தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  முட்டையால் கட்டப்பட்ட சுவர்கள்.. வியக்க வைக்கும் கட்டிடக் கலை.. பாரம்பரியம் மாறாத செட்டிநாடு வீடுகள்..!

முட்டையால் கட்டப்பட்ட சுவர்கள்.. வியக்க வைக்கும் கட்டிடக் கலை.. பாரம்பரியம் மாறாத செட்டிநாடு வீடுகள்..!

Karthikeyan S HT Tamil

Dec 13, 2024, 08:32 AM IST

google News
சுண்ணாம்புக்கலவை, கருப்பட்டி, சுடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைக்கரு கலந்த கலவையை கொண்டு செட்டிநாடு வீடுகளின் சுவர் கட்டப்பட்டுள்ளது. கட்டியுள்ளனர். தமிழகத்தின் பாரம்பரியக் கட்டிடக் கலையை பறைசாற்றும் செட்டிநாடு வீடுகள் பல தலைமுறைகளைக் கடந்து நிற்கும்
சுண்ணாம்புக்கலவை, கருப்பட்டி, சுடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைக்கரு கலந்த கலவையை கொண்டு செட்டிநாடு வீடுகளின் சுவர் கட்டப்பட்டுள்ளது. கட்டியுள்ளனர். தமிழகத்தின் பாரம்பரியக் கட்டிடக் கலையை பறைசாற்றும் செட்டிநாடு வீடுகள் பல தலைமுறைகளைக் கடந்து நிற்கும்

சுண்ணாம்புக்கலவை, கருப்பட்டி, சுடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைக்கரு கலந்த கலவையை கொண்டு செட்டிநாடு வீடுகளின் சுவர் கட்டப்பட்டுள்ளது. கட்டியுள்ளனர். தமிழகத்தின் பாரம்பரியக் கட்டிடக் கலையை பறைசாற்றும் செட்டிநாடு வீடுகள் பல தலைமுறைகளைக் கடந்து நிற்கும்

தமிழகத்தின் பாரம்பரியம் மாறாத கட்டிடக்கலைக்கு முன்னோடியாக திகழுவது சிவகங்கை மாவட்டம். கம்பீரமும், கலை நயமும் கொண்ட மாளிகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சர்வதேச தரத்தில் ஆயிரக்கணக்கான பழமை மாறாத வீடுகள் இன்றும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

கட்டிடக் கலை

சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியை மையமாகக் கொண்டு நகரத்தார் சமூகத்தினர் வசிக்கின்ற சுமார் 96 ஊர்களும் சேர்ந்து செட்டிநாடு என்று குறிக்கப்படுகிறது. சிறிய அரண்மனை 40 அடி அகலம், 120 அடி நீளத்திலும், மிகப்பெரிய அரண்மனை 60 அடி அகலம், 200 அடி நீள இடத்தில் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளது. இந்த மாளிகைகள் அலங்கார விளக்குகள், தேக்கு மரச்சாமான்கள், பளிங்குக்கல், கண்ணாடிகள், கம்பளங்கள் மற்றும் ஸ்படிகங்களாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. செட்டிநாடு வீடுகளின் கட்டிடக் கலை உலகப் புகழ்பெற்றவை. இந்த வீடுகளில் குறைந்தது முப்பது அறைகள் வரை இருக்கும்.

ஆயிரம் ஜன்னல் வீடு

சுண்ணாம்புக்கலவை, கருப்பட்டி, சுடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைக்கரு கலந்த கலவையை கொண்டு சுவர் கட்டியுள்ளனர். தேக்குமரத்தால் ஆன பெரிய பெரிய கதவுகள், மர பீரோக்கள், பிரமாண்டமான இரும்புப் பெட்டகங்கள், நாற்காலிகள், ஊஞ்சல் என மரவேலைப்பாடு நிறைந்த பொருள்கள், வீட்டுக்கு அழகு சேர்க்கின்றன. ஆயிரம் ஜன்னல்கள் வைத்த வீடுகள் கூட இங்கு உண்டு. ஒரு அறைமட்டும் முழுவதும் கண்ணாடிகளால் பதிக்கப்பட்ட வீடுகளும் உண்டு.

கலைநயம் மிக்க வீடுகள்

சினிமாவில் சில பிரமாண்டமான வீடுகளை பார்த்திருப்போம். பாட்டி, தாத்தா,பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா எனக் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த வீடுகளைப் பல திரைப்படங்களில் கண்டிருப்போம். அந்த வீடுகள் தான் இந்த பகுதியில் உள்ள மாளிகை. காரைக்குடி செட்டியார்களின் கலையம்சத்துடன் கோட்டைபோல் கட்டப்பட்ட வீடு தான் அது. பஞ்சை, மஞ்சள், சிவப்பு போன்ற வண்ணங்களைக் கூடுதலாக பயன்படுத்தி வண்ணம் தீட்டி இருப்பார்கள்.

பர்மா தேக்கு முதல் ஆத்தங்குடி டைல்கள் வரை

செட்டிநாடு வீடுகள் பெரும்பாலும் தரைமட்டத்தில் இருந்து ஐந்து அடிக்கும் மேல் உயரத்தில் கட்டப்பட்டுள்ளன. வீடு முழுவதும் பர்மா தேக்கு, மாடங்கள், அறைகள், தூண்கள், ஜன்னல்கள், கதவுகள் என அனைத்தும் கலைநயம் மிக்கவை. செட்டிநாட்டு வீடுகளின் மற்றொரு சிறப்பு ஆத்தங்குடி டைல்கள். இன்றைக்கு செட்டிநாடு வீடுகள் மட்டுமல்லாது எல்லாப் பகுதிகளில் இந்த டைல்களின் பயன்பாடு பரவலாகியுள்ளது. ஆனால் தொடக்கத்தில் செட்டிநாடு வீடுகளுக்காக இந்த டைல்கள் தயாரிக்கப்பட்டன. கண்ணாடிகளையும் இயற்கை வண்ணங்களையும் கொண்டு இந்த டைல் தயாரிக்கப்படுகிறது. 

ஆயிரம் ஜன்னல்கள் வைத்த வீடுகள் கூட இங்கு உண்டு. ஒரு அறை முழுவதும் கண்ணாடிகளால் பதிக்கப்பட்ட வீடுகளும் உண்டு. சுண்ணாம்புக்கலவை, கருப்பட்டி, சுடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைக்கரு கலந்த கலவையை கொண்டு சுவர் கட்டியுள்ளனர். தமிழகத்தின் பாரம்பரியக் கட்டிடக் கலையை பறைசாற்றும் செட்டிநாடு வீடுகள் பல தலைமுறைகளைக் கடந்து நிற்கும். தமிழகத்தின் பாரம்பரியக் கட்டிடக் கலையை பறைசாற்றும் செட்டிநாடு வீடுகள் பல தலைமுறைகளைக் கடந்து நிற்கும்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி