வாயில் எச்சில் ஊறும் சுவையில் பாய் வீட்டு கல்யாண விருந்து தக்காளி ஜாம்; சப்பாத்தி, பிரட், தோசைக்கு ஏற்றது!
Nov 15, 2024, 01:12 PM IST
வாயில் எச்சில் ஊறும் சுவையில் பாய் வீட்டு கல்யாண விருந்து தக்காளி ஜாம் செய்வது எப்படி என்று பாருங்கள். சப்பாத்தி, பிரட், தோசை என அனைத்துக்கும் ஏற்றது.
தக்காளியில் தொக்கு செய்து நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஜாம் செய்வது எப்படி என்று பாருங்கள். இதை பிரட், தோசை, சப்பாத்தி என் அனைத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். அதற்கு முன்னர் தக்காளியின் நன்மைகள் என்னவென்று பாருங்கள். தக்காளியில் உங்கள் உடலுக்கு தேவையான அளவு பீட்டா கரோட்டின்கள், லைக்கோபென்கள், வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இவையனைத்தும் செல்களின் சேதத்தை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகும். தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதய நோய்கள், டைப் 2 நீரிழிவு நோய்கள் மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. தக்காளி அதன் பன்முக குணங்களுக்காக சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பச்சை, மஞ்சள், சிவப்பு என அனைத்து நிறங்களிலும் உள்ளது. இதன் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். நோய் எதிர்ப்பாற்றலை அகிகரிக்கிறது. புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. வளர்சிதை மாற்ற நோய்க்குறியை தடுக்கின்றன. மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உடற்பயிற்சியில் இழக்கும் ஆற்றலை மீட்கிறது. தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவுகளை தெரிந்துகொள்ளுங்கள். ஒரு தக்காளியில் கலோரிகள் 22.5, கொழுப்பு 0.25 கிராம்கள், சோடியம் 6.25 மில்லி கிராம்கள், கார்போஹைட்ரேட்கள் 4.86 கிராம்கள், நார்ச்சத்துக்கள் 1.5 கிராம்கள், 0 சர்க்கரை, புரதச்சத்துக்கள் 1.1 கிராம் உள்ளது.
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட தக்காளியில் இருந்து நாம் எண்ணற்று உணவுகளை தயாரிக்க முடியும். இது அன்றாட பயன்பாட்டில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தக்காளியைப் பயன்படுத்தி தற்போது ஜாம் செய்ய கற்கலாம்.
தேவையான பொருட்கள்
பழுத்த தக்காளி – 5
பேரிட்சை பழங்கள் – 10
நெய் – டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – 15
நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் – ஒரு கப்
ஏலக்காய்த் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – சிட்டிகை
செய்முறை
நன்கு பழுத்த தக்காளி பழங்கள் மற்றும் பேரிட்சை பழங்களை குக்கரில் வேகவைத்து, எடுத்து தோலை மட்டும் நீக்கிவிடவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக மசித்துக்கொள்ளவேண்டும்.
அடிக்கனமான அகலமான பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து 15 முந்திரியையும் பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். அந்த நெய்யிலே மசித்த தக்காளி மற்றும் பேரிட்சை பழத்தின் கலவையை சேர்த்து கிளறவேண்டும்.
நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லத்தை அடுத்து சேர்த்து, பாகு காய்ச்சி அதை வடிகட்டி, அந்த கலவையில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுத்து ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
அடுத்து உப்பு சேர்த்து கலக்கவேண்டும். நன்றாக கிளறி அல்வா பதத்துக்கு வரும்வரை விடவேண்டும். அதில் வறுத்த முந்திரி பருப்பை சேர்த்தால், சுவையான பாய் வீட்டு கல்யாண ஸ்பெஷல் தக்காளி ஜாம் ரெடி.
இதை பூரி, சப்பாத்தி, ரொட்டி, பிரட், தோசை, அடை என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இதை நீங்கள் ஃபிரிட்ஜில் 6 மாதங்கள் வரை வைத்துக்கொள்ளலாம்.
இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்