‘கங்குவா தமிழ் மொழியில் உருவான பாகுபலி’.. சூர்யாவின் மாஸ் பேச்சால் எகிறும் எதிர்பார்ப்பு..
கங்குவா படத்தின் மற்றொரு டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழியில் உருவாகியுள்ள பாகுபலி திரைப்படமாக இது இருக்கும் என இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரு மடங்காகியுள்ளது.

கங்குவா படத்தின் ரிலீஸ் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்ரமணியம், யோகி பாபு, கோவை சரளா, ஆனந்தராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
3டி யில் அசத்தப்போகும் படம்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தம் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ள இந்தத் திரைப்படம் 3டி தொழில் நுட்பத்திலும் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் ஏற்தனவே வெளியாகி உள்ள நிலையில், தற்போது படம் வெளியாகும் 4 நாட்களுக்கு முன் ரிலீஸ் ட்ரெயிலரை வெளியிட்டுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
எதிர்கொள்வோம்.. எதிரி கொல்லுவோம்
அந்த ட்ரெய்லரின் தொடக்கத்தில், "கருங்காட்டு புலிக்கூட்டம் ஒன்னா உறும்புச்சுனா.." என்ற டயலாக்வுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. ட்ரெய்லரில் "எதிர்கொள்வோம்.. எதிரி கொல்லுவோம்.." எனும் வசனங்களுடன் அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் கங்குவா படத்தில் ஆக்சன் காட்சிகளைக் காண ரசிகர்களுக்கு பஞ்சம் இருக்காது எனத் தெரிகிறது.