Fibre Rich Foods : உங்கள் டயட்டில் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எவ்வளவு சேர்க்கவேண்டும் தெரியுமா?
Fibre Rich Foods : உங்கள் டயட்டில் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எந்த அளவுக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள்
உங்கள் உணவில் நார்ச்சத்து என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க நார்ச்சத்துக்கள் என்பது மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உடல் எடையை பேணவும், நாள்பட்ட நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கவும் நார்ச்சத்துக்கள் நமக்கு உதவுகிறது.
ஒரு நாளைக்கு 25 முதல் 30 கிராம் வரை நார்ச்சத்துக்களை உணவில் சேர்க்கவேண்டும் என்று சான்பிரான்சிஸ்கோ கலிபோர்னியா பல்கலைக்கழகம் கூறுகிறது. நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள். அவற்றை சாப்பிட்டு மகிழுங்கள்.
பருப்பு வகைகள்
ஒரு கப் வேகவைத்த பருப்பில் 18 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது நார்ச்சத்து அதிகம் எடுத்துக்கொள்ள விரும்புபவர்களின் நார்ச்சத்து உட்கொள்ளும் அளவை அதிகரிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள், கொழுப்பு அளவை குறைக்க உதவுகிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.