீர்கள். அது என்ன என்று பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை – ஒரு கப்
வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன் (பொடித்தது)
தேங்காய் துருவல் – அரை கப்
செய்முறை
பொட்டுக்கடலையை கடாயில் சேர்த்து லேசாக வறுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதை ஆறவைத்து அதில் வெல்லம் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி உருண்டைகளாக பிடித்துக்கொடுத்தால் சூப்பரான மாலை நேர சிற்றுண்டி, உங்கள் குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.
விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமின்றி இது ஒரு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ். மேலும் இது உங்கள் குழந்தைகளின் எடையை அதிகரிக்கவும் உதவும். விடுமுறை நாளில் வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேட்டால் நிமிடத்தில் செய்து கொடுத்துவிடுங்கள்.
அவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும் அதனுடன், ஆரோக்கியமும் மேம்படும். இதுபோன்ற எண்ணற்ற எளிமையான, ஆரோக்கியமான ரெசிபிக்களை ஹெச்.டி. தமிழ் தினமும் வழங்கி வருகிறது. எனவே நீங்கள் அதை தொடர்ந்து பின்பற்றி உங்கள் குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
பொட்டுக்கடலை
100 கிராம் வறுத்த பொட்டுக்கடலையில் 18.64 கி புரோட்டீன், 16.8 கி நார்ச்சத்துக்கள் போன்றவை உள்ளன. எனவே எடை இழப்புக்காக வறுத்த பொட்டுக்கடலை உதவுகிறது. இதில் உள்ள மாங்கனீஸ், ஃபோலேட், பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்றவை இதய நோய்களை குறைக்கும் சத்துக்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.
வறுத்த பொட்டுக்கடலை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. குளுக்கோஸ் ஏற்ற இறக்கங்களை சரி செய்கிறது. வறுத்த பொட்டுக்கடலை புரதத்தின் சிறந்த ஆதாரமாகும். நீங்கள் எடை குறைப்பு பயணத்தில் இருந்தால், வறுத்த பொட்டுக்கடலையை தேர்ந்தெடுங்கள்.
ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்கவும், ஏராளமான நோய்களைத் தடுக்கவும் வறுத்த பொட்டுக்கடலை உதவுகிறது. எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும், அசாதாரண எலும்பு உருவாக்கத்திற்கும், எலும்பு பலவீனம், மூட்டு வலிகள் போன்ற நோய்களை தடுக்கவும் பொட்டுக்கடலை உதவுகிறது.
ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. வறுத்த பொட்டுக்கடலையில் அதிகமுள்ள செலினியம், புற்றுநோய்களின் அபாயத்தை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கும் என்று கூறுகிறது.
பொட்டுக்கடலையில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அதை அளவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதகிம் எடுத்தால் அது வயிறு கோளாறுகளை ஏற்பத்தும். எனவே அளவாக எடுத்து ஆரோக்கியமாக வாழுங்கள்.
டாபிக்ஸ்