பீட்ரூட் சாப்பிட மாட்டேன் என குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது? இதோ இதுபோல் செய்து கொடுங்கள்!
Dec 09, 2024, 12:30 PM IST
பீட்ரூட் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி? இதோ பீட்ரூட் சட்னி.
பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். கலோரிகள் 29, புரதம் 1.4 கிராம், கொழுப்பு, 0.1 கிராம், கார்போஹைட்ரேட் 6.1 கிராம், நார்ச்சத்துக்கள் 2.0 கிராம், 304 மில்லிகிராம் பொட்டாசியம், 120 மைக்ரோகிராம் ஃபோலேட் உள்ளது. பீட்ரூட் சிலருக்கு சிறுநீரகத்தில் சிறிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். அதனால் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. பீட்ரூட்டில் உள்ள நற்குணங்களுக்காக அதை உணவில் சேர்த்துக்கொண்டு, பல்வேறு ரெசிபிகள் செய்து, சாப்பிட்டு மகிழுங்கள். உடலுக்கு தேவையான எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைத் தரும் பீட்ரூட்களை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதில் பீட்ரூட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுவதால் தினமும் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவுகள் பட்டியலில் பீட்ரூட் உள்ளது. எனவே பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளம் இடுங்கள். எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது. கட்டாயம் பீட்ரூட்டில் இந்த கோலா உருண்டையை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
பீட்ரூட்டின் நன்மைகள்
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது.
வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது.
ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
உடற்பயிற்சியின் ஆற்றலை அதிகரிக்கும். உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும்.
செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
மெனோபாஸ்க்கு பிந்தைய காலத்திற்கு பயனுள்ளது.
ரேநாய்ட் ஃபினாமினன் அறிகுறிகளைப் போக்குகிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்த பீட்ரூட்டில் சட்னி செய்து சாப்பிடுவது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் – 1
பச்சை மிளகாய் – 1
புதினா – கைப்பிடியளவு
உப்பு – தேவையான அளவு
சீரகம் – கால் ஸ்பூன்
எலுமிச்சை பழச்சாறு – ஒரு ஸ்பூன்
மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
தேங்காய் துருவல் – கால் கப்
தாளிக்க தேவையான பொருடட்கள்
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
பீட்ரூட்டை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுகிக்கொள்ளவேண்டும். அதில் பச்சை மிளகாய், புதினா, உப்பு, சீரகம், எலுமிச்சை பழத்தின் சாறு, மல்லித்தழை, தேங்காய் துருவல் என அனைத்தையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். தேங்காய் இல்லாமலும் அரைத்துக்கொள்ளலாம்.
ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவேண்டும். இதை சட்னியில் சேர்த்து கிளறினால் சூப்பர் சுவையான பீட்ரூட் சட்னி தயார்.
இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, பொங்கல், ஆப்பம், உப்புமா என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இதை பீட்ரூட் சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் பிங்க் சட்னி என்று சாப்பிடுவிடுவார்கள். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சுவைக்கவேண்டும் என்று ஆர்வம் ஏற்படும். இதை நீங்கள் கட்டாயம் செய்து சாப்பிடவேண்டும். ஏனென்றால், பீட்ரூட்டில் எண்ணற்ற நற்குணங்கள் உள்ளது. எனவே பீட்ரூட்டை உங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது கட்டாயம் ஆகும். ஆனால் நீங்கள் அதை தினமும் ஒரே மாதிரி சாப்பிடும்போது உங்களுக்கு போர் அடிக்கும். எனவே நீங்கள் இதுபோல் வித்யாசமாக சாப்பிடும்போது பீட்ரூட் போர் அடிக்காது.
டாபிக்ஸ்