தித்திக்கும் பால் பணியாரம்! இன்னைக்கே செஞ்சு பாருங்க! மாஸ் ரெசிபி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தித்திக்கும் பால் பணியாரம்! இன்னைக்கே செஞ்சு பாருங்க! மாஸ் ரெசிபி இதோ!

தித்திக்கும் பால் பணியாரம்! இன்னைக்கே செஞ்சு பாருங்க! மாஸ் ரெசிபி இதோ!

Suguna Devi P HT Tamil
Nov 07, 2024 05:21 PM IST

பால் பணியாரம் மிகவும் சுவையானதாக இருக்கும். குழந்தைகள் இது போன்ற இனிப்பு பண்டத்தை விரும்பி சாப்பிடவும் செய்வர். வீட்டிலேயே இந்த சுவையான பால் பணியாரம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

தித்திக்கும் பால் பணியாரம்! இன்னைக்கே செஞ்சு பாருங்க! மாஸ் ரெசிபி இதோ!
தித்திக்கும் பால் பணியாரம்! இன்னைக்கே செஞ்சு பாருங்க! மாஸ் ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள்

1 கப் உளுத்தம் பருப்பு

2 கப் சர்க்கரை

1 தேங்காய்

6 ஏலக்காய்

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

முதலில் அரிசி மற்றும் உழுந்தை 3 மணி நேரம் ஊற வைத்து பின்னர் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இது தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் நறுக்கிய தேங்காய், ஏலக்காய் போட்டு பொடியாக்கி கொள்ளவும். பின்னர் இந்த தேங்காயை வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தேங்காய் பாலில் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பணியாரத்தை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும். எண்ணெய் சூடான பின்பு அதில் நாம் செய்து வைத்திருக்கும் மாவை நம் கைகளின் மூலம் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக கடாயின் அளவிற்கேற்ப போடவும். பின்னர் பணியாரம் ஒரு புறம் வெந்ததும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது வெந்ததும் அதை எடுத்து எண்ணெய்யை ஜல்லி கரண்டியின் மூலம் நன்கு வடித்து ஒரு தட்டில் போட்டு வைத்து கொள்ளவும்.

இவ்வாறு மீதமுள்ள மாவையும் எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும். பணியாரம் ஒன்றோடு ஒன்று ஓட்டி கொண்டிருந்தால் அதை இப்பொழுதே பிரித்து வைத்து கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த பணியாரத்தை போட்டு எடுப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீரை சுட வைக்கவும். தண்ணீர் சுட்டதும் அதில் நாம் பொரித்து வைத்திருக்கும் பணியாரத்தை போட்டு தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பணியாரத்தை எடுத்து ஒரு வடிகட்டியில் போட்டு தண்ணீரை நன்கு வடிய விடவும். இவ்வாறு செய்வதால் பணியாரம் எளிதாக தேங்காய் பாலில் ஊறி விடும். தண்ணீர் வடிந்தவுடன் பணியாரத்தை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் தேங்காய் பாலில் போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விட்ட பின்பு அதை பரிமாறவும்.

இந்த பால் பணியாரத்தை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். மிகவும் இனிப்பாகவும், சுவையாகவு இருக்கும். இந்த சுவையான பணியாரத்தை நீங்களும் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து மகிழுங்கள். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.