தினமும் 3 வேளையும் அரிசி சாதம் சாப்பிடுபவரா நீங்கள்?.. இந்த 5 கடுமையான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்!
அரிசியை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சில வகையான நோய்கள் வர வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் மூன்று வேளையும் அதிகமாக அரிசி சாதம் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

தென்னிந்தியாவின் பிரதான உணவுகளில் ஒன்றாக இருக்கிறது அரிசி. இந்திய உணவில் வெள்ளை அரிசி ஒரு முக்கிய அங்கமாகும். நம் நாட்டில் 90 சதவீத மக்கள் பெரும்பாலும் வெள்ளை உணவுகளையே உண்கின்றனர். நம் உணவில் முக்கியப் பொருளான அரிசியை உண்பதைத் தவிர்க்க முடியாதவர்கள் ஏராளம். சில வீடுகளில் மூன்று வேளையும் அரிசியை கொண்டு உணவு தயார் செய்கிறார்கள்.
சாதம் சாப்பிட்டுப் பழகியவர்கள் அதிகப் பதார்த்தங்களைச் சாப்பிட்டாலும் அவர்களின் வயிறு நிறைவதில்லை. ஆனால், எதையும் அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல. எனவே தினமும் உண்ணும் அரிசிக்கும் இதே நிலைதான். அரிசியை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சில வகையான நோய்கள் வர வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அரிசியின் கிளைசெமிக் குறியீடு
சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர்களும் அரிசி சாப்பிடாமல் இருக்க அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் அரிசியில் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிக அதிகம். இதனால் சாதம் சாப்பிட்டவுடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக விரைவாக உயரும் . இப்படிப்பட்ட சூழ்நிலையில் சர்க்கரை நோயாளிகள் மட்டுமின்றி மற்றவர்களும் அரிசியில் சமைத்த உணவைத் தவிர்ப்பது நல்லது.
