Cook With Comali: சொம்பு... செருப்பு... அமானுஷ்யம்... ஆடாத ஆட்டமெல்லாம்... இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு...-vijay tv fame makapa anand replies vj manimegalai post - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cook With Comali: சொம்பு... செருப்பு... அமானுஷ்யம்... ஆடாத ஆட்டமெல்லாம்... இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு...

Cook With Comali: சொம்பு... செருப்பு... அமானுஷ்யம்... ஆடாத ஆட்டமெல்லாம்... இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு...

Malavica Natarajan HT Tamil
Sep 24, 2024 09:58 AM IST

Cook With Comali: மணிமேகலை- பிரியங்காவின் சண்டையில் வருவோர் போவோர் எல்லாம் கருத்து சொல்லி வந்த நிலையில், நமக்கு எதுக்கு வம்பு என நழுவி இருந்த மாகாபா ஆனந்த் தற்போது செய்த செயல் தான் அனைவரையும் மீண்டும் அந்தப் பிரச்சனை குறித்து பேச வைத்துள்ளது.

Cook With Comali: சொம்பு... செருப்பு... அமானுஷ்யம்... ஆடாத ஆட்டமெல்லாம்... இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு
Cook With Comali: சொம்பு... செருப்பு... அமானுஷ்யம்... ஆடாத ஆட்டமெல்லாம்... இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு

நடுநிலையாக பேசிய மாகாபா

ஆரம்பத்தில் இந்த விவகாரம் குறித்து பேசிய மாகாபா ஆனந்த், "இது தனிப்பட்ட 2 நபர்களுக்கு இடையிலான பிரச்சனை. இன்னைக்கு அடிச்சிப்பாங்க, நாளைக்கு சேந்துப்பாங்க. இதுபத்தி எல்லாம் நாம பேச வேணாம். இது நாட்டுக்கு முக்கியமான பிரச்சனை இல்லை" என்று கூறிவந்தார்.

ஆனால், மணிமேகலைக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், விஜய் டிவியைச் சேர்ந்த பலரும் பிரியங்காவிற்கே ஆதரவு தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி, மணிமேகலை மெச்சூரிட்டி இல்லாமல், தன்னை மக்கள் மறந்து விடுவார்களோ என்ற பயத்தில் இந்த மாதிரி நடந்து கொள்கிறார் என பலரும் கூறி வந்தனர்.

சொம்புக்கு என்ன மரியாதை

இதைத் தாங்கிக் கொள்ள முடியாத மணிமேகலை, தனது ஹுசைன் மணிமேகலை யூடியூப் சேனலில் மீண்டும் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், தனக்கு எதிராக பேசிய அனைவரையும் சொம்பு என விமர்சித்துள்ளார். அதுமட்டுமின்றி பல பஞ்ச் டயலாக்குகளையும் பேசியுள்ளார். இந்த வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் உள்ள நிவையில், மாகாபா ஆனந்த், மணிமேகலை பாணியில் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கடுப்பான மாகாபா

மணிமேகலையின் இந்த பேச்சால் கடுப்பான மாகாபா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் செருப்பு உள்ள படத்தை பகிர்ந்துள்ளார். இதுவரை தனிப்பட்ட முறையில் யாருக்கும் பொதுவெளியில் ஆதரவு தெரிவிக்காமல் அமைதி காத்து வந்த மாகாபா ஆனந்த் தனது நெருங்கிய தோழியான பிரியங்காவிற்கு இந்த பதிவின் மூலம் நேரடியாக தான் துணையாக நிற்பதை நிரூபித்துள்ளார்.

மாகாபாவுடன் கை கோர்த்த டிஜே பிளாக்

இந்நிலையில், மணிமேகலையில் பதிவால் எரிச்சலடைந்த டிஜே பிளாக்கும், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை அதகளம் செய்துள்ளார். மாகாபா வெறும் செருப்பை பதிவிட்ட நிலையில், டிஜி பிளாக்கோ ஒருபடி மேலே சென்றுள்ளார். அதில், தான் மாகாபா ஆனந்தின் பதிவால் கவரப்பட்டதாகவு், தங்களை சுற்றி அமானுஷ்ய சக்திகள் நெருங்காமல் இருக்க இதுதான் சிறந்த வழி எனக் கூறி , செருப்புகளுடன் துடைப்பம் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தப் பொருட்கள் கெட்ட சக்திகளை நம்மிடம் நெருங்க விடாது என்பது கிராமத்தில் உள்ளவர்களின் நம்பிக்கை.

ஆடாத ஆட்டமெல்லாம்...

இது இத்தோடு முடிந்ததா என நினைத்தால் அதுவும் இல்லை. மாகாபா தற்போது டிஜே பிளாக்குடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், சொம்புக்கு என்ன மரியாதை மயிரு என கோமாளி எமோஜியை பதிவிட்டதுடன், இந்த செருப்ப எடுத்து ஸ்டோரி போடுடா என குறிப்பிட்டுள்ளார். இத்துடன் இல்லாமல், பின்னணியில் ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள என திரைப்படப் பாடலையும் பதிவிட்டுள்ளார்.

மாகாபாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி உள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் தனது தோழியாக இருந்தாலும் பொதுவெளியில் இருவருக்குமான இடத்தை வழங்கி வந்த மாகாபாவையே மணிமேகலை கோபப்படுத்தி விட்டார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.