தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ‘புயல், மழைன்னு பொரட்டி போட்டுடுச்சா?’ இந்த ஜோக்ஸ் படிச்சு ரிலாக்ஸ் பண்ணிட்டு போங்க!

‘புயல், மழைன்னு பொரட்டி போட்டுடுச்சா?’ இந்த ஜோக்ஸ் படிச்சு ரிலாக்ஸ் பண்ணிட்டு போங்க!

Priyadarshini R HT Tamil

Dec 02, 2024, 09:28 AM IST

google News
நீங்கள் சிரித்து மகிழ சில ஜோக்குகள்.
நீங்கள் சிரித்து மகிழ சில ஜோக்குகள்.

நீங்கள் சிரித்து மகிழ சில ஜோக்குகள்.

ஜோக்குகள் என்றால் என்ன? ஜோக்குகள், நகைச்சுவை என்பது குறிப்பிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட வகையில் எழுதி மக்களை சிரிக்கவைப்பது ஆகும். ஆனால் அதுபோல் எழுதும்போது அது யார் மனதையும் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஜோக்குகள் கதைபோல் இருக்கலாம் அல்லது உரையாடல்களாக இருக்கலாம். முடிக்கும்போது பஞ்ச் லைன் சேர்க்கலாம். அதில் சிரிக்கக்கூடிய அம்சம் இருக்கவேண்டும். சிறிய ஜோக்குகளாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, படிக்கும்போதோ அல்லது படித்து முடித்த பின்னரோ உங்களுக்கு சிரிப்பு வரவேண்டும் அதுதான் ஜோக்குகள் எனப்படும். ஜோக் விடுகதைகளும் உள்ளன. அவற்றை உங்கள் குழந்தைகளிடம் கேட்டுகும்போது அவர்களின் சிந்தனைத்திறன் வளரும். ஜோக்குளின் நவீன வடிவம்தான் மீம்ஸ்கள். ஜோக்குகளை நீங்கள் கூறும்போது மற்றவர் கட்டாயம் சிரிக்கவேண்டும். ஆனால் அவர்கள் மனம் புண்படக்கூடாது.

சிந்திக்க வைக்கும் ஜோக்குகள்

சில ஜோக்குகள் சிந்தனையை தூண்டுவதாகவும் இருக்கவேண்டும். சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளிலும், சிலர் சிரிக்க மட்டுமே வைப்பார்கள். சிலர் சிரிக்கவும், சிந்திக்கவும் செய்வார்கள். அனைத்து கலாச்சாரங்களிலும் பொழுதுபோக்கு அம்சமாக ஜோக்குகள் உள்ளது. அச்சு ஊடக காலத்தில் அதில் ஜோக்குகள் எழுதப்படும். அதற்கு முன் தெருக்கூத்துகள் மற்றும் நாடகங்கள் என்ற நமது பாரம்பரிய ஊடகங்களிலும் இடையில் பபூன் வருவார்கள். ஜோக்குகள் செய்யும் நகைச்சுவை கலைஞர்களுக்கு பபூன், ஜோக்கர் என்ற பெயர்கள் உண்டு. அவர்கள் வித்யாசமாக உடை உடுத்தியிருப்பார்கள். சர்க்கஸ்களிலும் கோமாளிகள் இருப்பார்கள். அவர்களும் நம்மை மகிழ்விப்பார்கள்.

எனவே ஜோக்ஸ் மற்றும் ஜோக்கர்கள் என்பவர்களின் வேலை நம்மை மகிழ்விப்பதாகும். அடுத்து காட்சி மற்றும் வானொலி காலத்தில் அதிலும் ஜோக்குகள் இடம்பெற்றன. தற்போது மீம்ஸ்கள் சமூக வலைதளங்கள், இணைய பக்கங்களிலும் ஜோக்ஸ்களை காட்சிகளாகவும், வார்த்தைகளாகவும் எழுதி படித்து, சிரித்து, மகிழ்ந்து நமது நகைச்சுவை உணர்வுக்கு மதிப்புக் கொடுத்துக்கொள்கிறோம். இன்று சிந்தனைக்கு அல்ல; வாய் விட்டு சிரிச்சுட்டு மட்டும் போங்க. இதோ மொக்க ஜோக்குகள்.

உங்களை கலகலவென சிரிக்க வைக்கும் மொக்க ஜோக்குகள் இதோ!

டாக்டர் - இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க? மறுபடியும் எதுக்கு வந்தீங்க?

நோயாளி - இப்ப மருந்து கொட்டிடுச்சி டாக்டர்.

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

கணவன் - என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா

நண்பர் – அச்சச்சோ என்ன ஆச்சு?

கணவர் – அவளே சாத்திட்டா

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

நண்பர் - கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக்

காப்பாத்தினியே, அவ இபோ எப்படி இருக்கா?

மற்றவர் - முழுகாம இருக்கா!!!

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

டாக்டர் – கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கு?

பேஷன்ட் – போயும், போயும் இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு

தோணுது டாக்டர்!

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

ஒருவர் - எம்பிளாய்மெண்ட் ஆபிசில பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தா எல்லாரையும் கூட்டிட்டு வந்திருக்கியே ஏன்?

மற்றொருவர் – என்னோட அப்பாவுக்கு புதுப்பிக்கறணும், தாத்தாவுக்கு முதல் இன்டர்வ்யூ வந்திருக்கு!

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

நண்பர் 1 - வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!

நண்பர் 2 – அதனால?

நண்பர் – 1 - வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்.

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

ஒருவர் - தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம். பொண்ணு எப்பிடி?

மற்றொருவர் - நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார். இப்ப எப்படின்னு தெரியல!

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

ஓருவர் - ஹீரோவுக்கும் தயாரிப்பாளருகும் என்ன வித்தியாசம்?

மற்றொருவர் - ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸில் கோடீஸ்வரனாகி விடுவார்.

கோடீஸ்வரனா இருந்த தயாரிப்பாளர், க்ளைமாக்ஸில் ஏழையாகிவிடுவார்.

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

போலீஸ் - தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?

திருடன் - சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

ஒருவர் - உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே? அவங்க மேல அவ்வளவு பிரியமா?

மற்றொருவர் - அட நீங்க ஒண்ணு சார், ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி