தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pickle Recipe: ருசியான மாங்காய் துருவல் தொக்கு செய்முறை

Pickle Recipe: ருசியான மாங்காய் துருவல் தொக்கு செய்முறை

I Jayachandran HT Tamil
Apr 13, 2023 10:43 PM IST

ருசியான மாங்காய் துருவல் தொக்கு செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

மாங்காய் துருவல் தொக்கு
மாங்காய் துருவல் தொக்கு

ட்ரெண்டிங் செய்திகள்

பச்சையான மாங்காயை துருவி சுலபமாக செய்யக்கூடிய இந்த ஈஸியான ஊறுகாய் ரெசிபி எப்படி நாமும் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

துருவிய மாங்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:

மாங்காய் – ஒன்று,

வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,

கடுகு – ஒரு டீஸ்பூன்,

நல்லெண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்,

வர மிளகாய் – 10,

உப்பு – தேவையான அளவு,

தாளிக்க:

கடுகு – அரை ஸ்பூன்,

கறிவேப்பிலை – ஒரு கொத்து

துருவிய மாங்காய் ஊறுகாய் செய்முறை:

முதலில் ஒரு பெரிய மாங்காயாக பிரஷ்ஷாக எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். இந்த மாங்காய் ஊறுகாய் செய்வதற்கு தோலை சீவ வேண்டிய அவசியம் இல்லை.

கழுவி சுத்தம் செய்த பின்பு அப்படியே துருவியில் போட்டு மெல்லியதாக துருவி பூ போல எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒன்றரை டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் லேசாக காய ஆரம்பித்ததும் அதில் நீங்கள் துருவிய மாங்காயை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்குங்கள்.

அதற்குள் இன்னொரு ஒரு சிறிய வாணலி அல்லது தாளிப்பு கரண்டி ஒன்றை எடுத்து வேறு அடுப்பில் வையுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கடுகு மற்றும் ஒரு டீஸ்பூன் அளவிற்கு வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரிய சிவக்க விடுங்கள்.

வாசம் வர நன்கு வறுக்க, அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் கருகிவிடும்.

பின்னர் வறுத்து எடுத்ததும் அதை ஒரு உரலில் இட்டு நன்கு பவுடர் போல இடித்து வைத்துக் கொள்ளுங்கள் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் பத்து வர மிளகாய்களை எடுத்து லேசாக வெறும் வாணலியில் போட்டு ஒருமுறை வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த மிளகாய்களை ஒரு மிக்ஸி ஜாரில் ஆறியதும் சேர்த்து ஓரளவுக்கு நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் மாங்காய் வைத்த வாணலியில் நன்கு கிண்டி விட்டுக் கொள்ளுங்கள். மாங்காய் சீக்கிரமே வெந்துவிடும். பின் நீங்கள் அரைத்து வைத்துள்ள பொடிகளை இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின் தேவையான அளவுக்கு உப்பு போட்டு நன்கு கிண்டி விட வேண்டும். தொக்கு போல எல்லா எண்ணெயும் உறிஞ்சி கொண்டு நன்கு திரண்டு வரும். . இந்த சமயத்தில் தாளிக்க அடுப்பில் தாளிப்பு கரண்டி ஒன்றை வையுங்கள். அதில் ஒன்றரை டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

கடுகு பொரிந்து வந்ததும், கருவேப்பிலை தாளித்து ஊறுகாயுடன் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். ஒரு ரெண்டு நிமிடம் நன்கு கலந்து விட்ட பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டியது தான்.

சுலபமாக செய்யக்கூடிய இந்த துருவிய மாங்காய் ஊறுகாய் சாதம் மட்டுமல்லாமல் இட்லி, தோசைக்கு கூட தொட்டு சாப்பிட அவ்வளவு சூப்பரா இருக்கும்.

நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

WhatsApp channel

டாபிக்ஸ்