கோவக்காய் குழம்பு; சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்; இட்லி, தோசைக்கும் பொருந்தும்!
Nov 11, 2024, 04:48 PM IST
கோவக்காய் குழம்பை சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும். இட்லி, தோசைக்கும் பொருந்தும். எனவே செய்து வைத்துவிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்.
கோவக்காயை வைத்து சூப்பர் சுவையான குழம்பு செய்யும் முன் அதன் நன்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். கோவக்காய் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இது நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. கோவைக்காய் மற்றும் கீரையை சூப்பில் சேர்த்து சாப்பிடலாம். இது குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, உங்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது. சோர்வை நீக்க உதவுகிறது. நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது. சிறுநீரக கற்கள் போக கோவக்காய் உதவும். நோய்களை குணப்படுத்துகிறது. அலர்ஜியை எதிர்த்து போராட உதவுகிறது. கோவக்காய் தொற்றுக்களை குணப்படுத்துகிறது. புற்றுநோயை தடுக்கிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கும் கோவக்காயில் மீன் குழம்பை விட அதிக சுவை தரும் குழம்பு செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)
கோவக்காய் – கால் கிலோ
(பழுத்தது வேண்டாம். பிஞ்சு பதத்தில் உள்ள கோவக்காய்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். மிகவும் பழுத்தது என்றால் ஒதுக்கிவிடாலம். அதை சுத்தம் செய்து நாலாக வெட்டிக்கொள்ளவேண்டும்)
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளி – நெல்லிக்காய் அளவு
(சூடான தண்ணீரில் சேர்த்து ஊறவைத்து கரைத்து ஏடுத்துக்கொள்ளவேண்டும்)
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் – 2 (உங்கள் கார அளவுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவேண்டும்)
சின்ன வெங்காயம் – 5
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் துருகல் – கால் கப்
மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
(இந்த மசாலாப்பொருட்களை மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்)
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – பொடியாக நறுக்கியது கொஞ்சம்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கஷ்மீரி மிளகாய்த்தூள் – கால் ஸ்பூன்
(இதை சேர்த்துக்கொள்ளலாம் அல்லது விட்டு விடலாம். இது முற்றிலும் உங்கள் விருப்பம்)
செய்முறை
கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் என அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அடுத்து கோவைக்காயை சேர்த்து 80 சதவீதம் வரை வதக்கவேண்டும்.
அடுத்து மஞ்சள் தூள், உப்பு, அரைத்து வைத்த மசாலாப் பொருட்கள், கரைத்த புளி என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொதிக்கவிடவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவேண்டும்.
ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, வெந்தயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை என அனைத்தும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அடுத்து கஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து அதையும் பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.
அனைத்தும் வதங்கி சுருண்டு வந்தவுடன் இதை குழம்பில் சேர்க்கவேண்டும். சூப்பர் சுவையான கோவக்காய் குழம்பு தயார். இது மீன் குழம்பு சுவையிலே இருக்கும். இதை சைவ மீன் குழம்பு என்றும் கூறலாம்.
இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்