பொங்கல் அன்று சி.ஏ தேர்வு அறிவிப்பு- சு.வெ எதிர்ப்பு.. வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்.. உள்ளிட்ட டாப் 10 செய்திகள்
ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா தொடக்கம், பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுக்கு சு.வெங்கடேசன் எம்.பி எதிர்ப்பு, வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் உள்ளிட்ட டாப் 10 செய்திகளை இங்கு பார்க்கலாம்.
ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா தொடக்கம், பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுக்கு சு.வெங்கடேசன் எம்.பி எதிர்ப்பு, வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் உள்ளிட்ட டாப் 10 செய்திகளை இங்கு பார்க்கலாம்.
பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வா!
பொங்களன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வு அறிவிப்புக்கு சு.வெங்கடேசன் எம்.பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, "சி ஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
“அறுவடைத் திருநாளான" பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ஒன்றிய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வால் அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்." இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா தொடங்கியது
தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சரும், மறைந்த எம்ஜிஆர் மனைவியுமான ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சென்னனை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. ஜானகி அம்மையாரின் புகைப்பட கண்காட்சியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
வாக்காளர் பட்டியல் -இன்று சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி மாற்றங்கள் போன்றவற்றை செய்து கொள்ளலாம்.
4 நாட்களுக்கு ஆரஞ்சு அலார்ட்
தமிழகத்தில் நவம்பர் 25, 26,27,28 ஆகிய 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 12 முதல் 20 செ.மீ வரை மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் வழுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அழுந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
முருங்கை காய் விலை அதிரடி உயர்வு
தலைநகர் சென்னையில் சில்லறை விலையில் ஒரு கிலோ முருங்கை காய் ரூ.300க்கும், மொத்த விற்பனையில் ரூ.270க்கும் விற்பனை செய்யப்படுகிறது
குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வார விடுமுறையை ஒட்டி சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். நீர்வரத்து சீராக உள்ளதால் குற்றால அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். அங்கு சபரி மலை செல்லும் பக்தர்களும் நீராட குவிந்து வருவதால் கூட்டம் அதிகரித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 101.03க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.61க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உதகை சுற்று வட்டாரப்பகுதிகளில் உறைபனி
உதகையில் குளிர்கால சீசன் தொடங்கி உள்ள நிலையில் உதகை, தலைகுந்தா, பாலாடா உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியால் கடுங்குளிர் நிலவுகிறது.
தெய்வானை யானைக்கு கரும்பு வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு
திருச்செந்தூரில் கோயில் யானை தாக்கி பாகன் உட்பட 2 பேர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள யானை தெய்வானைக்கு கரும்பு வழங்கி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆசி பெற்றார்
டாபிக்ஸ்