தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vaval Fish Gravy : படிக்கும்போதே நாவில் எச்சில் ஊறுதா? மணம் மயக்கும் சுவையில் பொரிச்ச வாவல் மீன் குழம்பு ரெசிபி இதோ!

Vaval Fish Gravy : படிக்கும்போதே நாவில் எச்சில் ஊறுதா? மணம் மயக்கும் சுவையில் பொரிச்ச வாவல் மீன் குழம்பு ரெசிபி இதோ!

Priyadarshini R HT Tamil
Apr 12, 2024 11:50 AM IST

Fish Gravy : சாதம், இட்லி, தோசை என எல்லாவற்றிற்கும் சூப்பராக இருக்கும். இந்த மீன் குழம்பிற்கு தக்காளி மற்றும் புளி சேர்க்கத் தேவையில்லை. இதே முறையில் வாவல் மட்டுமின்றி அதிகம் முள்ளில்லாத இதே வடிவ கறித்துண்டுள்ள நெய் மீன் (வஞ்சிரம்) பாறை, விரால், வெள வகை மீன்களில் இந்தக் குழம்பை வைத்து அசத்தலாம்.

Vaval Fish Gravy : படிக்கும்போதே நாவில் எச்சில் ஊறுதா? மணம் மயக்கும் சுவையில் பொரிச்ச வாவல் மீன் குழம்பு ரெசிபி இதோ!
Vaval Fish Gravy : படிக்கும்போதே நாவில் எச்சில் ஊறுதா? மணம் மயக்கும் சுவையில் பொரிச்ச வாவல் மீன் குழம்பு ரெசிபி இதோ!

ட்ரெண்டிங் செய்திகள்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

(முதலில் அரைக்கிலோ வாவல் மீன் துண்டுகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு தலா ஒரு ஸ்பூன் தூவி, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அனைத்தையும் மீனின் எல்லா பக்கமும் சேரும்படி கலந்து கைகளால் பிரட்டி விட்டு இந்த கலவையை அரை மணி நேரம் நன்றாக ஊறவிடவேண்டும்)

கடுகு – அரை ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

தேங்காய் – அரை மூடி

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

கடாயை அடுப்பில் சூடாக்கி எண்ணெய் எதுவும் சேர்க்காமல் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். அதை ஆறவிட்டு மிக்ஸியில் பவுடராக அரைத்துக்கொள்ள வேண்டும். பின் இவற்றுடன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், அரை மூடி தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் என அனைத்தும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

இதை தனியே வைத்துவிட்டு, ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி, தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, அது சூடானதும் அடுப்பை மிதமான தீயில் எரியவிட்டு மீன் துண்டுகளை அதில் வரிசையாக அடுக்கி பொரிக்கவேண்டும். இது ஒருபுறம் நன்றகாக பொரிந்தவுடன், எல்லா புறமும் மீனை திருப்பிப்போட்டு ஒரே சீராக பொரித்தெடுத்து அவற்றை தனியே வைக்கவேண்டும்.

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

இஞ்சி – பூண்டு விழுது – 2 ஸ்பூன்

கஷ்மீரி மிளகாய் தூள் – அரை ஸ்பூன்

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, 2 நிமிடங்கள் நன்றாக வதக்கவேண்டும்.

பின்னர் இதில் மிக்ஸியில் அரைத்த மசாலாவை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறி, அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கிளறிவிட்டு, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும்.

எண்ணெய் பிரிந்து வந்தவுடன், அதில் 250மிலி தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துவிட்டு ஒரு கொதி வந்ததும், அரை ஸ்பூன் கஷ்மீரி மிளகாய் தூள் தூவி நன்றாக ஒரு நிமிடம் கிளறவேண்டும். பின்னர் இதில் பொரித்த மீன் துண்டுகளை போட்டு, 2 பச்சை மிளகாய்களை நீளவாக்கில் நறுக்கிப்போட்டு கலந்து கடாயை ஒரு மூடி போட்டு 10 நிமிடங்ஙகள் மட்டும் வேகவிடவேண்டும்.

ஒரு கைப்பிடி துணியின் உதவியோடு கடாயை இரு கைகளால் எடுத்து குழம்பை சட்டியுடன் இட வலமாக சுழற்றி (மீன் உடையாது) கீழே வைக்கவேண்டும். மொறு மொறுப்புடன் குழம்பில் ஊறிய மென்மையும் கலந்த, ருசியில் பிரமாதப்படுத்தும் மீன்குழம்பு இது. இதை படிக்கும்போது நாவில் எச்சில் ஊறுகிறதா? செய்து சாப்பிட்ட மகிழுங்கள்.

சாதம், இட்லி, தோசை என எல்லாவற்றிற்கும் சூப்பராக இருக்கும். இந்த மீன் குழம்பிற்கு தக்காளி மற்றும் புளி சேர்க்கத் தேவையில்லை. இதே முறையில் வாவல் மட்டுமின்றி அதிகம் முள்ளில்லாத இதே வடிவ கறித்துண்டுள்ள நெய் மீன் (வஞ்சிரம்) பாறை, விரால், வெள வகை மீன்களில் இந்தக் குழம்பை வைத்து அசத்தலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்