தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Immunity Boosting Powder Homemade

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கை வைத்திய சூரணம்

I Jayachandran HT Tamil

Dec 06, 2022, 08:16 PM IST

வீட்டிலேயே செய்யக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூரணம் பற்றி இங்கு பார்க்கலாம்.
வீட்டிலேயே செய்யக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூரணம் பற்றி இங்கு பார்க்கலாம்.

வீட்டிலேயே செய்யக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூரணம் பற்றி இங்கு பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்-

ட்ரெண்டிங் செய்திகள்

Global Warming : அதிகரிக்கும் புவி வெப்பமடைதல் பிரச்னை - கடலோர தாவரங்களுக்கு என்ன ஆனது? – அதிர்ச்சி ஆய்வு!

Milk Paneer Masala : பால் சேர்த்த பன்னீர் மசாலா! வித்யாசமான சுவையில் சாப்பிட இப்டி செஞ்சு பாருங்க!

Agarbatti Benefits: அகர்பத்தி.. சின்ன குச்சியில் எவ்வளவு பாசிட்டிவ் வைப்ஸ்.. ஆச்சரியம் தரும் உண்மைகள்

Clove Benefits: தம்மாத்துண்டு கிராம்புக்குள்ள இம்புட்டு பெரிய விசயம் இருக்கா.. அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

7 டேபிள்ஸ்பூன் ஆர்கானிக் மஞ்சள் தூள்

5 டேபிள்ஸ்பூன் சீரகத் தூள்

4 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்

7 டேபிள்ஸ்பூன் சோம்புத் தூள்

2 டேபிள்ஸ்பூன் சுக்குத் தூள்

2 டேபிள்ஸ்பூன் கருமிளகுத் தூள்

அரை டேபிள் ஸ்பூன் பட்டைத் தூள்

3 டேபிள் ஸ்பூன் ஏலக்காய்த் தூள்

செய்முறை:

மஞ்சள் தூளையும் சுக்கையும் தனியாக ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.

மீதமுள்ள சேர்மானங்களை வாணலியில் லேசாக வறுக்கவும்.

ஆறியவுடன் அவற்றை மிக்ஸியில் போட்டு நைஸாக பொடிக்கவும்.

இந்தப் பொடியை மஞ்சள் தூள், சுக்குத் தூளுடன் சேர்த்து கலக்கவும்.

கலக்கி வைத்துள்ள பொடியை சுத்தமான கண்ணாடி, எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு காற்ருப் போகாமல் நன்கு மூடி வைக்கவும்.

1 கப் தண்ணீரில் கால் டீஸ்பூன் இந்தப் பொடியைச் சேர்த்து கலக்கிவிடவும். அத்துடன் நயம் பசும் நெய் 1 டீஸ்பூன் சேர்க்கவும்.

ரசம், சாம்பார், மோர், மோர்க்குழம்பு ஆகியவற்றுடன் 1 டீஸ்பூன் பொடியை சேர்த்து சமைக்கலாம்.

இந்தப் பொடியை எந்த வயதினரும் சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக காலை அல்லது இரவில் அருந்தலாம்.

சளி, காய்ச்சல், இரைப்பு போன்ற பிரச்னைகள் அண்டாது.