ரூ.1800 வரை புஷ்பா 2 டிக்கெட்.. ஒரு மாதம் கழித்து பிரியாணி மற்றும் பீருடன் ஓடிடியில் பார்க்கலாம் என நெட்டிசன் கருத்து!
ரூ.1800 வரை புஷ்பா 2 டிக்கெட்.. ஒரு மாதம் கழித்து பிரியாணி மற்றும் பீருடன் ஓடிடியில் பார்க்கலாம் என நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளனர்.
தென்னிந்தியாவின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து வரக்கூடிய டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ள திரைப்படம், புஷ்பா 2 தி ரூல்.
புஷ்பா 2 அட்வான்ஸ் புக்கிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இருப்பினும், புஷ்பா 2 படத்தின் டிக்கெட் விலை மிக அதிகமாகவுள்ளது.
புஷ்பா 2 ரூல் படத்தின் ஒரு டிக்கெட் விலை டெல்லியில் ரூ.1,800 வரையும், மும்பையில் புஷ்பா 2 ரூல் படத்தின் டிக்கெட் விலை ரூ.1,600ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பெங்களூருவில் புஷ்பா 2 படத்தின் டிக்கெட் விலை ரூ.1,000ஆக உள்ளது. இப்படம் முதல் நாளிலேயே அதிக வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், புஷ்பா 2 பிரீமியர் காட்சிகள் டிசம்பர் 4 முதல் தெலங்கானாவில் திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளன. புஷ்பா 2 ரூல் பிரீமியர் ஷோ மற்றும் ரசிகர்கள் ஷோ நடத்த தெலங்கானா அரசு அனுமதி அளித்துள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி இரவு 9:30 மணி முதல் பிரீமியர் காட்சிகள் திரையிடப்படும். புஷ்பா 2 பிரீமியர் ஷோவுக்கான டிக்கெட் விலை ரூ.800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புஷ்பா 1-உடன் ஒப்பிடும்போது அதிகவிலையில் விற்கப்படும் புஷ்பா 2:
டிசம்பர் 4ஆம் தேதி இரவு 9:30 மணி புஷ்பா 2 படத்தின் டிக்கெட் விலை சிங்கிள் ஸ்கிரீனில் பார்க்க ரூ.1121ஆகவும், மல்டிபிளக்ஸில் பார்க்க ரூ.1239 ஆகவும் உள்ளது என்றும் நெட்டிசன்கள் கோபமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
புஷ்பா 1 வெளியான முதல் நான்கு நாட்களில் சிங்கிள் ஸ்கிரீனில் ரூ.354 என டிக்கெட் விலையும், மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ரூ.531 என டிக்கெட் விலையும் வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புஷ்பா 2 படத்திற்கு இந்த டிக்கெட் ஆனது ரூ.800 என உயர்ந்துள்ளதால் நெட்டிசன்கள் கோபத்தில் உள்ளனர்.
புஷ்பா 2 படத்தின் டிக்கெட்டுகள் கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், சாமானிய பார்வையாளர்கள் சில நாட்களுக்குப் பார்க்கமுடியாத நிலையே நீடிக்கிறது. குறிப்பாக, புஷ்பா 2 படத்தை முதல் இரண்டு நாட்கள் பெரும்பாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்றும், அதன் பிறகு படம் நன்றாக இருந்தால் மட்டுமே பொது பார்வையாளர்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்றும், ஆகவே, முதல் நாள் டிக்கெட் விலை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மீதுதான் மொத்தமாக விழுந்துள்ளதாகவும் நெட்டிசன்கள் கொந்தளிக்கின்றனர்.
பீர் பிரியாணியுடன் ஓடிடியில் பார்க்கலாம் - நெட்டிசன்
"உங்களை யார் பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கச் சொன்னது? குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்களையும் எடுக்கலாம். புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டதுபோல, ஒவ்வொருவராக பிரமாண்ட படங்களை தயாரித்து மக்கள் மீது அதன் டிக்கெட் சுமையை திணித்து வருகின்றனர். இப்படி அதிகமாக செலவு செய்து சினிமா பார்ப்பதற்குப் பதிலாக, ஓடிடியில் பார்த்து முழு குடும்பமும் வசதியாக சாப்பிடலாம்" என்று ஒரு நெட்டிசன் கருத்து கூறியிருக்கிறார்.
மேலும், ‘’ ஒரு மாதம் காத்திருந்தால், பீர் பிரியாணியுடன் ஓடிடியில் அமைதியாகப் படத்தைப் பார்த்துவிடலாம்" என்று ஒரு நெட்டிசன் ட்வீட் செய்துள்ளார்.
‘’புஷ்பா 2 படத்தின் டிக்கெட் விலை ரூ.800 என்றால் ஒரு குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களைப் பார்க்க 3,200 ரூபாய் செலவு ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரவுடிகளாக வாழ்ந்த ஒரு கடத்தல்காரன் எப்படி வளர்ந்தான் என்பதைப் பார்ப்பது எல்லாம் ஒரு கதையா. கொடுமைடா" என்று மற்றொரு எக்ஸ் பயனர் ட்வீட் செய்துள்ளார்.
12,000 திரைகள் - 6 மொழிகள்
புஷ்பா 2 படத்தின் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், புஷ்பா 2 தி ரூல் டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் 12,000 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. புஷ்பா 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் பெங்காலி உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெளியாகிறது.