Mutton Champaram : மட்டன் சம்பரம் ஈசியாக சமைக்கலாம்.. மட்டன் விரும்பாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்!
Mutton Champaram : மட்டன் சம்பரம் அனைவரும் ஈசியாக சமைக்கலாம். இந்த மட்டன் சம்பாரம் எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
மட்டன் சம்பரம்
தேவையான பொருட்கள்
மட்டன் 1/2 கிலோ
தயிர் 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்டர் 2 டீஸ்பூன்
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 3
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் 1 டீஸ்பூன்
மிளகு தூள் 1 டீஸ்பூன்
கரம் மசாலா 1 டீஸ்பூன்
உப்பு 1 டீஸ்பூன்
பூண்டு (முழு) 2
மிளகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
எலுமிச்சை - 1/2
செய்முறை
மட்டன் சம்பரம் அனைவரும் ஈசியாக சமைக்கலாம் இந்த மட்டன் சம்பாரம். எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
அரை கிலோ மட்டன் எடுத்துக் கொள்ளுங்கள். நன்கு சுத்தம் செய்து மட்டனை எடுத்துக் கொள்ளுங்கள். பின்ன சுத்தம் செய்து வைத்த அந்த மட்டனில் இரண்டு ஸ்பூன் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கி வைத்த வெங்காயம், 3 பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, ஒரு டீஸ்பூன் உப்பு, ஒரு பிரியாணி இலை, அரை மூடி லெமன், 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இவை அனைத்தையும் ஐந்து நிமிடம் நன்றாக மசாஜ் போல பிசைந்து விடுங்கள்.
நன்கு மூடி வைக்கவும்
உங்களுக்கு தண்ணீர் விடும் நீங்கள் தண்ணீர் எதுவும் சேர்க்க தேவையில்லை. அப்படி மிகவும் கெட்டியாக உங்களுக்கு வந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இரண்டு முழு பூண்டு எடுத்து சுத்தம் செய்து வைத்து நாம் பிசைந்து வைத்த அந்த மசாலாவில் போடவும். இரண்டு கொத்து கருவேப்பிலை முழு மிளகு சேர்த்து அதனை நன்கு மூடி வைக்கவும்.
அரை மணி நேரம் ஆவது நன்கு ஊரவேண்டும். மைதா மாவை சப்பாத்தி மாவு போல ஒரு உருண்டை பிடித்துக் கொள்ளுங்கள். அந்த சப்பாத்தி மாவை நீங்கள் மூடி வைத்த அந்த மசாலா பாத்திரத்தில் சுற்றி சீல் செய்யுங்கள். அதாவது மூடி மற்றும் பாத்திரம் இணைத்து மாவை சீல செய்யவும்.
மட்டன் சம்பரம் ரெடி
நீங்கள் சீல் வைத்த அந்த சப்பாத்தி மாவில் போர்க் பயன்படுத்தி ஒரு துளை இடுங்கள். இப்போது அடுப்பில் வைத்து சிம்மில் வைத்து 45 நிமிடம் நன்கு வேக வைக்கவும் அப்பொழுது நீங்கள் துளை இட்ட அந்த இடத்திலிருந்து ஆவி வெளிவரும் தண்ணீரும் சிறிது வடியும்.
இடையில் நாம் வேகவைத்த அந்த மட்டன் கறியை எடுத்து குலுக்கி குலுக்கி விடுங்கள். அப்பொழுதுதான் அடி பிடிக்காது. பின்னர் 45 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள். 10 நிமிடம் கழித்து எடுத்து பார்த்தால் உங்களுக்கு சுவையான மட்டன் சம்பரம் ரெடி. இவ்வளவு ஈஸியான ரெசிபியை நீங்கள் ஒரு முறை வீட்டில் சமைத்து கொடுத்தால் அனைவரும் வாரம் வாரம் கேட்பார்கள் அவ்வளவு சுவையாக இந்த மட்டன் சம்பரம் இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்