Coconut Milk Rice : பிரியாணி பிரியர்கள் அடிக்கடி செய்து சாப்பிட ஏற்றது தேங்காய்ப்பால் சாதம்!
Feb 18, 2024, 10:21 AM IST
Coconut Milk Rice : பிரியாணி பிரியர்கள் அடிக்கடி செய்து சாப்பிட ஏற்றது தேங்காய்ப்பால் சாதம்!
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
தேங்காய் – ஒரு மூடி துருவியது
பச்சை பட்டாணி – கால் கப்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறவேண்டும்)
இஞ்சி-பூண்டு விழுது – அரை ஸ்பூன்
கிராம்பு – 3
பட்டை – 3 சிறிய துண்டுகள்
சோம்பு – அரை ஸ்பூன்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லித்தழை – கைப்பிடியளவு
நெய்யில் வறுத்த முந்திரி ஒரு கைப்பிடி உங்களுக்கு தேவைப்பட்டால் பயன்டுத்திக்கொள்ளலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம். சேர்க்க நினைத்தால் 3 டேபிள் ஸ்பூன் நெய்யில் ஒரு கைப்பிடி முந்திரியை வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
செய்முறை
அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கழுவி கொள்ளவேண்டும்.
பின் தண்ணீரை முழுவதும் வடிகட்டி 10 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும்.
தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வடிகாட்டி பால் எடுத்துக்கொள்ளவேண்டும். பிழிந்த தேங்காயை மீண்டும் ஒருமுறை அரைத்து பின்னர் இரண்டாவது பால் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அளவிற்கு பால் ஒரு கப் தேவைப்படும். அதோடு அரை கப் தண்ணீர் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு சிறிய குக்கரில் நெய் விட்டு சூடானதும், பட்டை - கிராம்பு மற்றும் சோம்பு சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வதக்க வேண்டும். பின்னர், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து தொடர்ந்து வதக்கிக்கொண்டே இருக்க வேண்டும். பச்சை வாசம் போனவுடன், பச்சை பட்டாணி சேர்த்து சிறிது நேரம் லேசாக வதங்கியதும் தேங்காய்ப்பாலை கலந்து கொள்ளவேண்டும்.
பின் ஊறவைத்த அரிசியில் இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு சேர்த்து அதோடு தேவையான அளவு உப்பு கலந்து மூடி போட்டு 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவேண்டும்.
சாதத்தை மெதுவாக கிளறி பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி, அதன் மீது மல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கரண்டி காம்பில் கிளறவிடவேண்டும். கிளறும்போத சாதம் குழைந்து விடாமல் கவனமாக இருக்கவேண்டும். குருமா அல்லது கிரேவியோடு பரிமாறவேண்டும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் காரம் அதிகம் இருக்காது. அதனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேங்காய்ப்பாலில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்
100 மில்லி லிட்டர் தேங்காய் பாலில் 169 கலோரிகள் உள்ளது. 1.1 கிராம் புரதச்சத்துக்களும், 16.9 கிராம் கொழுப்பும், 14.6 சாச்சுரேடட் கொழுப்பும், 3.3 கிராம் கார்போஹைட்ரேட்டும், 2 கிராம் சர்க்கரையும் உள்ளது.
தேங்காய்ப்பால் அனைவருக்கும் ஏற்ற ஒரு சிறந்த உணவு. வயிற்றில் உள்ள அல்சரை குணப்படுத்த உதவுகிறது. பாலில் உள்ள லாக்டோஸ் இதில் கிடையாது என்பதால், பாலுக்கு பதில் இதை பயன்படுத்தலாம். சைவ உணவுப்பிரியர்களுக்கு ஏற்றது. இதில் அலர்ஜி, பூஞ்ஜை மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது. இது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்