குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேரட் அல்வா! இன்றே எளிமையாக செய்யலாம்! சூப்பர் ரெசிபி இதோ
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேரட் அல்வா! இன்றே எளிமையாக செய்யலாம்! சூப்பர் ரெசிபி இதோ

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேரட் அல்வா! இன்றே எளிமையாக செய்யலாம்! சூப்பர் ரெசிபி இதோ

Suguna Devi P HT Tamil
Nov 10, 2024 09:05 AM IST

கேரட் போன்ற காய்கறிகளை பயன்படுத்தியும் அல்வா செய்வதுண்டு. இதனை நாம் வீட்டிலேயே எளிதாக செய்யலாம். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் இந்த கேரட் அல்வா மிகவும் பிடிக்கும். கேரட் அல்வா செய்யும் சூப்பர் ரெசிபியை தெரிந்து கொள்ள இதாய் முழுமையாக படியுங்கள்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேரட் அல்வா! இன்றே எளிமையாக செய்யலாம்! சூப்பர் ரெசிபி  இதோ
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேரட் அல்வா! இன்றே எளிமையாக செய்யலாம்! சூப்பர் ரெசிபி இதோ

தேவையான பொருட்கள் 

3 கப் துருவிய கேரட்

1 கப் சர்க்கரை தலை தட்டி

கால் கப் பால் கோவா

அரை கப் நெய்

1 டேபிள்ஸ்பூன் உலர் திராட்சை

1 டேபிள்ஸ்பூன் முந்திரி

1 டேபிள்ஸ்பூன் பாதாம்

அரை டேபிள்ஸ்பூன் ஏலக்காய் தூள்

 தேவையான அளவு எண்ணெய்

செய்முறை 

முதலில் கேரட்டை நன்கு பொடியாக துருவி, முந்திரி மற்றும் பாதாமை சிறு சிறு துண்டுகளாக ஆக்கி, ஏலக்காயை பொடித்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு  நெய் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும். எண்ணெய் சுட்டதும் அதில் சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து முந்திரி லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும். அடுத்து அதில் பொடியாகத் துருவி வைத்திருக்கும் கேரட்டை போட்டு நன்கு கிளறி அதன் பச்சை வாசம் போய் நன்கு வதங்கி வேகும் வரை வதக்க வேண்டும். இது சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை எடுக்கலாம்.

கேரட் வெந்ததும் அதில் சர்க்கரை மற்றும் பால் கோவாவை போட்டு நன்கு கேரட்டோடு ஒன்றோடு ஒன்றாக சேருமாறு கிளறி விட்டு அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை ஓரளவிற்கு உருகியதும் அதில் பொடித்து வைத்திருக்கும் ஏலக்காய் தூளை போட்டு நன்கு கிளறி விடவும்.

அடுத்து மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் நெய்யை இதில் சேர்த்து கிளறி விட வேண்டும். மிக கவனமாக அல்வா இளகிய பதம் இருக்கும் போதே இறக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் துருவிய பாதாம் துண்டுகளை அதன் மேலே தூவி சிறிது நேரம் ஆற விட்டு பரிமாறவும். அல்வாவை சுருளாக வதக்கி விட கூடாது. அப்படி செய்தால் அடுப்பிலிருந்து இறக்கி வைத்த பத்தாவது நிமிடத்தில் அல்வா இறுகி கட்டியாகி விடும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான கேரட் அல்வா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள். கடைகளில் வாங்கும் அல்வாவை காட்டிலும் இது மிகவும் சாஃப்ட் ஆகவும் சுவையாகவும் இருக்கும். அனைத்து வயதினரும் சாப்பிட இந்த அல்வா உகந்தது. குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் இது மாதிரி வித்தியாசமான பண்டங்களை செய்து கொடுப்பது நல்லது ஆகும். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.