‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள், அவள் வந்துவிட்டாள்’ உங்கள் செல்ல மகள்களுக்கு மலர்களின் பெயர்கள் இதோ!
Dec 15, 2024, 11:33 AM IST
உங்கள் செல்ல மகள்களுக்கு நீங்கள் மலர்களின் பெயர்களை தேர்ந்தெடுக்கலாம். இங்கு அர்த்தமுள்ள மலர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
உங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு மலர்களிடம் இருந்து பெறப்பட்ட பெயர்களை சூட்டி மகிழலாமா? இதோ அரிதான இந்திய மலர்களிடம் இருந்து உங்கள் குழந்தைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிய பெயர்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இதற்கு எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளது. மீள்வு, அழகு, பலம் என அவை உள்ளன. உங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட, தனித்துவமிக்க 10 பெயர்களை இங்கு பார்க்கலாம். இவை அரிய இந்திய மலர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பெயர்கள், ஒவ்வொன்றுக்கும் சிறப்பான அர்த்தம் உள்ளது. ஒவ்வொன்றும் இயற்கையின் எழிலை உணர்த்துவது ஆகும்.
ரஜானி
ரஜானி என்றால் இனிமையான மணத்துடன் மலர்வது என்று பொருள். இது அழகைக் குறிக்கும் பெயர். இது இருளில் ஒளிரும் அழகு என்பதை குறிக்கிறது.
நர்கிஸ்
நர்கிஸ் என்றால், நர்சிசஸ் மலர்களிடம் இருந்து பெறப்பட்ட பெயர். இது அழகு, எளிமை, அன்பு, கருணை என எண்ணற்ற அர்த்தங்களைக் கொண்டது. இது எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடிய பெயராகும். இயற்கையின் அர்புதங்களுடன் தொடர்புடையது.
பாரிஜாதம்
பாரிஜாதம் என்பது, இந்திய இதிகாசங்களில் இடம்பெறும் மலரின் பெயர். இந்தப்பெயருக்கு அழகு, கருணை மற்றும் தூய்மை என அர்த்தங்கள் உள்ளது. இது நளினம் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பெயராகும். இதுவும் எல்லா காலத்துக்கும் ஏற்ற பெயர். இந்த மலரின் மணம் போன்ற குணம் கொண்டவர் என்பதை குறிப்பிடுகிறது.
ரோஹினி
ரோஹினி என்ற பெயர் அரிதான மலரிடம் இருந்து பெறப்பட்ட பெயராகும். இதற்கு புனிதம், தூய்மை, தனித்தன்மை மற்றும் கருணை என எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளது. இதுவம் எல்லா காலத்துக்கும் ஏற்ற பெயர். இது அழகு மற்றும் இயற்கை எழிலை பிரதிபலிக்கும் பெயராகும்.
மல்லிகா
மல்லிகா என்பது மல்லிகைப் பூவிடம் இருந்து பெறப்பட்ட பெயராகும். இதை அதிகம் பேர் தேர்ந்தெடுக்கக்ககாரணம் இதன் அர்த்தம்தான். இது எளிமை, தூய்மை மற்றும் நளினம் என்பதைக் குறிக்கிறது. இது கருணை மற்றும் இயற்கையின் அழகோடு தொடர்புடைய பெயர். இந்தப் பெயரும் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடியது ஆகும்.
ஜூஹி
ஜூஹி என்ற பெயர் மல்லிகை மலரிடம் இருந்து வந்த பெயராகும். மல்லிகை மலர் அதன் நறுமணத்துக்காக கொண்டாடப்படும் மலர் ஆகும். இது தூய்மை மற்றும் ஆன்மீக ஒளி ஆகியவற்றைக் குறிக்கிறது. இது மத நிகழ்ச்சிகளில் அதிகம் இடம்பெறும் மலராகும். விழாக்கள் மற்றும் புனித காரியங்களுக்கு பயன்படுத்தப்படும் மலராகும். இந்தப்பெயரும் எல்லா காலத்துக்கும் ஏற்ற பெயர்.
பத்மினி
பத்மினி என்பது உங்கள் பெண் குழந்தைகளுக்கு சூட்ட ஏற்ற பெயர். இது தாமரை மலரிடம் இருந்து பெறப்பட்ட பெயராகும். பத்மா, பத்மினி, கமலா, கமலம் ஆகியவை தாமரையிடம் இருந்த பெறப்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயராகும். இந்த பெயருக்கு இயற்கை அழகு, கருணை, நேர்த்தி, நளினம், புனிதம், தூய்மை என எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளது. இந்தப்பெயரும் எல்லா காலத்துக்கும் ஏற்ற பெயராகும்.
வசந்திகா
வசந்திகா என்றால், அரிதான மலர் என்று பொருள். இது புத்துணர்ச்சி, வசந்தம் மற்றும் புதிய துவக்கம் என்ற அர்த்தங்களைக் கொடுக்கிறது. இது வளர்ச்சியைக் குறிப்பிடுகிறது. அழகு மற்றும் வாழ்வின் புதிய கோணம் என்ற அர்த்தத்தை தரும் பெயராகும்.
மேரிகோல்ட்
இது பளபளக்கும் சாமந்தி பூவிடம் இருந்து பெறப்பட்ட பெயராகும். இதற்கு மகிழ்ச்சி, நேர்மறை எண்ணம் மற்றும் இதம் போன்ற எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளது. இது உங்களுக்கு ஒரு ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. மகிழ்ச்சி மற்றும் எளிய சந்தோஷங்களைக் கொடுக்கக்கூடியது.
கேட்டகி
கேட்டகி என்ற பெயர் பைன் பூக்களிடம் இருந்து பெறப்பட்ட பெயராகும். இது தூய்மை, புனிதம், பக்தி, ஆன்மீகம் என எண்ணற்ற அர்த்தங்களைக் கொடுக்கும் பெயராகும்.
டாபிக்ஸ்