ஆந்திரா ஸ்டைல் சாம்பார் பொடி; இந்த மாதிரி சுவையில் நீங்கள் சாப்பிட்டு இருக்கவே மாட்டீர்கள்!
Dec 02, 2024, 02:25 PM IST
நல்ல கார சாரமான ஆந்திரா ஸ்டைல் சாம்பார் பொடி செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
வர மிளகாய் – 30
வர மல்லி – அரை கப்
கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
கொப்பரைத் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
(வழக்கமான தேங்காய் துருவல் எடுத்துக்கொள்ளக்கூடாது. கொப்பரை தேங்காய்த் துருவல் எடுத்துக்கொள்ளவேண்டும். கொப்பரை தேங்காய் கடைகளில் கிடைக்கும்)
எள் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் - வறுக்கத் தேவையான அளவு
செய்முறை
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, குறைவான தீயில் வர மிளகாய், வரமல்லி, கடலை பருப்பு, உளுந்து சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். அனைத்தும் நன்றாக பொன்னிறமாக வறுத்து வரவேண்டும்.
அனைத்தும் பொன்னிறமானவுடன், எள், கறிவேப்பிலை, கொப்பரைத் துருவலை கடைசியாக சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். ஆறியபின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தப் பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் சேர்த்து வைத்துக்கொள்ளவேண்டும். இதை ஒரு மாதம் வரை வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
பயன்படுத்துவது எப்படி?
சாம்பார் செய்யும்போது கால் கப் பருப்புக்கு ஒரு டேபிள் ஸ்பூன் ஆந்திரா ஸ்டைல் சாம்பார் பொடியை சேர்த்து, சாம்பார் வைக்கவேண்டும்.
மழைபெய்து ஆங்காங்கே காய்ச்சல் பரவி வருகிறது. இதோ உங்களுக்கு காய்ச்சல் வந்தால் என்ன கசாயம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பாருங்கள்.
காய்ச்சல் வந்துவிட்டால் நாம் பாராசிட்டமால் மாத்திரைகளை தேடி ஓடுவோம். ஆனால் இந்த கசாயம் மட்டும் போதும். உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உங்கள் காய்ச்சலை விரட்டியடிக்கும்.
காய்ச்சல் கஷாயம் செய்ய தேவையான பொருட்கள்
வேப்பம் ஈர்க்கு – 7 (இலையை நீக்கிவிட்டு கிடைக்கும் குச்சி)
கறிவேப்பிலை ஈர்க்கு – 7
மிளகு – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
இஞ்சி – ஒரு இன்ச்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – சிட்டிகை (தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். கசாயத்தின் கசப்பு சுவை தெரியாமல் இருக்க சேர்க்கப்படுகிறது அல்லது கஷாயத்தை வடிகட்டிய பின்னர் தேனையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்)
செய்முறை
மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள் தூள் அனைத்தையும் சிறிய உரலில் சேர்த்து தட்டிக்கொள்ள வேண்டும். அதில் ஈர்க்குகளையும் சேர்த்து நன்றாக தட்டிக்கொள்ள வேண்டும். இவையனைத்தின் விழுது இரண்டு ஸ்பூன் அளவுக்கு வரும்.
இதை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். தண்ணீர் அரை டம்ளராக சுண்டியவுடன் வடிகட்டி, அதில் தேவைப்பட்டால் இந்துப்பு அல்லது தேன் கலந்து பருகவேண்டும். அப்படியே வேண்டுமானாலும் பருகலாம்.
சளி, இருமல், காய்ச்சல் அடிக்கடி ஏற்படும் காலங்களில் நீங்கள் இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மூன்று முதல் 5 நாட்கள் மட்டுமே இந்த கஷாயத்தை தேவையின் அடிப்படையில் எடுத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் வாரத்தில் ஒருமுறை எடுத்துக்கொண்டால் உங்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பைத் தரும்.
இந்த கஷாயத்தை நாளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பருகலாம். இதை மிதமான சூட்டில் பருகவேண்டும். பருகும்போதும், பருகியவுடனும் உங்கள் உடலில் இருந்து வியர்வை வெளியேறும். அது உங்கள் காய்ச்சல் சீரடைகிறது என்பதற்கான அறிகுறியாகும்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்