Manimegalai: குக்கு வித் கோமாளியில் இருந்து விலகியாச்சி..அடுத்து இந்த சேனலுக்கு போகிறாரா? மணிமேகலை அடுத்த அதிரடி முடிவு!
Manimegalai : இனிமேல் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை. அவர் குக் வித் கோமாளியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார் என்ற தகவல்கள் வெளியானது.
விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த 4 சீசன் வரை செஃப் வெங்கடேஷ்பட்- தாமு கூட்டணியில் மக்களுக்கு சிரிப்பை வாரி வழங்கி வந்தநிலையில், அந்தக் கூட்டணி முறிந்து வெங்கடேஷ் பட் சன் டிவிக்கு சென்றுவிட்டார். இதையடுத்து நிகழ்ச்சிக்கு புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் வந்தார். இவர் நிகழ்ச்சியிலும் பங்கேற்பாளர்களுடனும் சகஜமாக பழகவே நேரம் எடுத்த காரணத்தால் இந்த சீசன் ஆரம்பம் முதலே சற்று தொய்வாக காணப்பட்டது.
இதற்கிடையில், தொகுப்பாளர் மணிமேகலைக்கும் பங்கேற்பாளர் பிரியங்காவிற்கும் இடையே மோதல் வெடித்து சோசியல் மீடியா வரை சென்றது. இதனால், பலரும் இவ்விவகாரம் தொடர்பாக கருத்துகளை பகிர்ந்தும் பதிவிட்டும் வருகின்றனர்.
சுய மரியாதையைவிட முக்கியமானது எதுவுமில்லை
மணிமேகலை தனது இன்ஸ்டா பதிவில், “மிகுந்த நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் நான் எப்பொழுதும் எனது 100% முயற்சிகளையும் கடின உழைப்பையும் குக் வித் கோமாளிக்கு கொடுத்திருக்கிறேன். 2019 ஆம் ஆண்டு, நவம்பரில் இருந்து குக் வித் கோமாளி என்னும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது இருந்தே என் உழைப்பைத் தந்திருக்கிறேன்.
ஆனால், சுய மரியாதையைவிட முக்கியமானது எதுவுமில்லை! என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நான் அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறேன். புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுய மரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அதனால் நான் குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து விலகுகிறேன்.
பெண் தொகுப்பாளர் ஆதிக்கம்
இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்தினார். குறிப்பாக தொகுப்பாளராக இருக்கும் ஒருவர் இந்த குக் வித் கோமாளி சீசன் 5ன் படி, நிகழ்ச்சியின் சமையல்காரராக செயல்பட வேண்டும். ஆனால், அவர் அதை அடிக்கடி மறந்து விடுகிறார். வேண்டுமென்றே என்னை வேலையைச் செய்யவிடாமல் தடுத்து, எனது ஆங்கரிங் என்னும் நெறியாள்கையில் குறுக்கிடுகிறார்.
நமது உரிமைகளைக்கேட்பதும், கவலையை எழுப்புவதும்கூட இந்த குக் வித் கோமாளி சீசன் 5ல் குற்றமாகிவிடும். ஆனால், என் மனது எப்போதும் எது சரியானதோ அதற்காக குரல் எழுப்பும். நான் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. பல எதிர்மறை மற்றும் சிலரின் ஆதிக்கம் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் அசல் தன்மையை மறைக்கிறது. இது நான் முன்பு வேலை செய்து மகிழ்ந்த அதே குக் வித் கோமாளி நிகழ்ச்சி அல்ல. எனவே, நான் இனி அதன் பகுதியாக தொடரமாட்டேன் " எனக் குறிப்பிட்டார்.
மணிமேகலை பிக் பாஸ் நிகழ்ச்சியில்?
எனவே, இனிமேல் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை. அவர் குக் வித் கோமாளியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார் என்ற தகவல்கள் வெளியானது.
இந்த சூழலில், லேட்டஸ்ட்டாக ஒரு தகவல் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அதுதான் மணிமேகலை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்யவில்லை என்ற தகவல்.
வாய்ப்புகள் வருகிறதாம்
அதுமட்டும் இல்லை ஜீ தமிழ் தொலைக்காட்சியிலிருந்து சில நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் வருகிறதாம். இதன் காரணமாக, அவர் விஜய் தொலைக்காட்சியிலிருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சிக்குச் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும், மணிமேகலை தொகுத்து வழங்கவுள்ள அடுத்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.