Dental and Oral Care : பற்களில் கூச்சமா? கவலை வேண்டாம்! இந்த குறிப்புக்கள் உங்களுக்கு உதவும்!
Mar 27, 2024, 03:38 PM IST
Dental and Oral Care : கூச்சம் நிறைந்த பற்கள் சில அசவுகர்யங்களை ஏற்படுத்தும். சில நேரங்களில் வலியை உண்டாக்கும். பல் பிரச்னைகளில் இருந்து விடுபட ஒவ்வொரு நாளும், இரண்டு முறை பல் துலக்க வேண்டும். உங்கள் பற்களை பாதுகாக்கவும், பல் பிரச்னைகளில் இருந்து விடுபடவும் இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும்.
நல்ல டூத் பேஸ்ட்
உங்கள் பற்களை தேய்ப்பதற்கு நல்ல டூத் பேஸ்ட்கள் மிகவும் அவசியம். அது உங்கள் பற்களில் உள்ள அசவுகர்யங்களை போக்கும். வேர்களில் இருந்து செல்லும் நரம்புகளில் ஏற்படும் உணர்ச்சியற்ற தன்மையால் சில பிரச்னைகள் பற்களில் ஏற்படும். எனவே நீங்கள் பயன்படுத்தும் பேஸ்ட்களில் பொட்டாசியம் நைட்ரேட் அல்லது ஸ்ரோட்ன்டியம் குளோரைட் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.
மிருதுவான ஃபிரிசில்கள் கொண்ட டூத் பிரஷ்
பற்களுக்கும், வேர்களுக்கும் இடைப்பட்ட இடத்தில் தங்கும் மஞ்சள் கரைகளை கெட்டியாக இருக்கும் டூத் பிரஷ்கள் நீக்காது. மிருதுவான ஃபிரிசில்களைக் கொண்ட டூத் பிரஷ்கள் தான் நீக்கும். மேலும் கெட்டியான பிரஷ்கள் உங்கள் பற்களுக்கும், வேர்களுக்கும் இடையில் எரிச்சலை தூண்டும். ஆனால், மிருதுவான ஃபிரிசில்களைக் கொண்ட பிரஷ்கள் எரிச்சலை ஏற்படுத்தாது. எனவே, மிருதுவான பிரஷ்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
முறையான பல் துலக்குவது எப்படி?
வட்ட வடிவில் தான் பல் துலக்க வேண்டும். கடைவாய் பற்களை வட்டவடிவிலும், மேற்புற பற்களை மேலிருந்து கீழாகவும், கீழ்புறபற்களை கீழிருந்து மேலாகவும் துலக்க வேண்டும். ஒவ்வொரு பற்களையும் தனித்தனியாக சுத்தம் செய்ய வேண்டும். வேகமாக பல் துலக்கக்கூடாது. நீண்ட நேரம், வேகமாக பல் துலக்கினால் பற்களில் உள்ள எனாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் வேர் அரிப்பு, மற்றும் அதிக கூச்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஈறுகளை தேய்க்க வேண்டும்
ஒவ்வொரு முறை பல் துலக்கிய பின்னரும் ஈறுகளை மிருவாக ஒவ்வொரு பல்லுக்கும் மேலே தேய்க்க வேண்டும். அப்போதுதான் இடையில் சிக்கியிருக்கும் உணவுப்பொருட்கள் வெளியேறும். மேலும் ஈறுகளில் பிரச்னைகள் ஏற்படாது மற்றும் ஈறுகளில் தேய்மானம் ஏற்படாது. பற்களின் உணர்திறனை அதிகரிக்கும். பற்களுக்கு இடையிலும் உணவுப்பொருள் தங்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஃப்ளூரைட்கள் நிறைந்த மவுத் வாஷ் பயன்படுத்த வேண்டும்
பல் துலக்கிய பின்னர் வாயை ஃப்ளூரைட்கள் நிறைந்த மவுத்வாஷ் பயன்படுத்தி கொப்பளிக்க வேண்டும். அது பற் கூச்சத்தை குறைத்து, பற்களின் எனாமலை வலுப்படுத்துகிறது. ஃப்ளூரைட்கள், பற்களை மீண்டும் கனிமமாக்க உதவுகிறது. அதை மாறிவரும் வெப்பநிலைகளுக்கு தக்கவாறு எதிர்ப்புத்திறன் பெற உதவுகிறது. பற்களை ஆசிட் தாக்கத்தில் இருந்து காக்கிறது.
ஆசிட் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்
ஆசிட் நிறைந்த உணவுகள், பானங்கள், சிட்ரஸ் ஆசிட் பழங்கள், வைன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அது பல்லில் உள்ள எனாமலை போக்குகிறது. உணர்திறனை குறைக்கிறது. எனவே உங்கள் பற்களை பாதுகாக்க வேண்டுமெனில் இவற்றையெல்லாம் தவிர்ப்பது நல்லது. ஜஸ்கிரீம் மற்றும் சாக்லேட் ஆகியவை சாப்பிடுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். இவையும் பற்களை தாக்கும்.
ஆயில் புல்லிங்
உங்கள் பற்களை பாதுகாப்பதில் ஆயில் புல்லிங் செய்வது மிகவும் நல்லது. ஆயில் புல்லிங் செய்வது பற்களை மட்டுமின்றி, முழு வாய் மற்றும் வயிறையும் பாதுகாக்கிறது. எனவே தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை தினமும் காலை எழுந்தவுடன் வாயில் ஊற்றி 10 – 20 நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும்.
இது வாய் முதல் வயிறு வரை உள்ள கிருமிகளை வெளியேற்றிவிடும். இது பற்களில் தங்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பற்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும். ஆரோக்கியமான பற்கள் மற்றம் ஈறுகளைப்பெற உதவும்.
உப்பு தண்ணீரில் கொப்பளிக்க வேண்டும்
உங்கள் வாயை எப்போதும் உப்பு தண்ணீரில் கொப்பளிக்க வேண்டும். இது பற்களில் உள்ள கூச்சத்தை போக்கும் தன்மை கொண்டது. உப்புத்தண்ணீரில் இயற்கையிலேயே பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள் உள்ளது. அது வாயில் உள்ள பாக்டீரியாக்களைப் போக்கும் மற்றும் வீக்கத்தை குறைக்கும்.
இரவு பாதுகாப்பு
இரவு உறங்கச்செல்லும் முன் வாயை உப்பு தண்ணீரில் கொப்பளித்தால் நல்லது. இரவில் பற்களை கடிக்கும் பழக்கம் உள்ளவர் என்றால், இரவு பாதுகாப்பு கவசம் அணிவது நல்லது. அது நீங்கள் பற்களை கடிக்கும்போது ஏற்படும் உணர்திறன் குறைவை போக்கும்.
டாபிக்ஸ்