உடலுக்கு அத்தியாவசிய தேவையாக இருந்து வரும் வைட்டமின் கே சத்துக்கள் நிறைந்த உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Dec 12, 2024
Hindustan Times Tamil
இரத்தம் உறைவதை தடுப்பதிலும், எலும்புகள் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் வைட்டமின் கே முக்கிய பங்கு வகிக்கிறது
பச்சை இலை காய்கறிகள், சில பழ வகைகளில் வைட்டமின் கே சத்துக்கள் நிரம்பியுள்ளன
சிலுவை காய்கறிகளில் ஒன்றாக இருந்து வரும் ப்ரோக்கோலி வைட்டமின் கே, நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாக உள்ளது. எந்த வகை டயட்டில் சேர்க்ககூடிய காய் வகையாக உள்ளது
வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவகோடா 100 கிராம் அளவில் 21 மில்லி கிராம் வைட்டமின் கே நிறைந்துள்ளது
வைட்டமின் கே அதிகமாக நிரம்பியிருக்கும் மற்றொரு பழ வகையாக திராட்சை உள்ளது. இவை இரத்தம் உறைவை தடுக்கவும், எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது
பசலை கீரைகளை உங்கள் உணவு டயட்டில் சேர்ப்பதன் மூலம் வைட்டமின் கே சத்துக்கான தேவையை பூர்த்தி செய்யலாம்
பார்ப்பதற்கு கொத்தமல்லி போல் இருக்கும் பார்ஸ்லீ இலைகளில் இருக்கும் வைட்டமின் கே எலும்புகள் ஆரோக்கியத்துக்கு நல்லது. இரண்டு டிஸ்பூன் அளவு பார்ஸ்லி இலைகள் 100 சதவீத தேவையை பூர்த்தி செய்கிறது