அட அட அட என்ன ஒரு டேஸ்ட் என சொல்லவைக்கும் பலாப்பிஞ்சு பொரியல்; ட்ரை ஒன் டைம்! திரும்ப, திரும்ப கேப்பீங்க!
Dec 16, 2024, 04:57 PM IST
சூப்பர் சுவையான பலாப்பிஞ்சு பொரியல் செய்வது எப்படி என்று பாருங்கள்.
பலாப்பிஞ்சில் பொரியல், கிரேவி என வித்யாசமான உணவுகளை செய்து சாப்பிட முடியும். பலாப்பழம் பெரிதாகி, பழுத்துவிட்டால் அதை வெறும் பழமாகத்தான் சாப்பிட முடியும். ஆனால் பிஞ்சில் அதில் பல்வேறு டிஷ்கள் செய்யலாம். சூப்பர் சுவையானதாக இருக்கும். பலாப்பிஞ்சும் உடலுக்கும் எண்ணற்ற நன்மைகளைத் தரக்கூடிய ஒரு காய் ஆகும். வழக்கமான பொரியல் அல்லாமல் இது வித்யாசமான சுவை நிறைந்ததாக இருக்கும். தினமும் ஒரே மாதிரி சைட் டிஷ் சாப்பிட்டு போர் அடிக்கும்போது, இதுபோல் வித்யாசமாக செய்யும்போது மிகவும் பிடிக்கும். இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது ஒரு சூப்பரான சைட்டிஷ் ரெசிபியாகும். எனவே கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்
பலாப்பிஞ்சு – 1
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – கால் ஸ்பூன்
பலாப்பிஞ்சின் தோல் நீக்கி, அதை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். ஒரு பாத்திரத்தில் அதைப்போட்டு, தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து வடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
பட்டை – 1
கிராம்பு – 4
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
வரமல்லி – ஒரு ஸ்பூன்
வர மிளகாய் – 6
(ஒரு கடாயில் பட்டை, கிராம்பு, மிளகு, சீரகம், வரமல்லி, வரமிளகாய் என அனைத்தையும் ட்ரையாக வறுத்துக்கொள்ளவேண்டும். இதை காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தப்பொடியையும் தனியாக வைத்துவிடவேண்டும்)
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
சோம்பு – கால் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – ஒரு கொத்து
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
தக்காளி – 1
கசூரி மேத்தி – கைப்பிடியளவு
மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மல்லித்தழை – சிறிது
செய்முறை
பலாப்பிஞ்சையும், மசாலாவையும் தயாரித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவேண்டும். அடுத்து இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அடுத்து தக்காளியைச் சேர்த்து நன்றாக மசிய வைத்துக்கொள்ளவேண்டும்.
அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதங்கியவுடன், வேகவைத்துள்ள பலாப்பிஞ்சை சேர்த்து, பொடித்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். நன்றாக வதங்கியவுடன் மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையான பலாப்பிஞ்சு பொரியல் தயார். இதை சாதம், இட்லி, தோசை என சாதம், டிஃபன் இரண்டுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சூப்பர் சுவையாக இருக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். அத்தனை சுவை நிறைந்ததாக இருக்கும்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்