தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Onion Chutney : வெங்காயம் இருந்தாலே போதும்! இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையான சட்னி ரெடி!

Onion Chutney : வெங்காயம் இருந்தாலே போதும்! இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையான சட்னி ரெடி!

Priyadarshini R HT Tamil
Apr 06, 2024 02:06 PM IST

Onion Chutney : இந்த வெங்காயச்சட்னி சிறிது காரமாக இருக்கும். இதை பொங்கலுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். ஆனால் சுவை நன்றாக இருக்கும். எனவே கட்டாயம் இதை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Onion Chutney : வெங்காயம் இருந்தாலே போதும்! இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையான சட்னி ரெடி!
Onion Chutney : வெங்காயம் இருந்தாலே போதும்! இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையான சட்னி ரெடி!

ட்ரெண்டிங் செய்திகள்

கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

வெங்காயம் – 4 (நறுக்கியது)

இஞ்சி – ஒரு துண்டு (நறுக்கியது)

பூண்டு - 12 பற்கள்

ப்யாத்கே மிளகாய் - 12

புளி – சிறிதளவு

கல் உப்பு – ஒன்றரை ஸ்பூன்

வெல்லம் – ஒரு ஸ்பூன்

தாளிப்பு செய்ய தேவையான பொருட்கள்

எண்ணெய்

உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

சிவப்பு மிளகாய் – 4

பெருங்காய தூள் – சிறிதளவு

கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை -

அகலமான பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்க்கவேண்டும்.

பருப்பை சிறிது பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவேண்டும்.

இந்த கட்டத்தில், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவேண்டும்.

வெங்காயத்தில் நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து மேலும் சில நொடிகள் வதக்கவேண்டும்.

அதில் ப்யாத்கே மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்கி புளி துண்டுகளை சேர்க்கவேண்டும்.

பிறகு கல் உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவேண்டும்.

வெங்காயம் வதங்கியதும், அடுப்பை அணைத்து ஆறவைத்து, எல்லாவற்றையும் மிக்ஸிக்கு மாற்ற வேண்டும்.

மிக்ஸி ஜாரில் வெல்லம் சேர்த்து ஒருமுறை அரைக்கவேண்டும்.

பின்னர் தண்ணீர் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக விழுதாக அரைத்து எடுத்துககொள்ள வேண்டும்.

சட்னியை கிண்ணத்தில் மாற்றி தனியாக வைக்கவேண்டும்.

தாளிப்பு செய்வதற்கு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் எடுத்து சூடாக்கவேண்டும்.

உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் சீரகத்தை சேர்க்கவேண்டும்.

கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், அதில் சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.

பின் பெருங்காய தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவேண்டும். கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

வெங்காய சட்னியில் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

சுவையான வெங்காய சட்னி உங்களுக்கு விருப்பமான டிபன் உடன் பரிமாற தயாராக உள்ளது.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்.

இட்லி, தோசை என்றாலே அதற்கு தொட்டுக்கொள்ள சட்னி கட்டாயம் வேண்டும். இல்லாவிட்டால் அவற்றை சாப்பிட முடியாது. வீட்டில் தக்காளி இல்லை என்றாலோ அல்லது தக்காளி விலை அதிகம் இருந்தாலோ தக்காளி இல்லாமல் வெறும் வெங்காயம் வைத்தே இந்த சட்னியை எளிதாக செய்துவிடலாம். இதில் புளி சேர்ப்பதால் சட்னிக்கு தேவையான புளிப்பு சுவையை அதுவே கொடுத்துவிடுகிறது.

இந்த வெங்காயச்சட்னி சிறிது காரமாக இருக்கும். இதை பொங்கலுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். ஆனால் சுவை நன்றாக இருக்கும். எனவே கட்டாயம் இதை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

வெங்காயத்தின் நன்மைகள் 

வெங்காயத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. 

வெங்காயம் ரத்தத்தில் சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது. 

செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. 

வெங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. 

வெங்காயத்தில் உள்ள வீக்கத்திற்கு எதிரான குணங்கள் நாள்பட்ட நோய்கள் உடலில் ஏற்படாமல் தடுக்கிறது.

புற்றுநோய் செல்களை அழிக்கிறது. 

மறதி நோயை குறைக்கிறது.

வெங்காயத்தில் உள்ள வைட்டமின் சி சத்து, உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகிறது. 

பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. 

எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.  

WhatsApp channel

டாபிக்ஸ்