’உங்கள் திருமண வாழ்கை எப்படி இருக்கும்? ரகசியங்களை உடைக்கும் ஏழாம் இடம்’ ஜோதிடம் அறிவோம்!
இந்த 7ஆம் இடம் என்பது ஜீவன ஸ்தானத்திற்கு ஜீவன ஸ்தானமாக விளங்குகின்றது. ஒரு மனிதன் தனது தொழில் மூலமே சமுதாயத்தோடு தொடர்பு கொள்வான். எனவே உங்கள் தொடர்புகள், தொழில் கூட்டாளிகளையும் குறிக்கும் இடமாக 7ஆம் இடம் உள்ளது.
ஒரு ஜாதகத்தில் 7ஆம் இடம் என்பது சமுதாயத்தை குறிக்கும் இடமாக உள்ளது. வாழ்கை துணை என்பது மனிதனுக்கு சரிபாதி என்பதால், 7 ஆம் இடம் என்பது திருமண ஸ்தானமாகவும் விளங்குகிறது. திருமணம், சமுதாய பந்தம், கூட்டாளிகள், பங்காளிகளை குறிக்கின்றது. வாழ்கை துணையின் குணம், சமுதாயத்தொடர்பு எப்படி இருக்கும், கூட்டுத் தொழில் ஆதாயம் ஆகியவை 7ஆம் இடத்தை கொண்டே கணிக்கப்படுகின்றது. அதே போல் 7ஆம் இடமானது பொது மாரக ஸ்தானமாகவும் விளங்குகின்றது.
ஜீவன ஸ்தானத்திற்கு ஜீவன ஸ்தானம்
இந்த 7ஆம் இடம் என்பது ஜீவன ஸ்தானத்திற்கு ஜீவன ஸ்தானமாக விளங்குகின்றது. ஒரு மனிதன் தனது தொழில் மூலமே சமுதாயத்தோடு தொடர்பு கொள்வான். எனவே உங்கள் தொடர்புகள், தொழில் கூட்டாளிகளையும் குறிக்கும் இடமாக 7ஆம் இடம் உள்ளது.
காதலும் காமமும்!
காதலிக்கும் ஸ்தானமாக 5ஆம் இடம் இருந்தாலும், அதற்கு வெற்றியை தரக்கூடிய இடமாக 7ஆம் இடம் உள்ளது. அதே போல் காமத்தின் நிலை, வாழ்கை துணையின் தகுதி, ஒழுக்கம் உள்ளிட்டவற்றை குறிக்கின்றது. சட்டரீதியான ஒப்பந்தங்களை குறிக்கும் இடமாகவும் 7ஆம் இடம் உள்ளது. தாயாரின் சொத்துக்கள், ஆயுளின் தன்மை, தகப்பன் வழி உறவுகள், காம சிந்தனைகள் ஆகியவற்றை 7ஆம் இடம் குறிக்கின்றது.
7ஆம் இடத்தில் கிரகங்கள் இருந்தால்!
ஒரு ஜாதகத்தில் எல்லா ஸ்தானங்களும் வலுப்பெற்றாலும், 7ஆம் இடம் வலுபெறாமல் இருப்பது நல்லது. அதே போல் 7ஆம் இடத்தில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது வெகு சிறப்பை தரும். லக்னாதிபதி வலு இழந்து 7ஆம் இடம் மட்டுமே வலுப்பெற்றால் வாழ்கை துணை, சமுதாயம், கூட்டாளிகளால் ஏமாற்றம் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்