’உங்கள் முன் ஜென்மத்தை சொல்லும் 5ஆம் இட ரகசியங்கள்' ஜோதிடம் அறிவோம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’உங்கள் முன் ஜென்மத்தை சொல்லும் 5ஆம் இட ரகசியங்கள்' ஜோதிடம் அறிவோம்!

’உங்கள் முன் ஜென்மத்தை சொல்லும் 5ஆம் இட ரகசியங்கள்' ஜோதிடம் அறிவோம்!

Kathiravan V HT Tamil
Dec 13, 2024 07:00 AM IST

திரிகோண ஸ்தானங்களில் முதல் திரிகோணமாக லக்னமும், இரண்டாவது திரிகோணமாக 5ஆம் இடமும், மூன்றாவது திரிகோணமாக 9ஆம் இடமும் உள்ளது. இந்த 3 திரிகோண அதிபதிகளும் ஒரு ஜாதகத்தில் கெட்டு போகாமல் இருந்தாலே ஜாதகர் அதிஷ்டசாலியாக இருப்பார்.

’உங்கள் முன் ஜென்மத்தை சொல்லும் 5ஆம் இட ரகசியங்கள்' ஜோதிடம் அறிவோம்!
’உங்கள் முன் ஜென்மத்தை சொல்லும் 5ஆம் இட ரகசியங்கள்' ஜோதிடம் அறிவோம்! (Freepik)

5ஆம் இடத்தின் நிலைகள் 

ஒரு மனிதனுக்கு தனது வாழ்கை துணை மூலம் கிடைக்கும் லாபம், மேன்மை ஆகியவற்றை குறிக்கின்றது. 2ஆம் இடமாகிய குடும்ப ஸ்தானத்திற்கு 5ஆம் இடம் சொத்துக்கள் ஸ்தானமாக விளங்குகின்றது. 3ஆம் இடமான தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு 5ஆம் இடம் செயல் திறன் ஸ்தானமாகவும், 4ஆம் இடமாக சுக ஸ்தானத்திற்கு தன ஸ்தானமாகவும், 6ஆம் இடமான கடன் ஸ்தானத்திற்கு விரைய ஸ்தானமாகவும், 7 ஆம் இடமான வாழ்கை துணை ஸ்தானத்திற்கு லாப ஸ்தானமாகவும், 8ஆம் இடமான ஆயுள் ஸ்தானத்திற்கு தசம ஸ்தானமாகவும், 9ஆம் இடமாக பாக்கிய ஸ்தானத்திற்கு பாக்கிய ஸ்தானமாகவும் இது விளங்குகின்றது. 

அடிமை தொழில் செய்ய ஈடுபாடு இருக்காது

பொதுவாக 5 மற்றும் 9ஆம் இடங்கள் வலுத்தவர்களுக்கு பிறருக்கு கீழ் பணி செய்வது, அடிமைத் தொழில் செய்வதில் பெரிய ஈடுபாடு இருக்காது. 

ஒருவரது மந்திரம், சக்தி, செயல்திறன், கணிக்கும் திறமை, யூகிக்கும் ஆற்றல், பங்குச்சந்தை ஆதாயம், சூதாட்டம், கேளிக்கை ஆகியவற்றை 5ஆம் இடம் குறிக்கின்றது. ஒருவரது ஜாதகத்தில் 5ஆம் அதிபதி சிறப்பாக இருந்தாலே ஜாதகரின் வாழ்கை மத்திம வயதிற்கு மேல் சுகமான பலன்களை கொடுக்கும். 

கிரகங்களும் 5ஆம் இடமும்

5ஆம் இடத்தில் சூரியன் அமர்தால் நன்மையும், கெடுதல்களும் சேர்ந்து கிடைக்கும். அறிவாற்றல், யூகிக்கும் திறன், பூர்வீக சொத்துக்கள் மூலம் பலன், சூதாட்ட ஆர்வம் உள்ளிட்ட பலன்களை கொடுக்கும். 

5ஆம் இடத்தில் சந்திரன் இருந்தால் நன்மைகள் கிடைக்கும். வளர்பிறை சந்திரனால் மேன்மை தரும் வாரிசுகள், பெண் தெய்வ அனுகிரகங்கள் கிடைக்கும். குழந்தைகள் பிறந்த பிறகு மண், மனைகள் வாங்கும் நிலை ஏற்படும். 

5ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தால் முக்கால் பங்கு பாவியாகவும், கால் பங்கு சுபராகவும் இருப்பார். குழந்தை பிறப்பில் சிக்கல், கருக்கலைவு, குழந்தை பிறப்பு தள்ளி போதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். ஆனால் 5ஆம் இடம் இயற்கை சுபராக இருந்தால் இந்த பாதிப்புகள் ஏதும் வராது. திருச்செந்தூர் முருகனை வழிபடுவது நன்மைளை தரும். 

5ஆம் இடத்தில் புதன் இருப்பது நன்மைகளை கொடுக்கும். தாய் மாமன் வழி உறவு வலுவாக இருக்கும். பங்குச்சந்தை உள்ளிட்ட யூக வணிகங்களில் வெற்றிகள் கிடைக்கும். குழந்தைகள் பிறந்த பிறகு வளர்ச்சி உண்டாகும். 

5ஆம் இடத்தில் குரு பகவான் இருந்தால் கலப்பு பலன்களை கொடுக்கும். ஆனால் பாவக்கோள்களின் தொடர்பு இருந்தால் வெகு சிறந்த பலன்களை தரும்.

Whats_app_banner