மாகாபாவை மாட்டிவிட்ட நிகழ்ச்சி.. பறந்து வந்த போலீஸ் கம்ளையன்ட்.. விஜய் டிவிக்கு வந்த சோதனை!
Oct 08, 2024, 04:10 PM IST
சமீப காலத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி மற்றும், விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவது அதிகரித்துள்ளது.
அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில், வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்துள்ளது விஜய் டிவி. வெறும் நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, அதன் தொகுப்பாளர்களும், அவர்கள் மக்களைக் கவரும் விதமும், மக்கள் விஜய் டிவியே நேசிக்க அதிக காரணமாக அமைகிறது. ஆனால், சமீப காலங்களில் விஜய் டிவியின் பெயரும், அதன் தொகுப்பாளரின் பெயரும் அதிக சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
குக் வித் கோமாளி
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் வெடித்த சண்டை, விஜய் டிவியைத் தாண்டி, பல ஊடகங்களிலும் பல தரப்பட்ட மக்களாலும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதுமட்டுமின்றி, அமைதியான வார்த்தைகளில் சென்று கொண்டிருந்த சண்டை, ஒரே ஒரு வீடியோவால், செருப்பு, துடைப்பம், அமானுஷ்யம் என அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.
கடுப்பான மாகாபா
இதனை ஆரம்பித்து வைத்தவர் மணிமேகலையாக இருந்தாலம், அதை பிரபலப்படுத்தியவர் மாகாபா ஆனந்த். பிரியங்கா தனது நெருங்கிய தோழியாக இருந்தாலும், தனிப்பட்ட இருவருக்கு உள்ளே நடக்கும் பிரச்சனைகளில் தலையிடுவது நாகரிகமற்றது என இருந்த மாகாபாவையே, சொம்பு என கூறி அசிங்கப்படுத்தியிருப்பார் மணமேகலை. இதனால், கொதித்து எழுந்த மாகாபா செருப்பை பதிவிட்டு மணிமேகலைக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பார்.
மாகாபா மீது புகார்
இதனால், விஜய் டிவியே பரபரப்பாகி இருக்கும் சமயத்தில், தற்போது மாகாபா ஆனந்த் மீது போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். இவர் முறையாக அனுமதி பெறாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, பொது அமைதியை குலைத்ததாக அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் டிவியில், தீபக், கோபிநாத், சிவகார்த்திகேயனுக்கு பிறகு மிகவும் பிரபலமாக உள்ள தொகுப்பாளர் என்றால் அது மாகாபா ஆனந்த் தான். இவர் சினிமாவில் நடிகரான பின்பும், மீண்டும் விஜய் டிவியில் தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். தொகுப்பாளராக நிறம் முக்கியமானதல்ல என பலருக்கும் எடுத்துக் காட்டியவரும் இவர்தான்.
சிறப்பு விருந்தினருக்கு வந்த சோதனை
இந்த நிலையில், மாகாபா மீது வழக்கு தொடரப்பட்டது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரக்கையில், திருச்சி அரியமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றே மாகாபா மீது வழக்குப் பதிய காரணமாக அமைந்தது எனத் தெரிகிறது.
பொதுவாகவே சென்னை, கோவை, ஓசூர் போன்ற மாநகராட்சிகளில் மக்களின் பொழுது போக்கிற்காகவும் அவர்களின் பணிசுமை உள்ளிட்ட மனநிலையை மாற்றுவதற்காகவும் ஹாப்பி ஸ்டீரிட் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுண்டு. இவை பெரும்பாலும் தெருக்களில்தான் நடைபெறும்.
மக்களை குஷிபடுத்திய மாகாபா
அதுபோல, திருச்சி அரியமங்கலத்தில் ஒரு கல்லூரி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மாகாபா ஆனந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தார். அந்த அழைப்பை ஏற்ற மாகாபா, கடந்த ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்க திருச்சிக்கு சென்றுள்ளார். பின் அங்கு சென்ற மாகாபா ஆனந்த் நிறைய விஷயங்களை பேசி, காமெடி செய்து மக்களை தனது பாணியில் மகிழ்வித்தார்.
அனுமதியற்ற நிகழ்ச்சி
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் இந்த நிகழ்ச்சி ஒரு மருத்துவம் தொடர்பான நிகழ்ச்சி என்று கூறி அனுமதியை பெற்றுள்ளனர்.
மருத்துவ முகாம் எனக் கூறிவிட்டு, ஹாப்பி ஸ்டீரிட் நிகழ்ச்சி நடத்தியதால் அங்கு ஒரே சமயத்தில் 2000 பேருக்கு மேல் கூடிவிட்டனர். இதை அறிந்த போலீசார் நிகழ்ச்சியை ரத்து செய்தது.
பின், முறையாக நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்காமல், அதிக அளவு கூட்டம் சேர்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அங்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஜய் டிவி பிரபலம் மாகாபா ஆனந்த் உள்ளிட்ட 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்,
டாபிக்ஸ்