விட்டத பிடிக்கணும்.. தெலுங்கு சினிமாவில் தனது ஆட்டத்தை தொடங்கிய ஷங்கர்.. அங்க இதுதான் ரெக்கார்டு..
ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர். இதற்கு முன் வேறு எந்த தெலுங்கு படமும் இந்த சாதனையை படைத்து இல்லை எனவும் சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன.

ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தைபிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்குநர் ஷங்கர் எடுத்துள்ளார். ராம் சரண் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தில் ராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தில் ராஜ் மற்றும் ஷிரிஷ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
சாதனை செய்ய உள்ள ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை ஷங்கர் நேரடி தெலுங்கு படமாக இயக்கியதன் மூலம் டோலிவுட் சினிமாவில் தன் முதல் காலடி தடத்தை பதித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர், அவர் படங்களில் பல சாதனைகள் செய்யப்படும் என்பது தவிர்க்க முடியாது. அதை தனது தெலுங்கு சினிமாவிலேயே செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
அதாவது, கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை இயக்குநர் ஷங்கர் அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளாராம். இது இந்திய வரலாற்றில் தெலுங்கு சினிமா செய்யும் சாதனை என்றே கூறப்படுகிறது. ஏனென்றால் இதற்கு முன் எந்த தெலுங்கு படமும் அமெகரிக்காவில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தியது இல்லையாம்.