டீடாக்ஸ் டிரிங்க்! உடலில் உள்ள கழிவுகளை அடித்து வெளியேற்றும்! ஆற்றல் நிறைந்தது! எப்படி செய்வது?
Dec 17, 2024, 10:16 AM IST
உடலில் உள்ள கழிவுகளை அடித்து வெளியேற்றும் டீடாக்ஸ் பானம். இதை எப்படி தயாரிப்பது என்று பாருங்கள்.
நீங்கள் உங்கள் உடல் எடையில் சில பவுண்டுகளை குறைக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? இந்த இயற்கை பானம் உங்கள் வாழ்க்கையையே மாற்றும். இஞ்சி, எலுமிச்சை மற்றும் பட்டை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பானம் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இந்த உட்பொருட்கள் ஒவ்வொன்றும் சிறப்பானது.
தேவையான பொருட்கள்
எலுமிச்சைப் பழம் – 1
இஞ்சி – 20 கிராம்
பட்டை – 1
செய்முறை
எலுமிச்சையை சுத்தமாக அலசிவிட்டு, தோலுடன் சேர்த்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். இஞ்சியின் தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். ஒரு பாத்திரத்தில் இஞ்சி, எலுமிச்சை துண்டுகள், பட்டை என அனைத்தையும் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவேண்டும். இது கொதித்து வந்தவுடன், 15 நிமிடங்கள் சிம்மில் வைத்து, இறக்கி வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பருகினால் நல்ல பலன்கள் கிட்டும்.
எலுமிச்சை
எலுமிச்சையில் அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. இது உங்கள் செல்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், உங்கள் உடலில் உள்ள கழிவுகளைப் போக்குகிறது. இது உங்கள் கல்லீரல் மற்றும் உடலை சுத்தம் செய்கிறது. உங்கள் உடலின் வளர்சிதையை மேம்படுத்துகிறது. உடல் எடை குறைக்க உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் வீக்கத்தைக் குறைத்து, ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்த போராடுகிறது.
இஞ்சி
இஞ்சியில் உள்ள உட்பொருட்கள் உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உங்களுக்கு வாயில் உமிழ்நீர், பித்தம் மற்றும் வாயு எண்சைம்களை அதிகளவில் சுரக்கச்செய்கிறது. பசியை குறைத்து, கலோரிகளை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. காலை நேர சோர்வைப் போக்கி, மயக்கம் ஏற்படாமல் தடுக்கிறது.
பட்டை
ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்கள் பசியைக் குறைக்கிறது. இதனால் உங்களுக்கு சாப்பிட வேண்டும் எண்ணம் ஏற்படுவதில்லை. இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், உடல் முழுவதிலும் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. பட்டையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உங்கள் உடலின் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்துகிறது. உடல் எடை குறைக்க உதவுகிறது.
எனவே இந்த சாதாரண பானத்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அது உங்களுக்கு உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இதை செய்யும்போது நீங்கள் கடும் உடற்பயிற்சிகள் செய்யவேண்டிய தேவையில்லை. இஞ்சி, எலுமிச்சை மற்றும் பட்டை ஆகியவை உங்கள் உடலின் வளர்சிதையை மேம்படுத்துகிறது. இது உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது. எனவே இந்த புத்துணர்வு தரும் பானத்தைப் பருகி உங்களின் உடல் எடையை குறையுங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்