சப்பாத்தி பிரியர்களா நீங்கள்? மிருதுவாக, சூப்பர் சுவையில் செய்வது எப்படி? இதோ இந்த டிப்ஸ்கள் உதவும்!
சப்பாத்தி பிரியர்களா நீங்கள்? ஆனால் சப்பாத்தி எப்போது பிசைந்தாலும் மிருதுவாக, சூப்பர் சுவையில் வர மாட்டேன் என்கிறதா? எனவே சூப்பர் சுவையில், மிருதுவான சாப்பாத்தி செய்ய இதோ இந்த டிப்ஸ்கள் உதவும்.
சப்பாத்தி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று. குழந்தைகளுக்கு சப்பாத்தி இருந்தால் போதும். ஸ்னாக்ஸ் கூட தேவையில்லை. அதுவே பூரியென்றால், கேட்கவே வேண்டாம். முடிந்த அளவுக்கு சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால் சப்பாத்தி செய்யும்போது அதை மிருதுவாகவும் செய்வதற்கு உங்களுக்கு சில குறிப்புகள் தேவைப்படும். ஏனெனில் சிலருக்கு மிருதுவான சப்பாத்தியே செய்ய வராது. அவர்களின் சப்பாத்தி மிகவும் கடினமாக இருக்கும். அதற்கு அவர்களும் பல்வேறு வழிகளை கடைபிடித்திருப்பார்கள். ஆனால் பலன்கொடுக்காது. ஒரு சிலருக்கு ஒவ்வொரு முறையும் ஒரு மாதிரி சப்பாத்தி வரும். எனவே சில நேரம் மிருதுவாக இருக்கும். சில நேரம் கடினமாக இருக்கும். எனவே நீங்கள் சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புக்களைப் பின்பற்றினால், உங்கள் சப்பாத்தி எப்போதும் மிருதுவானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். கட்டாயம் பின்பற்றி உங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் சப்பாத்தியை செய்து அசத்துங்கள்.
உங்கள் குழந்தைகளை சப்பாத்தி சாப்பிட வைக்கவேண்டுமா?
சப்பாத்தி செய்து அதன் மேல், சர்க்கரை, ஏலக்காய் கலந்த தேங்காய் பாலை ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்து பின்ன குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த சாப்பாத்தி சுவை நிறைந்ததாகவும் இருக்கும்.
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது நீங்கள் பின்பற்ற வேண்டியவை?
எண்ணெய் மற்றும் நெய் கலந்து சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் ஒரு டேபிள் ஸ்பூன் என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த அளவு சுலையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
சப்பாத்திக்கு மாவுப் பிசையும்போது, அதனுடன் இரண்டு கைப்பிடியளவு கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி நிறமாகவும், மணமாகவும் இருக்கும். சுவையும் வித்யாசமாக இருக்கும்.
சப்பாத்தி மாவு மீந்தால் என்ன செய்யவேண்டும்?
சப்பாத்தி மாவு மீதமிருந்தால் மாவின் மீது எண்ணெய் தடவி வைத்தால் காய்ந்து போகாமல் இருக்கும். சப்பாத்தி செய்யும்போது கல் சூடானதும் ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து பின்னர் எண்ணெய் ஊற்றி சப்பாத்தி சுட்டால் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.
சப்பாத்தி மாவை நன்றாகத் தேய்த்து, அதன் மேல் எண்ணெய் ஊற்றி நான்காக மடித்து மீண்டும் ஒருமுறை தேய்த்தால், சப்பாத்தி நன்றாக உப்பி வரும். மிருதுவாகவும் இருக்கும்.
சப்பாத்திக்கு தேய்க்கும்போது மாவை தொட்டு, சப்பாத்தியை தேய்த்து, பின்னர் எண்ணெய் ஊற்றி தேய்த்தால், சப்பாத்தி சுடும்போது அதிக எண்ணெய் ஊற்றும் தேவை இருக்காது.
சப்பாத்தி தேய்க்கும்போது மெல்லியதாக இல்லாமல் சற்று கனமாக தேய்த்தால் சப்பாத்தி மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிது பாலையும் சேர்த்துக் கொண்டால் சுவை அதிகரிக்கும்.
சூடான தண்ணீரில் மாவைப் பிசைவதால், பிசையும்போதே மாவு சற்று வெந்துவிடும். பிறகு லேசாக சூடு செய்தாலே போதும் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
இதுபோல் சப்பாத்தி செய்து பாருங்கள், உங்கள் வீட்டில் பல் இல்லாத பெரியவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இவற்றை பின்பற்றினால், தினமும் சாப்பாத்திதான் சாப்பிடுவீர்கள்.
இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே அரிய பல தகவல்கள் மற்றும் வித்யாசமான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்