தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chutney Podi : ஒரு மாதத்துக்கு சட்னியே அரைக்கத் தேவையில்லை! இதோ இன்ஸ்டென்ட் சட்னி பொடி!

Chutney Podi : ஒரு மாதத்துக்கு சட்னியே அரைக்கத் தேவையில்லை! இதோ இன்ஸ்டென்ட் சட்னி பொடி!

Priyadarshini R HT Tamil

Apr 09, 2024, 03:44 PM IST

google News
Chutney Podi : குறிப்பாக இந்த வெயில் காலத்தில் கிச்சனில் இருந்து கஷ்டப்படவேண்டிய அவசியமில்லை. மோர் அல்லது ஏதேனும் பழச்சாறு தயாரித்து வைத்துவிட்டு, இதுபோன்ற எளிய உணவுகளை சாப்பிட்டு கோடையை கழிக்கலாம்.
Chutney Podi : குறிப்பாக இந்த வெயில் காலத்தில் கிச்சனில் இருந்து கஷ்டப்படவேண்டிய அவசியமில்லை. மோர் அல்லது ஏதேனும் பழச்சாறு தயாரித்து வைத்துவிட்டு, இதுபோன்ற எளிய உணவுகளை சாப்பிட்டு கோடையை கழிக்கலாம்.

Chutney Podi : குறிப்பாக இந்த வெயில் காலத்தில் கிச்சனில் இருந்து கஷ்டப்படவேண்டிய அவசியமில்லை. மோர் அல்லது ஏதேனும் பழச்சாறு தயாரித்து வைத்துவிட்டு, இதுபோன்ற எளிய உணவுகளை சாப்பிட்டு கோடையை கழிக்கலாம்.

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை – ஒரு கப்

பொட்டுக்கடலை – ஒரு கப்

முழு வெள்ளை உளுந்து – ஒரு கப்

வர மிளகாய் – 10

உப்பு – தேவையான அளவு

தேங்காய் துருவல் – ஒரு கப்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பூண்டு – 10 பல்

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

கடலையை வறுத்துவிட்டு, தோலை நீக்கிவிட வேண்டும்.

உளுந்து சிவக்க வறுக்க வேண்டும்.

தேங்காயுடன் கறிவேப்பிலை, பூண்டும் சேர்த்து வறுத்துக்கொள்ளலாம். தேங்காயின் ஈரம் போகும் வரை வறுக்க வேண்டும்.

பெருங்காய்த்தூளை அனைத்தையும் வறுத்து சூடாக இருக்கும்போது இறுதியாக அதில் சேர்த்து கலந்துவிடவேண்டும். உப்பு தேவையான அளவு சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்றாக ஆறவிடவேண்டும்.

அவையனைத்தும் நன்றாக ஆறியவுடன், காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து அடித்துக்கொள்ள வேண்டும்.

வறுத்த அனைத்து பொருட்களும் ஆறவேண்டும். ஆறினால் மட்டுமே நல்லது. இல்லாவிட்டால் நன்றாக இருக்காது.

பொடி தயாரானவுடன் அதையும் நன்றாக ஆறவைத்துக்கொள்ள வேண்டும். அந்தப்பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இது வேலைக்குச் செல்பவர்களுக்கு தினமும் சட்னி அரைக்க வேண்டும் என்ற டென்சனைக் குறைக்கும்.

பொடியை சட்னி ஆக்குவது எப்படி?

தேவையான பொருட்கள்

தண்ணீர் – ஒரு கப்

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – கால் ஸ்பூன்

வர மிளகாய் – 2

செய்முறை

உங்களுக்கு தேவைப்படும்போது, இந்தப்பொடியை எடுத்து தண்ணீர் சேர்த்து கலந்துவிடவேண்டும்.

பின்னர் கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வரமிளகாய் கிள்ளி சேர்த்து தாளிக்க வேண்டும்.

நீங்கள் பொடி தயாரிக்கும்போது பெருங்காயத்தூள் சேர்க்கவில்லையென்றால், தாளிக்கும்போது சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல் உப்பு அளவையும் சட்னியாக்கும்போது சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

தாளிப்பை சட்னியில் சேர்த்தால் சுவையான இன்ஸ்டன்ட் தேங்காய் சட்னி ரெடி.

இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், உப்புமா என அனைத்துக்கும் ஏற்றது. இது ஒரு மாதம் வரை கெடாது. ஃபிரிட்ஜில் வைத்தால் நல்லது. வெளியில் வைத்து பயன்படுத்தும்போது ஒரு வாரம் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும்.

வெளியூர்களுக்கு செல்லும்போதும் இதை எடுத்துக்கொண்டு செல்லலாம். ஃபிரஷ்ஷாக தயாரிக்கும் தேங்காய் சட்னியைப்போலவே சுவை நிறைந்ததாக இருக்கும்.

இதை சட்னியாக்காமல் எண்ணெய் அல்லது நெய்விட்டும் டிஃபனுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதை நெய்யுடன் சாதத்தில் சேர்த்து பிசைந்தும் சாப்பிட சுவை அள்ளும்.

தண்ணீரை குறைவாக சேர்த்து தாளித்து கெட்டி சட்னியாக தயிர் சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் வெரைட்டி சாதங்களுடன் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

ஒரு பொடி அரைத்து வைத்துக்கொண்டால்போதும் ஏதேனும் ஒரு மெயின் டிஷ் செய்து வைத்துக்கொண்டு அதனுடன் இதை சேர்த்து தொட்டுக்கொண்டு அன்றைய நாளையே கழித்துவிடலாம்.

குறிப்பாக இந்த வெயில் காலத்தில் கிச்சனில் இருந்து கஷ்டப்படவேண்டிய அவசியமில்லை. மோர் அல்லது ஏதேனும் பழச்சாறு தயாரித்து வைத்துவிட்டு, இதுபோன்ற எளிய உணவுகளை சாப்பிட்டு கோடையை கழிக்கலாம்.

மழைக்காலத்தில் இதன் ஷெல்ஃப் லைஃப் என்பது குறைவுதான். ஏனெனில் வெயில் காலத்தில் ஈரப்பதம் காற்றில் குறைவாக இருப்பதால் இதுபோன்ற பொடிகள் நீண்ட காலம் கெடாமல் இருக்கும்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி