வரமல்லி விதைகளை வறுத்துப்பொடித்து தினமும் காலையில் தேநீர் செய்து ஏன் பருகவேண்டும் தெரியுமா?
Dec 02, 2024, 07:00 AM IST
வரமல்லி விதை தேநீரில் உள்ள நன்மைகள் என்ன?
வரமல்லியின் விதைகளை வறுத்துப்பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியில் இருந்து தேநீரை தயாரித்து தினமும் காலையில் பருகினால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். வரமல்லி விதைகளில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. இதை நீங்கள் அன்றாட உணவில் எடுத்துக்கொள்ள உகந்தது. இது ஒரு மூலிகை தேநீராகும். இதில் உங்கள் காலையை சக்தி வாய்ந்ததாக மாற்றும் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இதில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் சிகிச்சை தரும் உட்பொருளால் இந்த தேநீர் நமது முன்னோர்கள் என பல தலைமுறைகளாக நமது அன்றாட பயன்பாட்டில் உள்ளது. இது உங்களுக்கு பாரம்பரியாகப் பயன்படுத்தப்படுவதோடு மட்டுமின்றி எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. இந்த தேநீரை சிறப்பாக்குவது என்ன?
செரிமானம்
உங்களுக்கு செரிமான பிரச்னைகள் இருந்தால், இந்த வரமல்லி விதைகளை காலையில் பருகும்போது அது உங்களுக்கு இயற்கையான செரிமான ஆற்றலைத் தருகிறது. இது செரிமான மண்டலத்துக்கு வலுதரும் இயற்கை பூஸ்டர் ஆகும். இது உங்கள் செரிமான எண்சைம்கள் மற்றும் பித்த உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இது உங்கள் உணவை சரியான முறையில் உடைக்க உதவுகிறது.
உங்கள் உடலின் கழிவுகளை இயற்கை முறையில் நீக்க உதவுகிறது
உங்கள் உள் உறுப்புக்களை வரமல்லி விதைகள் சேர்த்து தயாரிக்கப்படும் தேநீர் சுத்தம் செய்கிறது. இது ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. அந்த உட்பொருட்கள் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களைப் போக்குகிறது. நீங்கள் அதிகம் எடுத்துக்கொள்ளும் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உங்கள் உடலில் எண்ணற்ற நச்சுக்கள் உருவாகிறது. மேலும் எண்ணற்ற காரணிகளாலும் உங்கள் உடலில் நச்சுக்கள் தோன்றுகிறது.
சருமத்துக்கு ஏற்ற காலை நண்பன்
உங்கள் சருமத்தை நன்முறையில் பராமரிக்கும் விஷயங்கள் உங்கள் வீட்டு சமையலறையிலேயே இருக்கும்போது, நீங்கள் ஏன் சரும பராமரிப்புக்கு அதிகம் செலவு செய்வதுடன், அதிகம் கஷ்டப்படுகிறீர்கள்? வரமல்லி விதைகள் உங்கள் சரும ஆரோக்கியத்துக்கு ஏற்றது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உங்கள் சருமத்தின் நண்பனாகும். எனவே உங்கள் சருமம் சிவத்தல், பருக்கள், சோர்வு போன்றவற்றைப் போக்க நீங்கள் உங்கள் அன்றாட உணவில் கட்டாயம் மல்லி விதைகளை சேர்த்துக்கொள்ளவேண்டும். இது உங்கள் சருமத்துக்கு புத்துணர்வு மற்றும் பளபளப்பும் தரும்.
ரத்தச் சர்க்கரை அளவை சரிப்படுத்துகிறது
நீங்கள் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை அளவை கண்காணிப்பவர்களாக இருந்தால் உங்களுக்கு வரமல்லி விதைகள் தேநீர் இயற்கை தீர்வைக் கொடுக்கிறது. வரமல்லி விதைகள் பொடியை நீங்கள் தினமும் எடுத்துக்கொள்வது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை முறையாகப் பராமரிக்க உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோய் ஏற்படும் நிலைக்கு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
உடல் எடையை முறையாக பராமரிக்கவும் உதவுகிறது
உடல் எடை மேலாண்மை மிகவும் சிக்கலான ஒன்று கிடையாது. அதற்கு நீங்கள் மல்லி விதை தேநீரை அன்றாடம் பருகி வந்தாலே போதும். மல்லி விதைகள் தேநீர், உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் தண்ணீர் தக்கவைக்கும் தன்மையைக் குறைக்கிறது. இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுப்பதால், நீங்கள் காலையிலேயே அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படுவதுடன், சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் குறைகிறது. இது உங்கள் ஃபிட்னஸ் இலக்குகளை அடைய ஏற்றதாகும்.
வயிற்றை அமைதிப்படுத்துகிறது
உங்களுக்கு அசிடிட்டி, வாந்தி, வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும் என்றால், அதற்கு இந்த தேநீர் தீர்வு கொடுக்கிறது. இது உங்கள் வயிற்றின் எரிச்சலைப்போக்கி, உங்கள் வயிற்றை குளுமையாக்குகிறது. எரிச்சலுக்கு இதமளிக்கிறது மற்றும் உங்கள் குடலில் உள்ள பாக்டீரியாக்களைக் காக்கிறது. இதனால் உங்கள் குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. உங்கள் வயிற்றில் ஏற்படும் அசவுகர்யங்களில் இருந்து விடுபட உங்களுக்கு இந்த தேநீர் உதவும். இந்த இயற்கை தீர்வு உங்களுக்கு விரைவாக குணமளிக்கும்.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை காக்கிறது
வரமல்லி விதைகளில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் உட்பொருட்களான வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. எனவே தினமும் காலையில் இந்த வரமல்லி விதை தேநீரை பருகுவது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. தொற்றுக்களையும், நோய்களையும் விரட்டியடிக்க உதவுகிறது.
மனஅழுத்தத்தைக் குறைக்கிறது
நரம்பியல் மண்டலத்தை அமைதிப்படுத்தும் தன்மை வரமல்லி விதைகளுக்கு உள்ளது. இந்த தேநீரை பருகுவது உங்கள் உடலில் கார்டிசால் அளவுகளைக் குறைக்க உதவுகிறது. இது மனஅழுத்த ஹார்மோன்கள் ஆகும். இதை உங்கள் காலை தேநீராகப் பருகும்போது, அது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைத்தருகிறது. எனவே இந்த தேநீரை நீங்கள் உங்கள் அன்றாட வழக்கத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.
டாபிக்ஸ்