குளிர் காலத்தில் ஏற்படும் சரும வறட்சி; இந்த பழங்கள் சாப்பிட பளபளக்கும்! முயற்சித்து பாருங்கள்!
Dec 02, 2024, 10:33 AM IST
குளிர் காலத்தில் சாப்பிட ஏற்ற பழங்கள் என்ன?
குளிர் காலத்தில் கடும் சரும வறட்சி ஏற்படும். அதற்கு அதில் உள்ள நீர்ச்சத்துக்கள் குறைவதுதான் காரணமாகும். ஏனெனில், நாம் குளிர் காலத்தில் போதிய அளவு தண்ணீர் பருகமாட்டோம். குளிர் காலத்தில் நாம் பருகும் தண்ணீரின் அளவு இயற்கையாகவே குறைந்துவிடும். எனவே குளிர் காலத்தில் பருகும் தண்ணீரின் அளவு குறைவதால் சருமத்தில் வறட்சி ஏற்படும். அதற்கு பதில் நாம் நிறைய பழங்களை எடுத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் அவற்றில்தான் எண்ணற்ற வைட்டமின்கள் உள்ளன. உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பளபளக்கும் சருமத்தைக் கொடுப்பது அத்தனை எளிய காரியமல்ல, ஆனால் பழங்கள் அந்த வேலையை எளிதாக செய்துவிடும். ஏனெனில் பழங்களில் எண்ணற்ற ஊட்டச்சசத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. எனவே சில குளிர் கால பழங்கள் உங்களுக்கு தெளிவான மற்றும் பளபளக்கும் சருமத்தைக் கொடுக்கும். அவை என்னவென்று பார்க்கலாம்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயை நீங்கள் இந்த குளிர் காலத்தில் கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் இதில் சருமத்தை பளபளப்பாக்கும் வைட்டமின்கள் உள்ளது. இதில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்களுக்கு தெளிவான சருமத்தைத் தரும். உங்கள் தலைமுடியை அடர்த்தியாக்கும்.
அவகேடோ
உங்களுக்கு மிருதுவான, இளமையான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமெனில், அவகேடோக்களை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். எனெனில் அவற்றில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. இது உங்கள் சருமத்துக்கு இயற்கையான பளபளப்பைத் தருகிறது.
ஆரஞ்சு பழங்கள்
ஆரஞ்சுப் பழங்கள், உங்கள் சருமத்தை வறட்சி மற்றும் முகப்பருக்களில் இருந்து காக்கிறது. இது பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுகிறது. உங்கள் முகத்துக்கு புதுப்பொலிவு கொடுக்கிறது. உங்கள் முகத்தை எப்போதும் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
மாதுளை பழங்கள்
குளிர் காலத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய முக்கிய பழமாக மாதுளை உள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. மேலும் நார்ச்சத்துக்கள், மினரல்கள், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ, சி மற்றும் இ சத்துக்கள் உள்ளன. இது உங்கள் சருமத்துக்கு பளபளப்பைத் தருகிறது. இதனால் உங்கள் சருமம் ஆரோக்கியம் பெறுகிறது.
கிவி
கிவி பழத்தில் வைட்டமின் சி, இரும்புச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை வயோதிக தோற்றம் இளம் வயதிலேயே ஏற்படாமல் தடுக்கின்றன. உங்கள் சருமத்துக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் பளபளப்பைத் தருகின்றன.
ஸ்ட்ராபெரி
சிவப்பு நிற ஸ்ட்ரா பெரிகளில் ஃபோலேட்கள், மாங்கனீஸ்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது உங்கள் சருமத்துக்கு இயற்கையான பளபளப்பைத் தருகிறது. உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
திராட்சைகள்
ஒவ்வொரு நிற திராட்சையிலும், ஒவ்வொரு சத்து உள்ளது. ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு சுவையானது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. உங்கள் முகப்பருக்களை குறைக்கிறது. உங்களுக்கு பளபளப்பான மற்றும் தெளிவான சருமத்தைத் தருகிறது. திராட்சைக்கு உங்கள் சருமத்தை பளபளப்பாக்கும் தன்மை மற்றும் வீக்கத்தை குறைக்கும் தன்மைகள் உள்ளன.
கிரேப்ஃப்ரூட்
ஆரஞ்சு போலவே தோற்றம் கொண்ட கிரேப்ஃப்ரூடில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவை சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் ஆக்குகின்றன. இது உங்கள் சருமத்தை புறஊதாக்கதிர்களிடம் இருந்து காக்கின்றன. இது உங்களை ஃப்ரி ராடிக்கல்களிடம் இருந்தும் காக்கிறது.
டாபிக்ஸ்