சர்க்கரை நோயால் ஏற்படும் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் எரிச்சல்; ஒரே மருந்தில் தீர்வு – சித்த மருத்துவர் கூறுவது என்ன?
Dec 17, 2024, 06:18 PM IST
சர்க்கரை நோயால் ஏற்படும் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் அரிப்புக்களுக்கு சித்த மருத்துவர் காமராஜ் கூறும் அறவுரை என்ன?
நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் குறித்து முதலில் தெரிந்துகொள்ளுங்கள். உடல் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்தும் அளவை பாதிப்பது சர்க்கரை நோய் என்ற அழைக்கப்படுகிறது. குளுக்கோஸ் உடலுக்கு ஆற்றலை வழங்கும் முக்கியமான ஆதாரம் ஆகும். இந்த ஆற்றலால்தான் தசைகள் உருவாகின்றன மற்றும் திசுக்கள் வளர்கின்றன. மூளைக்கும் முக்கியமான ஒன்றாகும். இதில் வகைகள் உண்டு. அனைத்து வகையிலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. அதிக சர்க்கரை, கடும் உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. நாள்பட்ட சர்க்கரை வியாதிகள் டைப் 1 மற்றும் டைப் 2 என்று அழைக்கப்படுகின்றன.
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
நீரிழிவு நோயின் அறிகுறிகள், ரத்தத்தில் எவ்வளவு அதிகம் சர்க்கரை உள்ளதோ அதைப்பொறுத்து மாறுபடும். அதனால் அதன் வகைகளைப் பொறுத்து அறிகுறிகள் தோன்றினாலும், பொதுவான அறிகுறிகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளவை உள்ளன.
- வழக்கத்தைவிட அதிக தாகம்
- அதிக முறைகள் சிறுநீர் கழிப்பது
- முயற்சியின்றி திடீரென உயிரிழப்பது
- சிறுநீரில் கீட்டோன்கள் இருப்பது.
(கிடோன்கள் என்பவை சதை மற்றும் கொழுப்பின் உடைந்த பாகமாகும். இவை உடலில் தேவையான அளவு இன்சுலின் இல்லாதபோது உடைகிறது)
- சோர்ந்திருத்தல்
- எரிச்சல் கொள்வது மற்றும் மனநிலையில் மாற்றம்
- கண்கூச்சம் மற்றும் மங்கலாகத் தெரிவது
- புண்கள் மற்றும் காயங்கள் தாமதமாக குணமடைவது
- தொற்றுகள் அடிக்கடி ஏற்படுவது. குறிப்பாக பற்களின் ஈறுகள், சருமம் மற்றும் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படுவது.
இவையனைத்தும் சர்க்கரை நோயின் அறிகுறிகளாகும்.
இந்த சர்க்கரை நோயால் அவதிப்படுகிறீர்களா? இதனால் உங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் எரிச்சல் ஏற்பட்டு மாதக்கணக்கில் அவதிப்படுகிறீர்களா? எனில் உங்களுக்கு திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு எளிய தீர்வைக் கொடுக்கிறார். அது என்னவென்று பாருங்கள். தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள தகவல்.
சர்க்கரை நோய் ஏற்படுத்தும் உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல்
சர்க்கரை நோயாளிகளுக்கு உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் கடும் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். எத்தனை மாத்திரைகள் சாப்பிட்டாலும், ஊசிகள் போட்டுக்கொண்டாலும், அது பல மாதங்கள் மற்றும் ஆண்டுகள் என்று தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இதில் இருந்து மீளவே முடியவில்லை என்று வருந்துபவரா?
சித்த மருத்துவர் கூறும் எளிய தீர்வு என்ன?
அதற்கு கற்ப அமுக்கரா சூரணம் எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் அமுக்கரா கிழங்கு, கிராம்பு, சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், திருநாகப்பூ என்ற 7 மூலிகைகள் உள்ளது. இதை நீங்கள் காலை, மாலை இருவேளையும் ஒரு ஸ்பூன் உணவு உண்ட பின் பாலில் கலந்து சாப்பிடவேண்டும். மாத்திரை என்றால் அதை காலை மற்றும் மாலை உணவுக்குப்பின்னர் 2 மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். கற்ப அஸ்வ சூரணம் என்றும் இதற்கு மற்றொரு பெயர் உள்ளது.
எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்?
இதை தொடர்ந்து 2 அல்லது 4 மாதங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். உங்களுக்கு சர்க்கரை நோயால் ஏற்படக் கூடிய உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் எரிச்சல் இருக்காது. மேலும் டாக்டர் காமராஜ் கூறுகையில், ‘எந்த ஒரு மருந்தை உட்கொள்ளும் முன்னரும், நீங்கள் சித்த மருத்துவரின் அறிவுரையைப் பெற்று சாப்பிடவேண்டும்’ என்கிறார்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்