தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மாலைக்கண் நோயை அடித்து விரட்டி கண் பார்வையை கூராக்கும்; கேரட்டில் உள்ள நன்மைகள் என்ன?

மாலைக்கண் நோயை அடித்து விரட்டி கண் பார்வையை கூராக்கும்; கேரட்டில் உள்ள நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil

Nov 30, 2024, 06:00 AM IST

google News
கேரட்டில் உள்ள நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
கேரட்டில் உள்ள நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

கேரட்டில் உள்ள நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

கேரட், பொதுவாகவே கண்ணுக்கு நல்லது. குழந்தைகளுக்கு கேரட் அதிகம் கொடுக்கவேண்டும் என்று நமது முன்னோர்கள் அறிவுறுத்தவார்கள். அது அவர்களின் கண் ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்பதால்தான் அதை அதிகம் பயன்படுத்தவேண்டும். மேலும் கேரட்டில் பல நன்மைகளும் உள்ளன. கேரட்டை சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியும். அப்படியே சாப்பிடும்போது அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரும். தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன பாருங்கள். நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய கேரட்டின் நன்மைகள் என்னவென்று பாருங்கள். கேரட் ஒரு மொறுமொறுப்பான, சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் என்றே கூறலாம். இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. உங்கள் கண் பார்வையை கூராக்கி, உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்வது என அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. இதை உங்கள் உணவில் தினமும் சேர்த்துக்கொள்வது, உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. இதை நீங்கள் உங்கள் அன்றாட உணவில் ஏன் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்கான 8 காரணங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கண் பார்வையை கூராக்குகிறது

கேரட்டில் அதிகளவில் பீட்டா கரோட்டின்கள் உள்ளது. இது வைட்டமின் ஏ சத்து நிறைந்தது. இது உங்களின் கண் ஆரோக்கியத்தை அதிகரிக்க சிறந்தது. இதை நீங்கள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்களுக்கு மாலைக்கண் நோய் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் வயோதிகம் தொடர்பான பார்வை இழப்பையும் தடுக்கிறது.

நோய் எதிர்ப்பாற்றல்

கேரட்டில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் ஒது ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இது உங்கள் உடலில் உள்ள தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது. இது உங்களை காயங்களில் இருந்து விரைவில் காக்கிறது.

சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்கள் சருமத்தை சூரியனின் கதிர்களிடம் இருந்து காத்து உங்களுக்கு, இளம் வயதிலேயே வயோதிக தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது. இவை இயற்கை பளபளப்பையும் அதிகரிக்கின்றன. சருமத்தின் ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டையும் பராமரிக்கிறது.

செரிமானத்தை அதிகரிக்கிறது

கேரட்டில் உயர்தர நார்ச்சத்துக்கள் உள்ளன. இது உங்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இது உங்கள் குடல் நன்முறையில் இயங்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

கேரட்டில் கொழுப்பு குறைவாக உள்ளது. பொட்டாசியச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது. கேரட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. உங்களின் தமனிகளைக் காக்கிறது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

உடல் எடையை பராமரிக்க உதவுகிறது

கேரட்களில் கலோரிகள் குறைவு. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம். இதனால் கேரட்டை சிறந்த ஸ்னாக்ஸ் என்று கூறலாம். உடல் எடையை சரியான அளவில் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு கேரட் ஒரு சிறந்த ஸ்னாக்ஸ் ஆகும். இது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இது உங்களின் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தை குறைக்க உதவுகிறது.

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கேரட்டில் லுடின் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது. இது உங்கள் மூளையின் திறனை அதிகரிக்கிறது. உங்கள் மூளையை ஆக்ஸிடேட்டிவ் அழுத்ததில் இருந்து பாதுகாக்கிறது. உங்கள் மூளையின் இயக்கத்தை அதிகரிக்கிறது. எனவே நீங்கள் கேரட்டை அதிகம் எடுத்துக்கொள்வது உங்கள் நினைவாற்றல் திறனுக்கு உதவுகிறது. உங்கள் கவனத்தையும் அதிகரிக்கிறது.

நாள்பட்ட நோய்களை தடுக்கிறது

கேரட்டில் உள்ள கரோட்டினாய்ட்கள் உள்ளிட்ட ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலில் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. இது உங்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.

உங்கள் உணவில் கேரட்டை சேர்த்துக்கொள்ளும் வழிகள்

உங்கள் உணவில் கேரட்டை சேர்த்துக்கொள்ள எண்ணற்ற வழிகள் உள்ளது. அதில் முக்கியமானது கேரட்டை நீங்கள் அப்படியே கடித்து சாப்பிடலாம். மேலும் அதை சாலட்கள் மற்றும் சான்விட்சஸ்களுடன் சேர்த்து சாப்பிடலாம். கேரட் கிரேவி, சூப், வறுவல், பொரியல் என எண்ணற்ற வழிகளிலும் சாப்பிடலாம். ஃபிரஷ்ஷான கேரட் சாறை பருகும்போது, அது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பானமாகிறது.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி