Tomato Upma : உப்புமாவை வெறுப்பவர்கள் கூட ருசிப்பர்! தளதளன்னு தக்காளி அவல் உப்புமா இப்டி செய்ங்க!
Tomato Upma : இதை எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டு மகிழுங்கள். இதற்கு எந்த சட்னி அல்லது சாம்பார் என எது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
அவல் - 2 கப்
வேர்க்கடலை – கால் கப்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – ஒரு துண்டு (பொடியாக நறுக்கியது)
தக்காளி விழுது – 3 (அரைத்தது)
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
உப்பு – ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி இலை நறுக்கியது – ஒரு கைப்பிடியளவு
நெய் – ஒரு ஸ்பூன்
செய்முறை
அவலை கழுவி தனியாக எடுத்து வைக்கவேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவேண்டும்.
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பிறகு பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவேண்டும்.
பின்னர் கறிவேப்பிலை, தக்காளி விழுது சேர்த்து வதக்கவேண்டும்
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவேண்டும்.
பின்னர் அவலை சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து, பின்னர் வறுத்த வேர்க்கடலை, கொத்தமல்லி இலை சேர்க்கவேண்டும்.
கடைசியாக நெய் சேர்த்து கலந்து இறக்கவேண்டும்.
தக்காளி அவல் உப்மா சாப்பிட தயாராக உள்ளது.
அவல், இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒன்று. இதிலிருந்து பல்வேறு ரெசிபிக்கள் செய்யமுடியும். இதை டிபஃன் மற்றும் ஸ்னாக்ஸ் என எதற்கு வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.
இந்த அவல், தக்காளி உணவு உடலுக்கு மிகவும் நல்லது. சுவையானது மற்றும் ஆரோக்கியமானதும் ஆகும். தக்காளி போட்ட அவல் உப்புமாவை விரைவில் செய்து முடித்துவிடலாம்.
இது சிறந்த காலை உணவாக இருக்கும். இரவு உணவுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். குழந்தை விரும்பி சாப்பிடுவார்கள். முதலில் தக்காளியை வைத்து ஒரு மசாலா தயாரித்துவிட்டு, அவலை அதில் சேர்க்க வேண்டும்.
இதை எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டு மகிழுங்கள். இதற்கு எந்த சட்னி அல்லது சாம்பார் என எது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தக்காளியின் நன்மைகள்
தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது.
இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.
100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.
தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட். ஒரு தக்காளி 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
டாபிக்ஸ்