தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ‘வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்’ சோ, சிரிங்க, சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க!

‘வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்’ சோ, சிரிங்க, சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க!

Priyadarshini R HT Tamil

Dec 09, 2024, 12:04 PM IST

google News
நீங்கள் சிரித்து குதூகலிக்க இதோ மொக்கை ஜோக்குகள்.
நீங்கள் சிரித்து குதூகலிக்க இதோ மொக்கை ஜோக்குகள்.

நீங்கள் சிரித்து குதூகலிக்க இதோ மொக்கை ஜோக்குகள்.

ஜோக்குகள் என்றால் என்ன? ஜோக்குகள், நகைச்சுவை என்பது குறிப்பிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட வகையில் எழுதி மக்களை சிரிக்கவைப்பது ஆகும். ஆனால் அதுபோல் எழுதும்போது அது யார் மனதையும் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஜோக்குகள் கதைபோல் இருக்கலாம் அல்லது உரையாடல்களாக இருக்கலாம். முடிக்கும்போது பஞ்ச் லைன் சேர்க்கலாம். அதில் சிரிக்கக்கூடிய அம்சம் இருக்கவேண்டும். சிறிய ஜோக்குகளாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, படிக்கும்போதோ அல்லது படித்து முடித்த பின்னரோ உங்களுக்கு சிரிப்பு வரவேண்டும் அதுதான் ஜோக்குகள் எனப்படும். ஜோக் விடுகதைகளும் உள்ளன. அவற்றை உங்கள் குழந்தைகளிடம் கேட்டுகும்போது அவர்களின் சிந்தனைத்திறன் வளரும். ஜோக்குளின் நவீன வடிவம்தான் மீம்ஸ்கள். ஜோக்குகளை நீங்கள் கூறும்போது மற்றவர் கட்டாயம் சிரிக்கவேண்டும். ஆனால் அவர்கள் மனம் புண்படக்கூடாது.

சிந்திக்க வைக்கும் ஜோக்குகள்

சில ஜோக்குகள் சிந்தனையை தூண்டுவதாகவும் இருக்கவேண்டும். சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளிலும், சிலர் சிரிக்க மட்டுமே வைப்பார்கள். சிலர் சிரிக்கவும், சிந்திக்கும் வகையிலும் நகைச்சுவை காட்சிகளை அமைப்பார்கள். அனைத்து கலாச்சாரங்களிலும் பொழுதுபோக்கு அம்சமாக ஜோக்குகள் உள்ளது. அச்சு ஊடக காலத்தில் அதில் ஜோக்குகள் எழுதப்படும். அதற்கு முன் தெருக்கூத்துகள் மற்றும் நாடகங்கள் என்ற நமது பாரம்பரிய ஊடகங்களிலும் இடையில் பபூன் வருவார்கள். ஜோக்குகள் செய்யும் நகைச்சுவை கலைஞர்களுக்கு பபூன், ஜோக்கர் என்ற பெயர்கள் உண்டு. அவர்கள் வித்யாசமாக உடை உடுத்தியிருப்பார்கள். சர்க்கஸ்களிலும் கோமாளிகள் இருப்பார்கள். அவர்களும் நம்மை மகிழ்விப்பார்கள்.

எனவே ஜோக்ஸ் மற்றும் ஜோக்கர்கள் என்பவர்களின் வேலை நம்மை மகிழ்விப்பதாகும். அடுத்து காட்சி மற்றும் வானொலி காலத்தில் அதிலும் ஜோக்குகள் இடம்பெற்றன. தற்போது மீம்ஸ்கள் சமூக வலைதளங்கள், இணைய பக்கங்களிலும் ஜோக்ஸ்களை காட்சிகளாகவும், வார்த்தைகளாகவும் எழுதி படித்து, சிரித்து, மகிழ்ந்து நமது நகைச்சுவை உணர்வுக்கு மதிப்புக் கொடுத்துக்கொள்கிறோம். இன்று சிந்தனைக்கு அல்ல; வாய் விட்டு சிரிச்சுட்டு மட்டும் போங்க. இதோ மொக்க ஜோக்குகள்.

உங்களை கலகலவென சிரிக்க வைக்கும் மொக்க ஜோக்குகள் இதோ!

 

பன்னுல தண்ணீ போனா என்ன ஆகும்?

ஹாஹா வேற என்னவாகும்? பன்னீராகும்.

 

ஒரு பாம்பு ரொம்ப நேரமா அழுதுகிட்டு இருந்துச்சாம், ஏன்

ஏன்னா அது எடுத்த படம் ஃப்ளாப் ஆயிடுச்சாம்.

 

எந்த வாட்ச் கரெக்ட்டா டைம் காட்டும் தெரியுமா?

எந்த வாட்சும் காட்டாது, நாமதான் பாக்கணும்.

 

ஒருத்தன் மாட்டுக்கு ரோஸ் சாப்பிட கொடுத்தானாம், ஏன்?

ஏன்னா, மாடு ரோஸ்மில்க் கொடுக்குதான்னு பார்க்கத்தான்.

 

எல்லா லெட்டரும் வர மாதிரி ஒரு வேர்ட் சொல்லுங்க?

ஹாஹாஹா, போஸ்ட் பாக்ஸ்தான்.

 

ஆமா ஓய்வெடுக்கும் சிகரம் எது?

ஹாஹா அதாங்க ever-rest

 

ஒரு டாக்டர் பேஷன்ட்கிட்ட உங்கள் கிட்னி பெயிலியர் ஆயிடுச்சுன்னு சொன்னாராம்? அதுக்கு அந்த அந்த பேஷன்ட் எப்படி ரியாக்ட் பண்ணீர்பாரு?

நான் ஏன் கிட்னிய படிக்கவெக்கவே இல்லையே டாக்டர், அப்புறம் எப்படி ஃபெயிலாகும்ன்னுதான் கேட்டாராம்.

இன்றைய சிந்தனை வரிகள்

எப்போதும், யாருக்கும் தொல்லையாகவும், பாரமாகவும் இருந்துவிடக்கூடாது என்பதில் கவனம்செலுத்துங்கள்.


இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி