தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குண்டு குண்டு பணியாரம்; இனிப்பான பாசிப்பருப்பு பணியாரம்; ஆரோக்கியம் நிறைந்தது; உடலுக்கு ஆற்றலும் தரும்!

குண்டு குண்டு பணியாரம்; இனிப்பான பாசிப்பருப்பு பணியாரம்; ஆரோக்கியம் நிறைந்தது; உடலுக்கு ஆற்றலும் தரும்!

Priyadarshini R HT Tamil

Nov 09, 2024, 01:48 PM IST

google News
குண்டு குண்டு பணியாரம், இனிப்பான பாசிப்பருப்பு பணியாரம், ஆரோக்கியம் நிறைந்தது. உடலுக்கு ஆற்றலும் தரும் சிறந்த மாலை நேர சிற்றுண்டியாகும்.
குண்டு குண்டு பணியாரம், இனிப்பான பாசிப்பருப்பு பணியாரம், ஆரோக்கியம் நிறைந்தது. உடலுக்கு ஆற்றலும் தரும் சிறந்த மாலை நேர சிற்றுண்டியாகும்.

குண்டு குண்டு பணியாரம், இனிப்பான பாசிப்பருப்பு பணியாரம், ஆரோக்கியம் நிறைந்தது. உடலுக்கு ஆற்றலும் தரும் சிறந்த மாலை நேர சிற்றுண்டியாகும்.

அருமையான சுவை தரும் பாசிபருப்பு பணியாரம். இனிப்பு சுவைக்காக வெல்லம் மட்டுமே சேர்ப்பதால், இது சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட. இதில் நாம் அரிசி மற்றும் ரவை என எதுவும் சேர்க்காமல் செய்வதால், இது மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்கு ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். இந்த பணியாரத்தை எளிதாக செய்து முடித்துவிடலாம். பாசிபருப்பை எடுத்து நன்றாக இருமுறை அலசவேண்டும். பின்னர் தண்ணீர் ஊற்றி ஒருமுறை ஊறவைக்கவேண்டும். இதை மிக்ஸியிலே அரைத்துக்கொள்ளலாம். பணியாரத்துக்கான மாவை மிகவும் நைசாகவோ அல்லது மிகவும் கொரகொரப்பாகவோர அரைக்கக்கூடாது. மிதமான அளவில் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் பணியாரம் நன்றாக இருக்கும். இந்த பணியாரத்தை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பணியாரம் என்பது செட்டிநாடு ரெசிபிக்களில் மிக முக்கிய இடம் பிடிக்கும். பொதுவாக பணியாரம் அரிசியில் செய்யப்படும். தற்போது சிறு தானியங்களிலும் பணியாரங்களை செய்கிறார்கள். அது நல்ல ருசியானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது.

தேவையான பொருட்கள்

பாசிபருப்பு – கால் கிலோ

வெல்லம் – கால் கிலோ

ஏலக்காய் – 2

அரிசி மாவு - 6 ஸ்பூன்

உப்பு – கால் ஸ்பூன்

தேங்காய் துருவல் – ஒரு கப்

நெய் – 4 ஸ்பூன்

திராட்சை – 10

எள் – அரை ஸ்பூன்

(முந்திரி, திராட்சை, எள் இவை இல்லாமல் கூட செய்யலாம். இவற்றை விருப்பப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்)

நெய் அல்லது எண்ணெய் – பணியாரம் பொரித்து எடுக்க தேவையான அளவு

செய்முறை

நன்றாக அலசி ஒரு மணி நேரம் ஊறவைத்த பாசிபருப்பை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதிகம் தண்ணீர் சேர்த்துவிடக்கூடாது.

அடுத்து வெல்லத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி அது கரைந்தவுடன் வடிகட்டி இந்த மாவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். வெல்லம் கரைந்தால் போதும். பாகுபதம் ஏற்படக்கூடாது.

தேங்காயை நெய்யில் வதக்கி அந்த மாவில் சேர்க்கவேண்டும். உடனே எள், முந்திரி, திராட்சையையும் வதக்கி சேர்த்துக்கொள்ளவேண்டும். அரிசி மாவையும் சேர்த்து நல்ல தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவேண்டும்.

அதிகம் தண்ணீர் சேர்த்து விடக்கூடாது. அதிகம் தண்ணீர் சேர்த்தால் மாவு ஒட்டிக்கொள்ளும். எனவே அரிசி மாவை சேர்த்து தண்ணீர் அதிகம் இருந்தால் அட்ஜட்ஸ் செய்துகொள்ளவேண்டும்.

பணியார சட்டியில் நெய் அல்லது எண்ணெய் முக்கால் குழி நிறையும் அளவு ஊற்றி, அது சூடானவுடன் பணியாரத்தை ஊற்றி எடுக்கவேண்டும். அடுப்பை மிதமான தீயிலே வைத்துக்கொள்ளவேண்டும். அதிக தீயில் வைத்தால் பணியாரம் கருகிவிடும்.

பணியாரத்தை மூடி வைத்து, இருபுறமும் வேகவைத்து பிரட்டி விட்டு பொன்னிறமானவுடன் எடுக்கவேண்டும். சூப்பர் சுவையான பாசிபருப்பு பணியாரம் தயார். இதை மாலை நேரத்தில் பள்ளி விட்டு, வீடு திரும்பும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதன் சுவை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவரகளுக்கும் பிடிக்கும். எனவே தினமும் வேண்டும் என்று கேட்பார்கள். ஒருமுறை ருசித்தால், மீண்டும், மீண்டும் சாப்பிடத்தூண்டும் சுவை கொண்டதாக இருக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகின்றன. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி