Vastu Tips: ’சமையல் அறைக்கு அருகே ஸ்டோர் ரூம் அமைக்கலாமா?’ உங்கள் வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் வாஸ்து டிப்ஸ்-vastu shastra tips for setting up a store room to attract positive energy in your home - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu Tips: ’சமையல் அறைக்கு அருகே ஸ்டோர் ரூம் அமைக்கலாமா?’ உங்கள் வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் வாஸ்து டிப்ஸ்

Vastu Tips: ’சமையல் அறைக்கு அருகே ஸ்டோர் ரூம் அமைக்கலாமா?’ உங்கள் வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் வாஸ்து டிப்ஸ்

Kathiravan V HT Tamil
Sep 14, 2024 02:54 PM IST

Vastu Tips: வாஸ்து விதிகளை பின்பற்றுவது இந்து மதத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வாஸ்து சரியாக இருந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவி மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரும் என்பது நம்பிக்கை.

Vastu Tips: ’சமையல் அறைக்கு அருகே ஸ்டோர் ரூம் அமைக்கலாமா?’ உங்கள் வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் வாஸ்து டிப்ஸ்
Vastu Tips: ’சமையல் அறைக்கு அருகே ஸ்டோர் ரூம் அமைக்கலாமா?’ உங்கள் வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் வாஸ்து டிப்ஸ்

வாஸ்து விதிகளை பின்பற்றுவது இந்து மதத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வாஸ்து சரியாக இருந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவி மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரும் என்பது நம்பிக்கை. வாஸ்து படி, சமையலறை, பூஜை அறை, படுக்கை அறை வரிசையில் ஸ்டோர் ரூம் எனப்படும் பண்டங்களை வைக்கும் அறை குறித்த வாஸ்து அம்சங்களை அறிந்து கொள்வது முக்கியம். 

அரிதாகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்படுகின்றன. இந்த அறைக்கு வீட்டில் அதிக முக்கியத்துவம் உள்ளது. உத்தரகாண்ட் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜோதிடத் துறையின் உதவிப் பேராசிரியரும் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் நந்தன் குமார் திவாரி எழுதிய 'கிரஹ நிர்மான் விவேகன்' புத்தகத்தின் ஸ்டோர் ரூம் வாஸ்து பற்றி தெரிந்து கொள்வோம் 

ஸ்டோர் ரூம் வாஸ்து

வாஸ்து படி வீட்டின் தென்மேற்கு மூலையில் ஸ்டோர் ரூம் கட்ட வேண்டும்.

வாஸ்து படி, ஸ்டோர் அறையில் குறைந்தபட்சம் ஒரு ஜன்னல் அல்லது ஸ்கைலைட் இருக்க வேண்டும்.

ஸ்டோர் அறைகளை வடகிழக்கு திசையிலும், தென்கிழக்கு திசையிலும் (கிழக்கு-தெற்கு திசையிலும்) தெற்கு திசையிலும் கட்டக்கூடாது. இது வீட்டின் எதிர்மறையை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

வாஸ்து படி அறை பெரிதாக இருக்கக்கூடாது. அதன் அளவு சிறியதாக இருக்க வேண்டும்.

சமையலறை உடன் சேர்த்தே ஸ்டோர் ரூமையும் தென்மேற்கு திசையில் அமைக்க வேண்டும்.

வாஸ்துவில் படிக்கட்டுக்கு அடியிலும் பிரம்ம ஸ்தலத்திலும் ஸ்டோர் ரூம் கட்டுவது நல்லதாகக் கருதப்படுவதில்லை.

வாஸ்து படி எந்த விதமான ஸ்டோர் ரூம் பொருட்களையும் படுக்கையறையில் வைக்க கூடாது.

இது தவிர, ஸ்டோர் ரூமின் தூய்மையிலும் சிறப்பு கவனம் செலுத்துங்கள். இங்கு எந்த விதமான அசுத்தமும் பரவ அனுமதிக்காதீர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner