Top 7 Benefits of Ivy Gourd : எக்கச்சக்க நன்மைகளை அள்ளி வழங்கும் கோவக்காய்! உடல் பருமன் முதல் புற்றுநோய் வரை துரத்தும்!
Top 7 Benefits of Ivy Gourd : எக்கச்சக்க நன்மைகளை அள்ளி வழங்கும் கோவக்காய், உடல் பருமன் முதல் புற்றுநோய் வரை அடித்து துரத்தும் மாயம் செய்யும்.

கோவக்காய் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது. கோவக்காயில் எண்ணற்ற வகைகளும் உள்ளது. கோவக்காய் வீக்கத்தை குறைக்கும் தன்மைகொண்து. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பல்வேறு உடல் உபாதைகளை தீர்க்கின்றன. ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு என அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் காய் கசப்புத் தன்மைகொண்டது. இது உடலில் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. கோவக்காயில் உள்ள பீட்டா கரோட்டின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்களின் தன்மைகொண்டவை. ரத்த பாதையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரி ராடிக்கல்களை முறைப்படுத்துகின்றன. இது செல்களின் சேதத்தை தடுக்கிறது அல்லது தாமத்தப்படுத்துகிறது. கோவக்காயில் ஃபைட்டோநியூட்டிரியன்கள் உள்ளன. அவை சாப்போனின்கள், ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் டெர்பெனாய்ட்கள் ஆகும். இவை இதயம் மற்றும் புற்றுநோய்க்கு எதிரான ஆற்றல் கொண்டவை. இது ஆஸ்துமா, சரும நோய்களையும் குணப்படுத்தும் தன்மைகொண்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோவக்காயில் அதிகளவில் நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்துக்கள், வைட்டமின் பி ஆகியவை உள்ளது. மலச்சிக்கலைப்போக்கும் திறன் கொண்டது கோவக்காய். இதில் உள்ள நன்மைகளை விரிவாகப் பார்ப்போம்.
ரத்த சர்க்கரை
கோவக்காய், ஆயுர்வேத மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு தீர்வாகிறது. இதன் இலைகளும் சமைத்து சாப்பிடப்படுகிறது. இதன் இலைகளில் சூப் தயாரிக்கலாம். கோவக்காயின் இலைகள், உங்கள் உடலில் குளுக்கோஸ் தாங்கும் திறனை அதிகரிக்கிறது. உங்கள் உணவில் கோவக்காயை சேர்ப்பதால் அது உங்கள் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது.
உடல் பருமன்
கோவக்காயில் உள்ள உடல் பருமனுக்கு எதிரான குணங்கள், கொழுப்புகள் உருவாவதை தடுக்கின்றன. உடலின் வளர்சிதையை அதிகரித்து, ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. இது பெரும்பாலான இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.