தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மன அழுத்ததைப் போக்கும் மல்லிகை டீ! மலர் மட்டுமல்ல தேநீரும் உங்கள் மனம் மயக்கும்! அதன் நன்மைகளையும் பாருங்க!

மன அழுத்ததைப் போக்கும் மல்லிகை டீ! மலர் மட்டுமல்ல தேநீரும் உங்கள் மனம் மயக்கும்! அதன் நன்மைகளையும் பாருங்க!

Priyadarshini R HT Tamil

Oct 07, 2024, 02:46 PM IST

google News
செம்பருத்தி, ரோஜா இதழ்களில் தேநீர் தயாரிக்க முடியும் என்பது தெரியும். மல்லிகைப்பூவில் தேநீர் தயாரிக்க முடியுமா? அதில் இத்தனை நன்மைகள் உள்ளதா?
செம்பருத்தி, ரோஜா இதழ்களில் தேநீர் தயாரிக்க முடியும் என்பது தெரியும். மல்லிகைப்பூவில் தேநீர் தயாரிக்க முடியுமா? அதில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

செம்பருத்தி, ரோஜா இதழ்களில் தேநீர் தயாரிக்க முடியும் என்பது தெரியும். மல்லிகைப்பூவில் தேநீர் தயாரிக்க முடியுமா? அதில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

மல்லிகைப்பூ தேநீர் என்பது கிரீன்டி அல்லது ப்ளாக் டீதான். அதில் மல்லிகைப் பூக்களின் நறுமணம் கலந்திருக்கும். கிரீன் டி இலைகளுடன், மல்லிகைப் பூக்களின் இதழ்களை கலந்து தயாரிப்பார்கள். இந்த தேநீரில் உள்ள தனிச்சுவையானது, மிகவும் மிருதுவானதாக இருக்கும். இது உங்கள் உடல் மற்றும் மணம் இரண்டுக்கும் புத்துணர்வைத் தரும். மல்லிகைப்பூ தேநீர் தயாரிக்க நீங்கள் மொட்டுகள் அல்லது அப்போது மலர்ந்த பூக்களை எடுத்துக்கொள்ளவேண்டும். மல்லிகைப்பூக்கள் காலையில் பறிக்கப்படும், அப்போதுதான் இதமாக இருக்கும். அதில் உள்ள தண்ணீர் காய்திருக்கும். கழுவி அவற்றை துணியில் போட்டு உலர்த்த வேண்டும். டீத்தூளை முதலில் சேர்த்துவிட்டு பூக்களை போட்டு அடுத்து மீண்டும் வழக்கமான டீத்தூளை சேர்க்கவேண்டும். அதன் மேல் ஒரு எடையை வைத்துக்கொள்ளவேண்டும்.

இதை 24 மணி நேரம் அப்படியே வைக்கவேண்டும். மல்லிகைப்பூவின் மணம் நன்றாக அந்த டீத்தூளுடன் சேர்ந்துவிடும். இந்த டீக்கு நீங்கள் வெள்ளை அல்லது ப்ளாக் டீத்தூளை பயன்படுத்திக்கொள்ளலாம். காய்ந்த மல்லிகைப் பூக்களின் இதழ்களை நீங்கள் டீக்கு பயன்படுத்தவேண்டும். இது மல்லிகைப் பூக்களின் மணத்தை தரும். மல்லிகைப்பூக்கள் டீயை தயாரிக்க ஒரு கப் கொதிக்கும் தண்ணீரில் மல்லிகை டீத்தூள் சேர்த்து நன்றாக கலந்து வடிகட்டி பருகவேண்டும்.

மல்லிகைப் பூ தேநீர் உங்களுக்கு தரும் நன்மைகள்

உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது

மல்லிகைப்பூ டீ என்பது உங்களை அமைதிப்படுத்தும் தன்மைகொண்டது. இது உங்களின் உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கும். இதன் நறுமணம், உங்களை அமைதிப்படுத்தும். உங்களுக்கு அமைதியான உறக்கத்தை தரும்.

மனஅழுத்தத்தை குறைக்கும்

மல்லிகைப் பூக்களின் இதமான குணமும், இனிமையான குணமும், அதன் இதமான தன்மைக்கு மிகவும் புகழ்பெற்றது. இது உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கும். உங்களின் பதற்றத்தைப் போக்கும். மல்லிகை எண்ணெயை முகர்வது உங்களுக்கு மன அமைதியை ஏற்படுத்தும். உங்களை அமைதியாக்கி, உங்கள் மனநிலையை மாற்றும்.

சரும ஆரோக்கியம்

மல்லிகை சருமத்துக்கு பொலிவு தரும் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிரான தன்மைகள் சருமத்தை காக்கும். இது உங்களுக்கு எற்படும் சரும எரிச்சலைப் போக்கும். முகப்பருக்களைக் குறைக்கும், உங்கள் சருமத்துக்கு நீர்ச்சத்தைக் கொடுக்கும். சரும கிரீம்கள் மற்றும் முக்கிய எண்ணெய்களில் கலக்கப்படும்.

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம்

மல்லிகைப்பூக்களில் கேட்சின்கள் மற்றும் ப்ளாவனாய்ட்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள செல்களை காக்கிறது. உங்கள் உடலில் ஃப்ரி ராடிக்கல்கள் உருவாக்கும் செல் சேதத்தையும் ஆக்ஸிடேடிட்டிவ் அழுத்தத்தையும் போக்குகிறது.

இந்த நறுமணம் தரும் மலரில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இதில் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது இதய ஆரோக்கியம் மற்றும் வாயுத்தொல்லைகளை போக்குகிறது. மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயை முறையாகப் பராமரிக்கிறது.

இதுமட்டுமின்றி மல்லிகைப் பூக்கள் செரிமான ஆரோக்கியம், இதய ஆரோக்கியம், உடல் எடை குறைப்பு, மூளை ஆற்றலை அதிகரிக்கும் நன்மைகளையும் உங்கள் உடலுக்கு கொடுக்கிறது. எனவே மல்லிகைப்பூ டீத்தூள் சந்தையில் விற்பனையில் உள்ளது அவற்றை வாங்கி பயன்படுத்துங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், உணவுகள் மற்றும் பானங்கள், கழிவுநீக்க சாறுகள் என பலவற்றையும், ஆரோக்கிய குறிப்புகளையும், தகவல்களையும் ஹெச்.டி. தமிழ் உங்களுக்காக தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. இவற்றை பயன்படுத்தி பலன்பெற எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள். ஆரோக்கியமுடன் வாழ வாழ்த்துக்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி