தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Find Out The Zodiac Signs That Are Going To Enjoy Luck With Saturn Transit

Sani Luck: சனி புரண்டு மாறுகிறார்.. பொங்கல் வைப்பது உறுதி.. மகிழ்ச்சி கொட்ட போகுது.. பணமழை இந்த ராசிகளுக்குத்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 15, 2024 09:44 AM IST

Sani Luck: சனி பகவான் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைகின்றார். இந்த நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுத்த போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சனி நட்சத்திர பெயர்ச்சி
சனி நட்சத்திர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார். கர்ம பலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது. அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சனி பகவான் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைகின்றார். இந்த நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுத்த போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபகரமானதாக அமைந்துள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் ஆடம்பர வாழ்க்கை உருவாகும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எதிர்பாராத நேரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல லாபமும் கிடைக்கும் ஆசைகள் அனைத்தும் நிறைவேறக்கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி அடையும்.

மிதுன ராசி

 

சனி நட்சத்திர இடமாற்றம் உங்கள் வாழ்க்கையில் மங்களத்தை உருவாக்கப் போகின்றது. முழுமையான அதிர்ஷ்டத்தை நீங்கள் அனுபவிக்கப் போகின்றீர்கள். அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சனிபகவானின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel