தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அதிகாலையில் வெறும் வயிற்றில் நல்ல ஓட்டப்பயிற்சி; ஆரோக்கியத்துக்கு தேவையான 9 நன்மைகளைத் தரும்!

அதிகாலையில் வெறும் வயிற்றில் நல்ல ஓட்டப்பயிற்சி; ஆரோக்கியத்துக்கு தேவையான 9 நன்மைகளைத் தரும்!

Priyadarshini R HT Tamil

Dec 22, 2024, 10:59 AM IST

google News
அதிகாலை ஜாகிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பாருங்கள்.
அதிகாலை ஜாகிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பாருங்கள்.

அதிகாலை ஜாகிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பாருங்கள்.

தினமும் அதிகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் ஓட்டப்பயிற்சியை செய்யும்போது, அது உங்கள் உடலுக்கு 9 நன்மைகளைக் கொடுக்கிறது. வெறும் வயிற்றில் நீங்கள் ஓடுவது அல்லது வேகமான ஓட்டம் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரும். இது கொழுப்பைக் கரைக்கும், உங்களின் திறனை அதிகரிக்கும். உங்களின் இன்சுலின் சென்சிட்விட்டியை சிறப்பாக்கும். உங்களின் மனத்தெளிவை மேம்படுத்தும். எனவே நீங்கள் அதிகாலையில் சிறிது நேரம் ஓடுவதை காலை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

அதிக கலோரிகளை எரிக்கிறது

நீங்கள் வெறும் வயிற்றில் ஓடும்போது, அது உங்களின் உடலில் தேங்கியுள்ள கொழுப்பை வெளிக் கொண்டுவருவதற்கு உதவுகிறது. அதை ஆற்றலாக்கிவிடுகிறது. கிளைக்கோஜென்கள் குறைவாக இருக்கும்போது, அது அதிக கொழுப்பை எரிக்கிறது.

இன்சுலின் சென்சிட்விட்டி

உங்கள் உடலில் இன்சுலின் சென்சிட்விட்டி அதிகரித்தால், அது ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்தும். இதனால் உங்கள் ரத்த சர்க்கரை அளவு முறையாகப் பராமரிக்கப்படும்.

ஆற்றலை அதிகரிக்கிறது

உங்கள் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். நீங்கள் வேகமாக ஓடும்போது, நாட்கள் செல்லச்செல்ல உங்கள் உடல் கொழுப்பை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்று தெரிந்துகொள்ளும். பல காலங்களுக்கு கிளைக்கோஜென்களை சேமித்து வைத்துக்கொள்ளும்.

கொழுப்பை எரிக்கும் திறனை அதிகரிக்கிறது

அதிவேக ஓட்டம் என்பது உங்கள் உடலின் கொழுப்பு ஆக்ஸிடேசனை அதிகரிக்கும். இது உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு நல்லது. வேகமாக கொழுப்பை எரிக்கக்கூடியது ஆகும்.

மனத்தெளிவை அதிகரிக்கிறது

அதிகவேகமாக நீங்கள் ஓடும்போது அது உங்களின் மனத்தெளிவை அதிகரிக்கிறது. இது உங்களை எச்சரிக்கையுடன் இருக்கத்தூண்டுகிறது. இதனால் உங்கள் உடலில் எண்டோர்ஃபின்கள் வெளியாகி, அது அட்ரெனலைன்களை அதிகரிக்கிறது.

ஹார்மோன் உற்பத்தியின் வளர்ச்சிக்கு உதவுகிறது

வெறும் வயிற்றில் ஓடுவது, உங்கள் உடலில் வளர்ச்சி ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது உங்கள் உடலில் தசைகளை மீட்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கொழுப்பு இழப்பை அதிகரிக்கிறது.

உடல் வளர்சிதையை மேம்படுத்துகிறது

அதிகவேக உடற்பயிற்சிகள் அனைத்தும் உங்களின் உடல் வளர்சிதையை அதிகரிக்கிறது. இது உங்களுக்கு உடல் எடையை குறைக்கவோ அல்லது பராமரிக்கவோ உதவுகிறது. இதனால் நீண்ட காலம் உங்களுக்கு நன்மை கிடைக்கிறது.

செரிமானக் கோளாறுகள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது

செரிமானக் கோளாறுகள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. வெறும் வயிற்றில் நீங்கள் அதிவேகமாக ஓடும்போது, அது உங்களுக்கு வாந்தி, வயிற்று வலி போன்ற பிரச்னைகளை கொண்டுவருவதை குறைக்கிறது. இதனால் உங்களுக்கு செரிமான கோளாறுகள் ஏற்படுவதில்லை. சாப்பிட்டவுடன் 2 மணி நேரம் கழித்து நீங்கள் ஓடலாம்.

மனதை வலுப்படுத்துகிறது

வெறும் வயிற்றில் ஓடுவது, உங்களின் மனநிலையை அதிகரிக்கிறது. இது உங்களின் பசியைக் அதிகரிக்கிறது. உங்களின் சோர்வைப்போக்குகிறது. காலையில் வெறும் வயிற்றில் ஓடும்போது உங்களுக்கு எண்ணற்ற நேர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி