Oral Care: இயற்கையான முறையில் பற்களில் மஞ்சள் நிறத்தை போக்கி பளபளப்பை பெற எளிய வழிகள் இதோ
நாள்தோறும் இரண்டு முறை பல் துலக்கினாலும் மஞ்சள் நிறம் போகாமல் இருப்பது பலரும் பெரும் கவலை தரும் விஷயமாகவே இருந்து வருகின்ற போதிலும், நாம் அன்றாடம் சாப்பிடும் பழங்கள், சில ஆரோக்கிய முறைகளை பின்பற்றுதன் மூலம் இயற்கையான முறையில் இதற்கான தீர்வை காணலாம்.
பற்கள் வலிமையாக வைத்துக்கொள்வது பற்றி ஏராளமான ஆலோசனைகள் கூறப்படுகிறது. ஆனால் பற்களில் இருக்கும் மஞ்சள் நிறத்தால் ஏற்படும் பிரச்னை குறித்து பெரிதாக பேசப்படுவதும் இல்லை. இதை ஒரு பொருட்டாக கண்டுகொள்வதும் இல்லை.
பற்கள் மஞ்சள் நிறம் உண்டாவதற்கான காரணங்கள் பல உள்ளன. புகைப்பிடித்தல், வாய் சுகாதாரத்தை பேனி காக்காமல் இருப்பது, மரபணு கோளாறுகள் அல்லது ஆரோக்கியமற்ற உணவு பழக்கம். எனவே மஞ்சள் நிறம் பற்களில் படியாமல் தவிர்க்கும் தன் சில பழங்களுக்கு உண்டு.
சிவப்பு நிறத்தில் இருக்கும் ஸ்ட்ராபெர்ரி பற்களின் மஞ்சள் நிறத்தை போக்கும் வல்லமை இருக்கிறது. இதிலுள்ள மாலிக் அமிலம் பற்களை வெண்மையாக்க உதவுகிறது. இந்தப் பழத்திலுள்ள நார்ச்சத்து வாய்க்குள் இருக்கும் பாக்டீரியாக்களை நீக்க உதவுகிறது.
ஸ்ட்ராபெர்ரியை போல் ஆப்பிள் பழத்திலும் மாலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது வாயில் எச்சில் ஊற உதவுகிறது. இதனால் ஈரப்பதம் ஏற்பட்டு பற்களில் மஞ்சள் கறை படியவிடாமல் பார்த்துக்கொள்கிறது.
வாழைப்பழத்தில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துகளும், நார்ச்சத்துகளும் நிரம்பியுள்ளன. வைட்டமின் பி6, மங்கனீசு போன்றவை வாயில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது. வாழப்பழத்தின் தோல்களை எடுத்து பற்களில் 1 முதல் 2 நிமிடங்கள் தேய்த்தால் பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறை நீங்கும். பல்துலக்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னாள் இதைச் செய்யலாம்.
பற்களின் மஞ்சள் கறை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு வாய்வழி சுகாதாரமானது மிக முக்கியமான விஷயமாக உள்ளது. நாள்தோறும் இரண்டு முறை பல்துலக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. புகைப்பிடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கேரட், பச்சை நிற காய்கறிகள், இலைகள், ப்ரோகோலி போன்ற காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் பற்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
பற்களை பளபளபாக்க இயற்கையான வழிகள்
உங்கள் பற்களை இயற்கையான முறையில் பளபளக்க வைக்க விரும்புகிறீர்களா? இதே வெள்ளை மற்றும் பளபளப்பான பற்களை பெறுவதற்கான சிறந்த ஆயுர்வேத வழிகள்.
பற்களை பளபளப்பாக்குவதற்கும், வெள்ளையாக்குவதற்கும் நீங்களே செய்துகொள்ளும் விதமாக பல்வேறு வகையான டிப்ஸ்களுக்கு இணையத்தில் பஞ்சம் இல்லை. செயல்படுத்தப்பட்ட கரி, பேக்கிங் சோடா, ஆப்பிள் சீடர் விணீகர் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் வெண்மையான பற்களை பெறலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இது பக்கவிளைவுகள் அல்லது பற்களில் பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. அந்த வகையில் இயற்கையான முறையில் பற்களை பளபளபாக்கும் ஆயுர்வேத வழிகளை தெரிந்துகொள்வோம்.
எண்ணெய் உள் இழுத்தல்
எண்ணெய்யை வாயில் வைத்து உள் இழுத்து பின் கொப்பளிக்கும் முறையே எண்ணெய் உள் இழுத்தல் என்று அழைக்கப்படுகிறது. இவை பற்கள் மற்றும் ஈறுகளில் உள்ள நுண்ணியிர்களை நீக்க உதவுகிறது. வாயில் ஏற்படும் புண்களை தணிக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் வாய் பகுதியில் உள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சியாக இருப்பதோடு, அதனை வலுப்படுத்தவும் செய்கிறது.
வேம்பு அல்லது பாபுல் கிளைகளை வைத்து பற்களை துலக்கலாம்
இந்த மூலிகைகளில் பாக்டீரியாவுக்கு எதிரான தன்மைகள் அதிகம் நிறைந்துள்ளன. இதனை பல் துலக்க பயன்படுத்துவதன் மூலம் உங்களது பற்களின் ஆரோக்கியம் பேனி பாதுகாக்கப்படும்.
நாக்கை நன்கு துடைப்பது
வாய் மற்றும் நாக்கு பகுதியை சுத்தப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. இவ்வாறு செய்வதால் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு உதவும் நச்சுக்கள் நீக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த பாக்டீரியாக்கள் பிளேக் உருவாவதற்கு வழிவகுக்கிறது.
மூலிகைகள் வைத்து வாய் கொப்பளிப்பது
திரிபலா அல்லது யஷ்டிமதுவின் கஷாயத்தை வைத்து வாய் கொப்பளிப்பதன் மூலம் வாய் வழி சுகாதரமானது பேனி பாதுகாக்ப்படுகிறது. இது வாய்ப்புண்களையும் தணிக்க உதவுகிறது.
நாள்தோறும் இரண்டு முறை பல் துலக்குவது
வாய் அல்லது பற்களில் ஒட்டும் உணவுகளை சாப்பிட்ட பிறகு ஒவ்வொரு முறையும் பல்துலக்க வேண்டும். நாள்தோறும் 4 முதல் 5 முறை பல்துலக்குவது சாத்தியமில்லை என்பதால் குறைந்தது இரண்டு முறையாவது பல்துலக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்