Benefits of Sprouted Moong Bean : மூளை ஷார்ப்பாக, நோய் எதிர்ப்பாற்றல் பெருக, குழந்தைகளுக்கு தினமும் ஒரு கைப்பிடி போதும்!
Oct 01, 2024, 11:01 AM IST
Benefits of Sprouted Moong Bean : மூளை ஷார்ப்பாக, நோய் எதிர்ப்பாற்றல் பெருக, குழந்தைகளுக்கு தினமும் ஒரு கைப்பிடி போதும். முளைக்க வைத்த பாசிப்பயறில் உள்ள நன்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
தினமும் ஒரு கைப்பிடியளவு ஊறவைத்து முளைக்கட்டிய பாசிப்பயிறை நாம் உணவில் சேர்த்துக்கொள்வது ஏன் என்று தெரியுமா? அதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொண்டால், நீங்கள் உங்கள் உணவில் கட்டாயம் அதை சேர்த்துக்கொள்வீர்கள். உங்கள் அன்றாட உணவில் பாசிப்பயறு கட்டாயம் இடம் பிடிக்கவேண்டும். அதை ஊறவைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிடுவது நல்லது. ஊறவைத்து, முளைக்கட்டிய பாசிப்பயிறை நீங்கள் தினமும் காலையில் காலை உணவாக சாப்பிட்டால் அது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்கும். ஏனெனில் அதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. உங்கள் நாள் முழுமைக்கும் தேவையான ஆற்றலை அது தரும். உங்களின் செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்கும். நீங்கள் தினமும் காலையில் ஊறுவைத்து முளைக்கட்டிய பாசிப்பயறு சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
புரதச்சத்துக்கள் நிறைந்தது
ஊறவைத்த பாசிப்பயறில் எண்ணற்ற தாவர புரதச்சத்துக்கள் உள்ளது. இது சைவப்பிரியர்களுக்கு தேவையான புரதச்சத்துக்களை வழங்கும். இதில் உள்ள புரதச்சத்துக்கள் உங்கள் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. இது உங்கள் திசுக்களை சரிசெய்கிறது. இது உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆற்றலையும் முறையாகப் பராமரிக்கிறது. காலையில் புரதச்சத்துக்கள் நிறைந்த ஒரு காலை உணவு உங்களுக்கு நீண்ட நேரம் ஒரு திருப்தியான சாப்பாடு சாப்பிட்ட உணர்வைத்தரும்.
ஆற்றல் அளவை அதிகரிக்கிறது
பாசிப்பயிறில் பி வைட்டமின்கள், இரும்புச்சத்துக்கள், மெக்னீசியச்சத்துக்கள் ஆகியவை உள்ளன. ஊறவைத்த பாசிப்பயறு, உங்கள் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை அள்ளி வழங்குகிறது. மேலும் இது காலை உணவுக்கு மிகவும் ஏற்றது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் ஆக்ஸ்ஜன் அளவை அதிகரிக்கின்றன. உங்களின் சோர்வைப் போக்குகிறது. உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆற்றல் அளவையும் அதிகரிக்கிறது.
செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
நீங்கள் பாசிப்பயிறை ஊறவைக்கும்போது, அது அதில் உள்ள கடுமையான சர்க்கரை உட்பொருட்கள் மற்றும் ஃபைடிக் அமில உட்பொருட்களை பிரித்துவிடுகிறது. இதனால் அதை சாப்பிடும்போது உங்களுக்கு எளிதில் செரித்துவிடுகிறது. இந்த பயிறில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் செரிமானத்தை வலுப்படுத்துகிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. உங்களின் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது
ஊறவைத்த பாசிப்பயறு கிளைசமிக் குறைவான உணவுகள் பட்டியலில் உள்ளது. இது ரத்த ஓட்டத்தில் சர்க்கரை அளவை மெதுவாக கலக்கச் செய்கிறது. இது ரத்தச் சர்க்கரை அளவுகளை முறைப்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது. அவர்களுக்கு உடலில் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. நாள் முழுவதும் அவர்கள் உற்சாகமுடன் வாழ வழிசெய்கிறது.
எடை இழப்புக்கு உதவுகிறது
பாசிப்பயறில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள், உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தந்து, நீங்கள் அதிகம் சாப்பிடுவது மற்றும் நொருக்குத்தீனிகளை உட்கொள்வதைத் தடுக்கும். எனவே உங்கள் காலை உணவில் இதை சேர்த்துக்கொள்ளலாம். இதனால் ஆரோக்கியமற்ற நொருக்குத்தீனிகள் இடையில் உட்கொள்வது தவிர்க்கப்படும். உங்கள் உடல் எடையையும் முறையாகப் பராமரிக்க உதவும். இதனால் நீங்கள் ஆரோக்கியமாகவும், சரியான எடையிலும் இருப்பீர்கள்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
பாசிப்பயிறில் எண்ணற்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அவை ஃபினோலிக் அமிலம், ஃப்ளேவனாய்ட்கள், ஐசோஃப்ளேவன்ஸ்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் ஃப்ரி ராடிக்கல்களின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. அது உங்களின் உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைக்கும். இதனால் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
இதய ஆரோக்கியம் மேம்படும்
முளைக்கட்டிய பாசிப்பயறில் பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இதை நீங்கள் சாப்பிடும்போது அது உங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இது உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உங்களின் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. கூடுதலாக, இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது உங்களுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகளை சரிப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்துகிறது
முளைக்கட்டிய பாசிப்பயிறில் வைட்டமின் சி, ஏ மற்றும் சிங்க் போன்ற முக்கிய மினரல்கள் உள்ளன. இது உங்கள் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. இதை நீங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்கள் உடல் தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. உங்கள் உடலின் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.
சரும ஆரோக்கியம்
பாசிப்பயறில் உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் தன்மை உள்ளது. இது உங்களுக்கு ஆரோக்கிய சருமத்தைத் தரும். இது உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஃப்ரி ராடிக்கல்களில் இருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் சருமம் மேம்பட உதவுகிறது. இது உங்களுக்கு வயோதிக தோற்றம் இளமையிலேயே ஏற்படுவதை தடுக்கிறது.
மனத்தெளிவை அதிகரிக்கிறது
பாசிப்பயறில் அதிகம் உள்ள பி வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியச் சத்துக்கள், நினைவாற்றலை அதிகரிக்கின்றன. மனநிலையை மேம்படுத்துகின்றன. மனத்தெளிவை அதிகரிக்கின்றன. எனவே தினமும் காலையில் இதை கட்டாயம் எடுத்துக்கொள்வது நல்லது. இது உங்களின் மூளையை ஷார்ப்பாக்கி, உங்களின் நாள் முழுவதும் முழு கவனத்துடன் செயல்படத்தூண்டும்.
சாப்பிடும் முறைகள்
ஓரிரவு ஊறவைத்து காலையில் சாலட் செய்தும் சாப்பிடலாம் அல்லது முதல் நாள் காலையில் ஊறவைத்து இரவு முளைக்க வைத்தும் சாப்பிடலாம். சமைத்தும் சாப்பிடலாம். பச்சையாகவும் சாப்பிடலாம்.
டாபிக்ஸ்