சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு வித்தியாசமா ஸ்வீட் ரொட்டி செய்து கொடுங்க.. ருசி அட்டகாசமா இருக்கு..
Nov 06, 2024, 06:28 PM IST
குழந்தைகளுக்கான பிரத்யேக காலை உணவைச் செய்ய வேண்டுமா? இங்கே நாம் இனிப்பு ரொட்டி செய்முறையை கொடுத்துள்ளோம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
காலையில் சாப்பிடும் காலை உணவில் அதிக சத்துக்கள் இருக்க வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். ஆனால் நாம் செய்து கொடுக்கும் பல உணவுகளை குழந்தைகள் விரும்புவதில்லை. அதனால்தான் அவர்களுக்காக பிரத்யேகமாக சமைக்க வேண்டும். சில சமயம் அவர்களுக்கு இனிப்பு சாப்பிட ஆசையும் இருக்கும். இனிப்புகளை எப்படி ஊட்டச்சத்து நிறைந்ததாகமாற்றுவது என்று தாய்மார்கள் சிந்திக்க வேண்டும். இங்கே நாம் இனிப்பு ரொட்டி அல்லது இனிப்பு சப்பாத்தி செய்முறையை கொடுத்துள்ளோம். இந்த சப்பாத்தி சாப்பிட ஊறுகாய் தேவையில்லை. தனியாக ஒரு குழம்பு, குருமா சட்னி என எதுவும் தேவை இல்லை. அதனால் இந்த சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும், இது மிகவும் சுவையாக இருக்கும். தாய்மார்கள் இதைச் செய்வது எளிது. எனவே உங்கள் குழந்தைக்கு அவ்வப்போது இதைச் செய்யுங்கள். காலை உணவாக சாப்பிட்டால், மதியம் சாப்பிடும் வரை பசியே இருக்காது.
ஸ்வீட் ரொட்டி ரெசிபிக்கு தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - கால் கிலோ
வாழைப்பழம் - இரண்டு
பால் - இரண்டு ஸ்பூன்
நெய் - இரண்டு ஸ்பூன்
சர்க்கரை - நான்கு கரண்டி
இனிப்பு ரொட்டி செய்முறை
1. பழுத்த வாழை பழங்களை இனிப்பு ரொட்டி செய்ய எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு கைகளால் நன்கு பிசைய வேண்டும்.
3. வாழைப்பழத்தில் கோதுமை மாவை சேர்த்து நன்கு கலக்க வேண்ம்.
4. மேலும் இரண்டு ஸ்பூன் நன்றாக காய்ச்சி பின் ஆறிய பாலை சேர்க்க வேண்டும்.
6. சப்பாத்தி மாவு போல் கெட்டியாகும் வரை மாவை பிசைந்து எடுத்து கொள்ள வேண்டும்.
7. இப்போது அதிலிருந்து ஒரு சிறிய உருண்டையை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து எடுத்து கொள்ள வேண்டும். கடாயில் வைத்து இருபுறமும் வேக வைத்து எடுக்க வேண்டும். இதன் மேல் எண்ணெய் அல்லது நெய் தடவி வேக வைக்கலாம். நெய் தடவினால் ருசி அட்டகாசமாக வரும்
8. இரண்டு புறமும் வேக வைத்து எடுத்தால் அவ்வளவுதான், சுவையான இனிப்பு ரொட்டி தயார்.
9. இதில் வாழைப்பழம் மற்றும் கோதுமை மாவை பயன்படுத்தியிருப்பதால் குழந்தைகளுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கும்.
10. குறிப்பாக குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது, அவர்களின் உணவைப் பற்றி நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லை.
இனிப்பு ரொட்டி குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பிடிக்கும். சர்க்கரை பிடிக்காதவர்கள் அதில் வெல்லத்தைப் பயன்படுத்தலாம். வெல்லமும் சுவையாக இருக்கும். மேலும், வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். அதனால் விரைவில் பசி எடுக்காது. அதே சமயம் சர்க்கரை நோயாளிகள் இந்த ரொட்டியை தவிர்ப்பது நல்லது. அல்லது குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
டாபிக்ஸ்